ஆரம்ப தேதி அறிவிப்பு! தள்ளுபடியில் தத்தளிக்கும் Flipkart! Pixel மீது ரூ.23500, Moto மீது ரூ.10000! இதோ லிஸ்ட்!
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 8 வருகிற அக்.4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதால், அதே வாரத்தில் நடக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது பிக்சல் 7 மீது அபார தள்ளுபடிகள் அறிவிக்கப்படலாம் என்று நாங்கள் யூகித்திருந்தோம்.
எதிர்பார்த்தபடியே பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, பிக்சல் 7 மீது முழுதாக ரூ.23,500 தள்ளுபடி கிடைக்குமென்று பிளிப்கார்ட் உறுதிப்படுத்தியுள்ளது. பிக்சல் 7-ன் அசல் விலை என்ன? ஆஃபர் விலை என்ன? இந்த விற்பனை எப்போது தொடங்கி எப்போது முடியும்? வேறு என்னென்ன போன்கள் மீது சலுகைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

பிளிப்கார்ட்டின் கூற்றுப்படி, பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது கூகுள் பிக்சல் 7 ரூ.36,499 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 7-ன் அசல் விலை (அறிமுக விலை) ரூ.59,999 ஆகும். அதாவது இது முழுதாக ரூ.23,500 என்கிற தள்ளுபடியை பெறவுள்ளது.
மேலும் ரூ.36,499 என்பது பிக்சல் 7ஏ (Pixel 7a) மாடலின் விலையை விட மிகவும் மலிவான விலை நிர்ணயமாகும். நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 7ஏ தற்போது ரூ.43,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக பிக்சல் 7-வை மிகவும் மலிவான விலைக்கு வாங்க.. பிக் பில்லியன் டேஸ் விற்பனையை விட சிறந்த வாய்ப்பு கிடைக்காது!
ஒருவேளை நீங்கள் இப்போதே பிக்சல் 7-ஐ வாங்க விரும்பினால், இதே பிளிப்கார்ட் வலைத்தளத்தில் அது ரூ.41,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது வரப்போகும் ஆஃபர் விலையை விட ரூ.7500 அதிகம் செலுத்த வேண்டி இருக்கும். ஆக பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்காக காத்திருப்பதே புத்திசாலித்தனம்!
பிளிப்கார்ட் பிக் பில்லியன்ஸ் டேஸ் விற்பனை (Flipkart Big Billion Days Sale) எப்போது தொடங்கும்? இந்த சிறப்பு விற்பனையானது அக்.8 ஆம் தேதி தொடங்கி அக்.15 ஆம் தேதி முடிவடையும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்களில் மொபைல் போன்கள் மீது இதுவரை காணாத தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிளிப்கார்ட் விற்பனையின் போது பிக்சல் 7 தவிர்த்து வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்? சாம்சங் கேலக்ஸி எஃப்13 (Samsung Galaxy F13) ரூ.14,999 க்கு பதிலாக ரூ,9,199 க்கு வாங்க கிடைக்கும். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 7 (Infinix Smart 7) ரூ.9,999 க்கு பதிலாக ரூ.5393 க்கு வாங்க கிடைக்கும்.
ஒப்போ ஏ17கே (OPPO A17k) ரூ.10,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கும். ரியல்மி சி55 (Realme C55) ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும். மோட்டோ ஜி32 (Moto G32) ரூ.18,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும். விவோ வி29இ (Vivo V29e) ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.
போக்கோ எம்5 (Poco M5) ரூ.15,999 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கும். நத்திங் போன் 1 (Nothing Phone 1) ரூ.37,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும். இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G) ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கும்.
ரெட்மி நோட் 12 ரூ.18,999 க்கு பதிலாக ரூ.10,799 க்கு வாங்க கிடைக்கும். ரியல்மி 10 ப்ரோ 5ஜி (Realme 10 Pro 5G) ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும். மோட்டோ ஜி14 (Moto G14) ரூ.12,999 க்கு பதிலாக ரூ.8,099 க்கு வாங்க கிடைக்கும். ஒப்போ ரெனோ 10 ப்ரோ 5ஜி ரூ.44,999 க்கு பதிலாக ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








