ஃபேஸ்புக் வீடியோவை ஸ்ட்ரீம் செய்து டிவியில் பார்ப்பது எப்படி?

By Siva
|

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களுக்காக புதுசு புதுசாக யோசித்து பல சலுகைகளை வழங்கி வருகின்றது. இவற்றில் ஒன்றுதான் ஃபேஸ்புக் வீடியோ. இதில் நேரை வீடியோ, வீடியோ டவுன்லோடு ஆகிய ஆப்சன்கள் இருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.

ஃபேஸ்புக் வீடியோவை ஸ்ட்ரீம் செய்து டிவியில் பார்ப்பது எப்படி?

உங்கள் ந்ண்பர்களிடம் இருந்து உங்களுக்கு அனுப்பட்ட வீடியோவில் பர்சனல் விஷயங்களோ, அல்லது சமையல் குறிப்புகளோ அல்லது தேர்தல் உள்ளிட்ட சுடச்சுட செய்திகளோ இருக்கும். அவற்றை வீடியோ வடிவில் நீங்கள் ஒவ்வொரு நாளும் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பீர்கள்.

மோட்டோ ஜி வெச்சிருக்கீங்களா, இது எல்லாம் தெரியுமா?

இந்த ஃபேஸ்புக் அடுத்த நிலைக்கு இந்த வீடியோவை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் இருந்து மட்டும் பார்க்கும்படியாக இருக்கும் இந்த வீடியோவை இனி நீங்கள் டிவியிலும் அதாவது பெரிய ஸ்க்ரீனிலும் பார்க்கலாம்.

ஃபேஸ்புக் வீடியோவை ஸ்ட்ரீம் செய்து டிவியில் பார்ப்பது எப்படி?

ஆப்பிள் டிவி அல்லது கூகுள் குரோம்கேஸ்ட் டிவிக்கள் ஃபேஸ்புக் வீடியோவை பார்த்து மகிழும் வசதியை ஃபேஸ்புக் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுத்துள்ளது.

இந்த வசதியை பெற உங்களுக்கு என்னென்ன தேவை தெரியுமா?

ஃபேஸ்புக் பிளாக்-இல் குறிப்பிட்டுள்ள குறிப்புகளின்படி இந்த வசதியை அனுபவிக்க உங்களிடம் ஒரு ஆப்பிள் டிவி அல்லது ஏர்ப்ளே பொருந்தும் வசதி கொண்ட உபகரணம், குரோம்கேஸ்ட் அல்லது கூகுள்கேஸ்ட் பொருந்தும் வசதி கொண்ட ஐ.ஓ.எஸ் உபகரணம் அல்லது வெப் பிரெளசர் ஆகியவை இருக்க வேண்டும். மேற்கண்ட வசதிகள் இருந்தால் உங்கள் ஃபேஸ்புக் வீடியோவை நீங்கள் பெரிய ஸ்க்ரீனில் பார்த்து மகிழலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபேஸ்புக் வீடியோவை ஸ்ட்ரீம் செய்து டிவியில் பார்ப்பது எப்படி?

ஃபேஸ்புக் வீடியோவை டிவியில் பார்க்க நீங்கள் கடைபிடிக்க வேண்டியது இந்த நான்கு ஸ்டெப்புக்கள்தான்:

படி-1. முதலில் நீங்கள் பெரிய ஸ்க்ரீனில் பார்க்க வேண்டிய வீடியோவை உங்கள் மொபைல் போனில் இருந்தோ அல்லது டெக்ஸ்டாப்பில் இருந்தோ தேர்வு செய்ய வேண்டும்

படி-2. வலது மேல்புறம் உள்ள டிவி சிம்பலை க்ளிக் செய்ய வேண்டும்.

படி-3. வீடியோவை ஸ்ட்ரீம் செய்ய வேண்டிய டிவைஸை நீங்கள் செலக்ட் செய்ய வேண்டும்

படி-4. அப்புறம் என்ன நீங்கள் தற்போது பெரிய ஸ்க்ரீனில் வீடியோவை பார்த்து மகிழலாம்.

வேறு என்ன வசதி இருக்கின்றது தெரியுமா?

நீங்கள் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வேறு வீடியோவை பார்க்க வேண்டுமானால் ஸ்க்ரோலிங் செய்து விரும்பும் வீடியோவை பார்க்கலாம். அதுமட்டுமின்றி நேரடி வீடியோவை பார்த்து கொண்டிருக்கும்போது அதில் நீங்களும் உரையாடலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Facebook has rolled out the ability to stream videos from the social network to your TV through devices like Google Chromecast and Apple TV.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X