Home
Apps

ரூ.1250க்கு ஜியோ சேவைகளில் இத்தனை அம்சங்களா.??

By Meganathan

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைக் கட்டணங்கள் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இந்தியாவில் சேவை வழங்கி வரும் இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன. மிகக்குறைந்த விலையில் 4ஜி சேவைகளை வழங்குவதாக அறிவித்ததோடு இந்த ஆண்டின் கடைசி நாள் வரை அனைத்துச் சேவைகளையும் இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்தது.

ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ஜியோ சேவைகளை அறிவித்த ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ சேவைகளுடன் பல்வேறு கூடுதல் சேவைகளையும் அறிவித்தார். அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆப்ஸ் சந்தா அமைந்தது. அனைத்துச் சேவைகளுடனும் ரூ.1,250 மதிப்பிலான ஜியோ ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வியப்பு

வியப்பு

ஆண்டு ஒன்றிற்கு ஜியோ ஆப் சந்தாவின் விலை ரூ.19,000 ஆகும், இவை அனைத்தும் டிசம்பர் 31, 2016 வரை இலவசமாக வழங்கப்படுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்படி இந்த ஆப்ஸ்களில் என்ன தான் இருக்கின்றது என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

மைஜியோ ஆப்

மைஜியோ ஆப்

ஜியோ சிம் கார்டினை ஆக்டிவேட் செய்ய முதலில் மைஜியோ ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும். இந்தச் செயலியின் மூலம் மற்ற ஜியோ செயலிகளை இயக்க முடியும் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோ ஆன் டிமான்டு

ஜியோ ஆன் டிமான்டு

இந்தச் செயலியை பயன்படுத்தி திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மியூசிக் வீடியோ, டிரெய்லர் போன்றவற்றை பல்வேறு மொழிகளில் வழங்குகின்றது.

ஜியோ பீட்ஸ்

ஜியோ பீட்ஸ்

சுமார் 20 இந்திய மொழிகளில் எச்டி தரத்திலான பாடல்களை மிகத் துல்லியமாக அனுபவிக்க ஜியோ பீட்ஸ் வழி செய்கின்றது.

ஜியோமேக்ஸ்

ஜியோமேக்ஸ்

பல்வேறு மொழிகளில் இருக்கும் பத்திரிகைகளை வழங்கும் ஒற்றைத் தளம் தான் ஜியோமேக்ஸ் செயலி.

ஜியோ எக்ஸ்பிரஸ்நியூஸ்

ஜியோ எக்ஸ்பிரஸ்நியூஸ்

உலக நிகழ்வுகளை நேரலையில் உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவும் ஒற்றைச் செயலி தான் ஜியோ எக்ஸ்பிரஸ் நியூஸ் ஆப்.

ஜியோ சாட்

ஜியோ சாட்

அதிவேக குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்வது, எச்டி தரத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கான்ஃபிரென்சிங் செய்ய உதவும் ஆப் தான் ஜியோ சாட்.

ஜியோ டிரைவ்

ஜியோ டிரைவ்

கூகுள் டிரைவ் மற்றும் ஐகிளவுட் போன்று அனைத்துத் தரவுகளையும் சேமித்துக் கொள்ள வழி செய்யும் செயலியாக ஜியோ டிரைவ் இருக்கின்றது.

ஜியோ ஜாயின்

ஜியோ ஜாயின்

வோல்ட்இ வசதி கொண்ட இந்தச் செயலியின் மூலம் எச்டி வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள இந்தச் செயலி வழி செய்யும்.

ஜியோ மனி

ஜியோ மனி

ஆப்பிள் பே மற்றும் கூகுள் பே போன்றதொரு ரிலையன்ஸ் சேவை தான் ஜியோ மனி. இந்தச் சேவையை கொண்டு பண பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

ஜியோ செக்யூரிட்டி

ஜியோ செக்யூரிட்டி

இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டிவைரஸ் செயலியாகும். கருவியை வைரஸ், மால்வேர் மற்றும் ஃபர்ம்வேர்களில் இருந்து பாதுகாக்க ஜியோ செய்கயூரிட்டி சிறப்பானதாக இருக்கின்றது.

ஜியோ நெட் மற்றும் பிளே

ஜியோ நெட் மற்றும் பிளே

இது தனிப்பிட்ட ஹாட்ஸ்பாட் வசதியினை வழங்கும். ஜியோ பிளே என்பது மினி டிடிஎச் சேவையாகும். இதில் சுமார் 300 தொலைக்காட்சி சேனல் மற்றும் 30க்கும் அதிகமான எச்டி தரமுள்ள சேனல்களை பார்க்க முடியும்.

மை ஜியோ

மை ஜியோ

பல்வேறு ஜியோ கணக்குகளை கையாள உதவும் செயலியாக மை ஜியோ இருக்கின்றது. பல்வேறு சேவைகளை ஒற்றைச் சந்தா மூலம் ரிலையன்ஸ் வழங்குகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
What’s in Jio Apps at Rs 1,250 for users Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X