ஆரம்ப தேதியை அறிவித்த Amazon.. OnePlus, iPhone, Realme, Moto என பல போன்கள் மீது முரட்டு ஆஃபர்.. இதோ லிஸ்ட்!
பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனையானது வருகிற அக்டோபர் 8 முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரையிலாக நடைபெறுமென்று அறிவிக்கப்பட்ட வேகத்தில், அமேசான் இந்தியா வலைத்தளமானது அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எப்போது தொடங்கும் என்கிற தேதியை அறிவித்துள்ளது.
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எப்போது தொடங்கும்? ஒவ்வொரு ஆண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பண்டிகை கால விற்பனையின் கீழ் ஒன்பிளஸ், ஐபோன் முதல் ரியல்மி, மோட்டோரோலா வரையிலாக என்னென்ன என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும்? இதோ விவரங்கள்:

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எப்போது தொடங்கும்? இது வருகிற அக்.8 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டையும் போலவே, ப்ரைம் மெம்பர்கள் இந்த சிறப்பு விற்பனைக்கான ஆரம்ப அணுகலை ஒரு நாளுக்கு முன்பாகவே, அதாவது அக்.7 ஆம் தேதி நள்ளிரவு முதலே பெறுவார்கள்.
இந்த ஆண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது (Amazon Great Indian Festival Sale ) சாம்சங் மற்றும் இன்டெல் உடன் கூட்டு சேர்ந்து நடத்தப்படுவதால் சாம்சங் தயாரிப்புகள் மற்றும் இன்டெல்-ப்ராசஸர் அடிப்படையிலான லேப்டாப்கள் மீது நினைத்து பார்க்காத தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கும்? ஆரம்ப தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நேரலையில் உள்ள அமேசான் பக்கத்தின்படி, பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடி, பெஸ்ட் செல்லிங் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி மற்றும் பட்ஜெட் விலையில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி போன்ற பிரிவுகளில் பல ஸ்மார்ட்போன்கள் பட்டியலிப்பட்டுள்ளன.
பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மீது தவிர்க்க முடியாத தள்ளுபடி என்கிற பிரிவில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G), ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11R 5G), ஐபோன் 13 (iPhone 13), ஐக்யூ நியோ 7 ப்ரோ 5ஜி (iQOO Neo 7 Pro 5G) போன்ற மாடல்கள் பட்டியலிப்பட்டுள்ளன
அதே பிரிவில் மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra), ஒன்பிளஸ் நோர்ட் 3 5ஜி (OnePlus Nord 3 5G) ரியல்மி நார்சோ 60 ப்ரோ (Realme Narzo 60 Pro) போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களும் பட்டியலிப்பட்டு உள்ளன.
பெஸ்ட் செல்லிங் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G), ஒன்பிளஸ் நோர்ட் 3 சிஇ 5ஜி (OnePlus Nord 3 CE 5G), ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme Narzo 60 5G), ஐக்யூ இஸட்7எஸ் (iQOO Z7s), ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G) போன்ற மாடல்கள் மீது தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே பிரிவில் சாம்சங் கேலக்ஸி எம்14 (Samsung Galaxy M14 5G), டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G), ஒப்போ ஏ 78 5ஜி (Oppo A78 5G) போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களும் பட்டியலிடப்பட்டு உள்ளன.
பட்ஜெட் விலையில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி என்கிற பிரிவில், சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13), ரெட்மி ஏ2 (Redmi A2), ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53), ஐக்யூ இஸட்6 லைட் 5ஜி (iQoo Z6 Lite 5G) போன்ற மாடல்கள் மீது தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே பிரிவில் சாம்சங் கேலக்ஸி எம்4 (Samsung Galaxy M04), ரெட்மி 12சி (Redmi 12C), ஐடெல் ஏ60எஸ் (Itel A60S), லாவா அக்னி 2 5ஜி (Lava Agni 2 5G), ரியல்மி நார்சோ 50ஐ (Realme Narzo 50i) லாவா பிளேஸ் 5ஜி ( Lava Blaze 5G) போன்ற ஸ்மார்ட்போன்கள் பட்டியலிப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








