ரூ.17,900/- முதல் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே7 மேக்ஸ்.!

Written By:

சாம்சங் நிறுவனம் இன்று அதன் சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ மற்றும் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் முறையே ரூ.20,900/- மற்றும் ரூ.17,900/- என்ற விலைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு தங்கம் மற்றும் கருப்பு நிறம் விருப்பத்தில் கிடைக்கும். கேலக்ஸி ஜே7 மேக்ஸ் ஜூன் 20, 2017 தொடங்கி சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும். கேலக்ஸி ஜே7 ப்ரோ ஜூலை மாதத்தின் முதல் நடுப்பகுதியில் விற்பனை செய்யபப்டும். ஸ்மார்ட்போன்களுடன் சேர்ந்து, நிறுவனம் சாம்சங் பே மினி கட்டண தீர்வையும் துவக்கியுள்ளது. பே மினி ஆனது எல்லா எச்டி டிஸ்ப்ளே ஆதரவு வழங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும், ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
செயலி

செயலி

சாம்சங் கேலக்ஸி ஜே7 ப்ரோ கருவியானது ஒரு உலோக உடலும் 5.5 அங்குல முழு எச்டி (1280x1920 பிக்ஸல்) சூப்பர் அமோ எல்இடி டிஸ்ப்ளேவும் கொண்டுள்ளது. இது 3 ஜிபி ரேம் ஜோடியாக மாலி டி830 ஜிபியூ உடனான 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சிஸிநோஸ் 7870 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

கேலக்ஸி ஜே7 ப்ரோ ஆனது 64 ஜிபி உள் நினைவகத்துடன் வருகிறது, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 256 ஜிபி வரை மேலும் மெமரி விரிவாக்கக்கூடியது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்கொண்டு இயங்குகிறது மற்றும் ஒரு 3,600 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமரா துறையில் கேலக்ஸி ஜே7 ப்ரோ பின்புறம் மற்றும் முன்பக்கம் 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. கேலக்ஸி ஜே7 ப்ரோ அளவீட்டில் 152.4 × 74.7 × 7.9 மிமீ கொண்டுள்ளது. கேலக்ஸி ஜே7 ப்ரோ ஹாம் பொத்தானில் கீழ் பதிக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

மறுபுறம், சாம்சங் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் 1920x1080 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்ட 5.7-அங்குல முழு எச்டி டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியா டெக் எம்டி6757வி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மேலும் மெமரி விரிவாக்கக்கூடியது.

கேமரா

கேமரா

கேமரா துறையில் கேலக்ஸி ஜே7 மேக்ஸ் பின்புறம் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா இரண்டும் அதே எல்இடி பிரகாச ஒளி கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் 3300எம்ஏஎச்பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஸ்மார்ட் க்ளோ 2.0, சாம்சங் பே மினி, 4ஜி வோல்ட், இரட்டை சிம் மற்றும் அனைத்து அடிப்படை இணைப்பு செயல்பாடுகளையும் வழங்குகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Samsung Galaxy J7 Max and Galaxy J7 Pro launched in India, price starts 17,900. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot