Home
Mobile

முழுசா ரூ.46,900 லாபம்.. Amazon Vs Flipkart Sale.. இரண்டில் எது iPhone 14, 13, 12-ஐ கம்மி விலைக்கு விக்குது?

ஆப்பிளின் புதிய ஐபோன் 15 சீரீஸ் அறிமுகமான நாளிலிருந்து பழைய ஐபோன் மாடல்கள் மீது, அதவாது ஐபோன் 14, ஐபோன் 13, ஐபோன் 12 போன்ற மாடல்கள் மீது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சலுகைகள், தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

குறிப்பாக விரைவில் தொடங்கவிருக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ஐபோன் 12 (iPhone 12) மாடலானது முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விலை குறைப்பை பெறும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Amazon Vs Flipkart: எது iPhone 14, 13, 12-ஐ கம்மி விலைக்கு விக்குது?

அதேபோல ஐபோன் 13 (iPhone 13) மற்றும் ஐபோன் 14 (iPhone 14) மாடல்களின் விலைகளும் கூட கடுமையாக குறைக்கப்படும். ஒட்டுமொத்தமாக ஒரு புதிய ஐபோனை வாங்க, இதைவிட ஒரு அற்புதமான மற்றும் லாபகரமான வாய்ப்பு இனி கிடைக்குமா என்று தெரியாது.

Amazon Vs Flipkart Sale.. எந்தெந்த ஐபோன் மாடல்கள் என்னென்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, ​​ஐபோன் 12 ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த அக்டோபர் 2020இல் ரூ.79,900 க்கு அறிமுகமானது.

தகுதியான பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ஐபோன் 12-ன் விலையை மேலும் ரூ.3,000 குறைக்கலாம்; எக்ஸ்சேன்ஜ் ஆஃபரின்கீழ் மேலும் ரூ.3,000 தள்ளுபடி கிடைக்கும். இப்படியாக ஐபோன் 12-ன் இறுதி விலையை ரூ.32,999-ஆக குறைக்க முடியும். அதாவது அசல் விலையுடன் ஒப்பிடும் போது முழுதாக ரூ.46,900 லாபம் பார்க்க முடியும்.

ஒருவேளை நீங்கள் ஐபோன் 13-ஐ வாங்க விரும்பினால்.. அதை அமேசான் இந்தியா வழியாக வாங்குவதே புத்திசாலித்தனம். ஏனென்றால் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் இது ரூ.3X, XX9 க்கு கிடைக்கும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது இது ரூ.40,000 க்குள் என்கிற விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

நிச்சயம் இது ஐபோன் 13 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகவே இருக்கும். ஐபோன் 13 மீதான நேரடி தள்ளுபடி தவிர்த்து, எஸ்பிஐ பேங்க் கார்டுகளுக்கு தள்ளுபடி (SBI Bank Card Offer) மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆபர் (Exchange Offer) போன்ற சலுகைகளும் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் ஐபோன் 14 அல்லது ஐபோன் 14 பிளஸை வாங்க விரும்பினால்.. இவ்விரு மாடல்களுமே அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களிலும் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படும். இருப்பினும் சரியான விலை விவரங்களை இரண்டு தளங்களுமே இன்னும் அறிவிக்கவில்லை.

இருப்பினும் இவற்றின் விலைகள் முறையே ரூ.50,000 க்கு கீழ் மற்றும் ரூ.60,000 க்கு கீழ் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்கள் கடந்த செப்டம்பர் 2022ல் முறையே ரூ.79,900 மற்றும் ரூ.89,900 க்கு அறிமுகம் செய்யப்பட்டன.

பிளிப்கார்ட் மற்றும் அமேசான் விற்பனை எப்போது தொடங்கும்? பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையானது (Flipkart Big Billion Days sale) வருகிற அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மறுகையில் உள்ள அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது (Amazon Great Indian Festival sale) பிளிப்கார்ட்டின் சிறப்பு விற்பனை தொடங்கும் அதே நாளில், அதாவது அக்.8 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது எப்போது முடிவடையும் என்கிற தேதியை அமேசான் இன்னும் அறிவிக்கவில்லை.

இவ்விரு சிறப்பு விற்பனைகளிலுமே ஐபோன்கள் மீது மட்டுமே சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்குமா என்று கேட்டால்.. நிச்சயம் இல்லை. ஒன்பிளஸ், சாம்சங், மோட்டோரோலா, நத்திங் உட்பட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர்கள் கிடைக்கும். அது தொடர்பான கட்டுரைகளை படிக்க இங்கே அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Vs Amazon Sale iPhone 14 iPhone 14 Plus iPhone 13 and iPhone 12 Offers Discounts Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X