Subscribe to Gizbot

தெரியுமா.? யூஎஸ்பி ஓடிஜி கேபிள்களை இப்படியெல்லாம் கூட யூஸ் பண்ணலாம்.!

Written By:

முதலில் யூஎஸ்பி என்பதின் விரிவாக்கம் என்னவென்பதை கூறிவிடுகிறேன். யூஎஸ்பி (USB) என்பது யூனிவெர்சல் சீரியல் பஸ் (Universal Serial Bus) என்பதின் சுருக்கமாகும்.

சாம்சங் கேலக்ஸி நோட் 8 என்னென்ன சிறப்பம்சங்கள்?

சரி அப்போது யூஎஸ்பி ஒட்ஜி என்கிறார்களே அப்படியென்றால் என்ன.? ஓடிஜி என்றால் ஆன்-தி-கோ என்பதின் சுருக்கமாகும். முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கருதப்படும் இந்த சாதனம் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள விழையும் இரண்டு சாதனங்களை ஒன்றிணைத்து செயல்பட உதவுகிறது.

ரூ.17,900/- முதல் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே7 மேக்ஸ்.!

யூஎஸ்பி ஓடிஜி பொதுவாக உங்கள் சாதனத்தின் செயல்பாடுகளை நீட்டிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு இதன் உதவுடன் ஒரு ஸ்மார்ட்போனில் இருந்து ஒரு பென்ட்ரைவ்தனிற்கு எளிதாக தரவுகளை இடம்பெயர செய்துகொள்ள முடியும்.

ஆனால் நிதர்சனம் என்னவெனில் தரவுகளை மாற்றுவதை விட, யூஎஸ்பி ஓடிஜி-தனை பல வழிகள் பயன்படுத்த முடியும். அதையெல்லாம் வரிசைப்படுத்தினால் "அட.. இதை இதற்கும், இப்படியும் பயன்படுத்தலாமா.?" என்று உங்களின் புருவங்கள் உயரும்.

நோக்கிய 6 இந்தியாவில் ஜூலை 14 ம் தேதி விற்ப்பனைக்கு.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கேம் கண்ட்ரோலர்

கேம் கண்ட்ரோலர்

ஆமாம், அது உண்மை தான். ஓடிஜி கேபிள் உதவியுடன் நீங்கள் எளிதாக கேம் கண்ட்ரோலரை இணைக்க முடியும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு தொடுதிரை மூலம் விளையாடுவதென்பது அவ்வளவு சிறப்பான அனுபவத்தை வழங்குவதில்லை, அதை பெற ஓடிஜி உங்களுக்கு உதவும். பல ஆண்ட்ராய்டு கேம்கள் வெளிப்புற கேம்பேட்தனை ஆதரிக்கின்றன ஆக நீங்கள் ஒரு ஓடிஜி கேபிள் பயன்படுத்தி ஒரு எக்ஸ்டெர்னல் கேம் கண்ட்ரோலரை உருவாக்கி கொள்ள முடியும்.

ஹோஸ்ட் சார்ஜிங்

ஹோஸ்ட் சார்ஜிங்

இது ஸ்மார்ட்போன் பயனர்கள் மிகவும் விரும்பும் செயல்பாடுகளில் ஒன்றாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு விடயம்தான், இரண்டு ஸ்மார்ட்போன்களை ஒரு யூஎஸ்பி மூலம் இணைக்க யூஎஸ்பியை ஹோஸ்ட் செய்திருக்கும் சாதனமானது மற்ற சாதனத்தை சார்ஜ் செய்யத் தொடங்கும். இது அவசரகாலச் சூழலில் உங்களுக்கு உதவக்கூடும். இந்த நுட்பத்துடன், இதே செயல்முறையைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஆண்ட்ராய்டு அல்லாத தொலைபேசிகளையும் கூட சார்ஜ் செய்யலாம். இது வேலை செய்ய, ஹோஸ்ட் சாதனமானது இரண்டாம் நிலை சாதனத்துடன் ஒப்பிடும்போது அதிக சார்ஜ் கொண்டிருக்க வேண்டும்.

கனெக்ட் போர்ட்டபிள் ஹார்ட் டிரைவ்

கனெக்ட் போர்ட்டபிள் ஹார்ட் டிரைவ்

ஒரு ஓடிஜி கேபிள் பயன்படுத்தி உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் யூஎஸ்பி ப்ளாஷ் டிரைவை இணைக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கேபிள் இன் இரண்டாம் துறைமுகத்தில் ப்ளாஷ் டிரைவை செருகி, அதைப் பயன்படுத்த வேண்டும். உங்களுடைய ஆண்ட்ராய்டு போனில் வைக்க இடமில்லாத கோப்புகளை பற்றிய குழப்பமோ, மெமரி பற்றாக்குறை பற்றிய கவலையோ இனி உங்களுக்கு இல்லை.

