சாம்சங் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பம் 5 மடங்கு வேகமான வைபையை கொடுக்கும்

Posted by:

சாம்சங் நிறுவனம் கண்டறிந்திருக்கும் புதிய வைபை தொழில்நுட்பம் மூலம் எந்த வகை தகவல்களையும் 5 மடங்கு வேகத்தில் பறிமாற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 ஜிகாஹெர்ட்ஸ் வைபை தொழில்நுட்பம் கொண்டு குறைந்தபட்சம் 3 நொடிகளுக்குள் 1 ஜிபி படத்தை பறிமாற முடியும் என்றும் எஹ்டி வீடியோக்களை ரியல் டைமில் ஸ்டிரீம் செய்ய முடியும் என்பதோடு மற்ற வைபைக்களின் வேகத்தை விட 10 மடங்கு வேகத்தில் இது செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

5 மடங்கு வேகத்தில் இயங்கும் சாம்சங் நிறுவனத்தின் புதிய வைபை

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கருவிகளில் பல புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்பதோடு எதிர்கால வளர்ச்சி தற்சமயம் வைபை தொழில்நுட்பத்தில் எட்டப்பட்டிருப்பதாக சாம்சங் நிறுவனத்தின் கிம் சங் யாங் தெரிவித்தார்.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆப்பிள் மற்றும் சீன நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள சாம்சங் நிறுவனம் 14.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் புதிய மொபைல்கள் தேக்கமடைந்திருப்பதால் காலாண்டு லாபம் 60% சரிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 ஜிகாஹெர்ட்ஸ் வைபை தொழில்நுட்பத்தின் வனிக மயமாக்கும் வழிமுறைகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிறைவடையும் பட்சத்தில் புதிய வைபை தொழில்நுட்பத்தை பல புதிய கருவிகளில் அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம். மேலும் ஆடியோ, வீடியோ, மருத்துவ சாதனங்கள் மற்றும் தொலைதொடர்பு சாதனங்களிலும் இந்த தொழில்நுட்பம் அமல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Samsung's New Wifi Technology works Five times Faster than other Devices. 60 GHz WiFi will speed upto 10 times faster than other devices.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்