பாதுகாப்பான போன் அழைப்புகளுக்கு உதவும் 5 ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப்ஸ்கள்

By Siva
|

தற்போதைய 21ஆம் நூற்றாண்டி நவீன தொழில்நுட்ப உலகில் பாதுகாப்பாக போன் பேசுவது என்பது கிட்டத்தட்ட இயலாத காரியமாகவே உள்ளது. நவீன கருவிகள் மூலம் நாம் யாரிடம் என்ன பேசுகிறோம், எப்போது பேசினோம், ஏன் பேசினோம் என்பதை மிக எளிதில் கண்டுபிடித்து விடுகின்றனர்.

பாதுகாப்பான போன் அழைப்புகளுக்கு உதவும் 5 ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப்ஸ்

இதற்கொரு முடிவு கட்ட வேண்டும் என்று பலர் நினைத்து வரும் நிலையில் அள்ள அள்ள குறையாத அமுதசுரபி போன்று பலவிதமான ஆப்களை கொடுத்து கொண்டிருக்கும் நமது டெவலப்பர்கள் இதற்கும் ஒருசில ஆப்ஸ்களை கண்டு பிடித்துள்ளனர். இந்த ஆப்ஸ்கள் பயன்படுத்தி போன் கால் பேசினால் பாதுகாப்புக்கு பஞ்சமில்லை என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

4ஜி வோல்ட் உடன் 'களத்தில் குதித்த' லாவா எக்ஸ்28-ன் சிறப்பம்சங்கள்..!

இந்த ஆப்கள் மூலம் பேசப்படும் அழைப்புகளை எந்த டெலிகாம் நிறுவனமும் கண்டுபிடிக்கவும், ரிகார்ட் செய்யவும் முடியாது என்பதுதான் இதன் சிறப்பு. அதே நேரத்தில் இந்த ஆப்ஸ்கள் தீவிரவாதிகளிடம் சிக்கினால் அதோகதிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலவச வாய்ஸ் கால்கள் / ரோமிங் வழங்கும் 7 ஜியோ திட்டங்கள், என்ன விலை.?

அதே நேரத்தில் ஒரு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், காதலன் காதலிகள், காவல்துறை அதிகாரிகள், சட்ட வல்லுனர்கள் ஆகியோர் இந்த பாதுகாப்பான ஆப்ஸ்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு வரும், வரவிருக்கும் பல்வேறு பிரச்சனைகளை தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

இனி இந்த ஆப்ஸ்கள் எவை எவை என்று பார்ப்போமா?

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரெட்போன்:

ரெட்போன்:

ரெட்போன் ஆப் என்று கூறப்படும் இந்த ஆப் உங்களுக்கு இலவச அழைப்புகள் சேவையை வழங்குவதுடன் மிகுந்த பாதுகாப்பையும் கொடுக்கின்றது. நீங்கள், உங்கள் எதிராளியும் தவிர வேறு யாரும் உங்கள் உரையாடலை கேட்கவே முடியாது. பாதுகாப்புக்கு என ZRTP உத்தரவாதத்தையும் இந்த ஆப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆப்-ஐ நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்துவிட்ட உடன் மிக எளிதாக லாகின் விபரங்களை பகிர்ந்து வாடிக்கையாளராகி விடலாம். இந்த ஆப் உங்களை பற்றி வேறு எந்த விபரங்களையும் கேட்காது என்பது இதன் சிறப்பு

சிம்லர் ஆப் (Simlar app)

சிம்லர் ஆப் (Simlar app)

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு என வடிவமைக்கப்பட்ட இந்த ஆப், ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக பேச உதவு மற்றொரு ஆப் ஆகும். பயனாளிகளுக்கு மிகுந்த பயனை தரும் இந்த ஆப்-ஐ மில்லியன் கணக்கானோர் இன்ஸால் செய்து பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஐபோனில் இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து புது அனுபவத்தை உணருங்கள்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வைப்பர் (Wiper)

வைப்பர் (Wiper)

வைப்பர் ஆப்-ஐ டவுன்லோடு இன்ஸ்டால் செய்தால் எண்ணிலடங்கா பாதுகாப்பான அழைப்புகளை அழைக்கவும் பெறவும் செய்யலாம். மேலும் இந்த ஆப், பெசுவதற்கு மட்டுமின்றி ஏராளமான மெசேஜ்களை அனுப்பவும் உதவுகிறது. மேலும் நீங்கள் அனுப்பிய மெசேஜ்களை வைப்பர் சர்வரில் இருந்து நீங்களே டெலிட் செய்யும் வசதி உள்ளதால் உங்கள் மெசேஜ் வேறு யாருக்கேனும் சென்றுவிடுமோ என்ற பயம் தேவையில்லை.

ஜொய்ப்பர் (Zoiper)

ஜொய்ப்பர் (Zoiper)

இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மேலும் இந்த ஆப் உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து மட்டுமின்றி விண்டோஸ் மற்றும் லீனக்ஸ் ஓஎஸ் உள்ள டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் இருந்தும் அழைப்புகளை பெறலாம்.

கவர் மி (CoverMe)

கவர் மி (CoverMe)

கவர்மி என்ற ஆப் ஸ்மார்ட்போன் பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த ஆப் உங்களுக்கு பாதுகாப்பான அழைப்புகளை பெற உதவுவது மட்டுமின்றி மேசேஜ், ஃபைல் மற்றும் பலவிதமானவற்றையும் பாதுகாக்கின்றது. இந்த ஆப்-ஐ பயன்படுத்த தொடங்கிவிட்டால் வேறு எந்த ஆப்-ஐயும் பயன்படுத்த மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Want to keep the conversation with your friend secure? Here're 5 best phone call encryption apps for the Android and iPhone users to encrypt your call details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X