கனெக்ட் கேமிரா

கனெக்ட் கேமிரா

இது பெரும்பாலும் புகைப்படக்காரர்களுக்கு உதவுகிறது. பல சூழ்நிலைகளில் உள்ளிருக்கும் மடிக்கணினியாய் வெளியே எடுத்து பணியாற்ற முடியாத புகைப்பட இடங்களுக்கு புகைப்படக்காரர்கள் செல்கிறார்கள். எனவே, நீங்கள் உங்கள் கேமிரா, உங்கள் ஸ்மார்ட்போனின் டேட்டா கேபிள் மற்றும் யூஎஸ்பி ஓடிஜி ஆகோலவிகளை பயன்படுத்தி எளிதாக கேமராவுடன் இணைக்க முடியும். இது கேமராவின் நினைவகத்தை அழிக்க உதவுவதால், நீங்கள் அதிகமான படங்களைக் கிளிக் செய்யலாம்.

கனெக்ட் லேன் கேபிள்

கனெக்ட் லேன் கேபிள்

உங்கள் சாதனத்தை லேன் (LAN) கேபிளுடன் இணைக்க யூஎஸ்பி ஓடிஜி-யை பயன்படுத்தலாம் என்பது பெரும்பாலானோர்களுக்கு தெரியாது. உங்களிடம் ஒரு பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் வைஃபை திசைவி இல்லை என்கிற போது இது பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் யூஎஸ்பி கட்டுப்படுத்திக்கு ஒரு லேன் வாங்குவதுடன் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளபடி இணைக்கவும். இப்போது நீங்கள் பிராட்பேண்ட் இணையத்தை நேரடியாக உங்கள் மொபைலில் பயன்படுத்தலாம்.

கனெக்ட் சவுண்ட் கார்ட் அல்லது மைக்ரோ போன்

கனெக்ட் சவுண்ட் கார்ட் அல்லது மைக்ரோ போன்

உங்கள் ஸ்மார்ட்போனின் இன்பில்ட் மைக் போதுமானதாக இல்லாத போது, உயர் தர ஒலிப்பதிவை வழங்க ஒரு உண்மையான ஒலிவாங்கியை இணைக்க முடியும். நீங்கள் ஒரு ஓடிஜி கேபிள் உதவியுடன் உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் சவுண்ட் கார்ட்தனை இணைக்க முடியும். உங்கள் ஜேக் இயங்காத போதெல்லாம், நீங்கள் சவுண்ட் கார்ட்தனை இணைத்து இசையை அனுபவிக்கலாம்.

யூஎஸ்பி கீபோர்ட்

யூஎஸ்பி கீபோர்ட்

ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்தில் எழுதுவதென்பது மிகவும் சலிப்பான ஒரு காரியமாகும். ஏனெனில் திரைகளில் விசைப்பலகை அளவு மிகவும் குறைவாக இருக்கும், மேலும் உங்கள் விரல்கள் நீண்ட செய்திகளை தட்டச்சு செய்வதற்கும், மின்னஞ்சல் எழுதுவதற்கும் சங்கடப்படும். ஓடிஜி தவியுடன், உங்கள் சாதனத்தில் ஒரு கீபோர்டை இணைக்கலாம் அதன் மூலம் வெளிப்புற கட்டுப்பாட்டுகளுக்காக ஆண்ட்ராய்டின் உள்ளமைக்கப்பட்ட அமைப்புகளைப் பயன்படுத்தி அதை கன்பிகரேஷன் செய்யலாம். பின்னர் நீங்கள் வசதியாக உரைகளை அல்லது நீண்ட மின்னஞ்சல்களை கீபோர்ட் உதவியுடன் நீங்கள் எழுதலாம்.

யூஎஸ்பி மவுஸ்

யூஎஸ்பி மவுஸ்

உங்கள் சாதனத்தில் அளவுத்திருத்த (கலிபிரேஷன் ) பிரச்சினைகள் இருந்தால், யூஎஸ்பி மவுஸை இணைப்பது சாத்தியமான தேர்வாக இருக்கலாம். உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியுடன் இணைக்கப்பட்ட ஓடிஜி உடன் மவுஸின் யூஎஸ்பி இணைக்கப்படுவதால் உங்களின் தரவை நீங்கள் எளிமையாக மீட்டெடுக்கலாம் குறிப்பாக உங்கள் தொடுதிரை சேதமடைந்திருக்கும் போதும் இதை சிறப்பாக செயல்படும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Here Are Top Uses of OTG Cable That You Probably Don’t Know. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot