ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் ஆப் இல்லாமல் ஃபேஸ்புக்கை ஒப்பன் செய்வது எப்படி?

By Siva
|

முன்பெல்லாம் காலையில் தூங்கி எழுந்தவுடன் செய்தித்தாள்களை சுமார் ஒரு மணி நேரம் புரட்டுவோம். அப்போதுதான் அன்றைய முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது காலையில் எழுந்ததும் அனைவரும் செய்தியை பார்க்க ஒப்பன் செய்வது ஃபேஸ்புக்கைத்தான். ஃபேஸ்புக் பயனாளிகள் அந்த அளவுக்கு சுடச்சுட செய்திகளை 24 மணி நேரமும் தந்து கொண்டிருப்பார்கள்.

ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் ஆப் இல்லாமல் ஃபேஸ்புக்கை ஒப்பன் செய்வது

சிக்கல் செய்யும் ஜியோ சிம், 'அசால்ட்' ஆக சரிசெய்வது எப்படி..?

செய்திகள் மட்டுமின்றி நமது நண்பர்களின் பிறந்த நாளையும் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டியதையும் ஃபேஸ்புக் அன்றாடம் நமக்கு ஞாபகப்படுத்தி வருகிறது. ஆனால் இவையெல்லாம் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஃபேஸ்புக் ஆப்-ஐ ஓப்பன் செய்யாமலேயே உங்களுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுகுறித்து தற்போது பார்ப்போம்,

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக்

இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக்

உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து *325# என்று டைப் செய்தால் உங்களுக்கு ஒரு வெல்கம் மெசேஜ் வரும். அதில் உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் விரைவில் நீங்கள் ஃபேஸ்புக்கை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கும். இந்நிலையில் இந்த மெசேஜில் இருந்து நீங்கள் வெளியே வந்த பின்னர் ஃபேஸ்புக்கில் லாகின் செய்யும் ஆப்சன் வரும். அதன் பின்னர் நீங்கள் இண்டர்நெட் கனெக்சன் இல்லாமலேயே ஃபேஸ்புக்கை இதன் மூலம் பயன்படுத்தலாம்

ஃபேஸ்புக் பிறந்தநாள்கள்

ஃபேஸ்புக் பிறந்தநாள்கள்

ஃபேஸ்புக் பிறந்த நாளூக்காக ஏகப்பட்ட ஆப்ஸ்கள் உலவி வருகின்றன. கூகுள் காலண்டரிலும் ஃபேஸ்புக் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். ஃபேஸ்புக் பிறந்த நாள் URL-ஐ காப்பி செய்து, கூகுள் காலண்டரை ஓப்பன் செய்து அதில் உள்ள டிராப் டவுனில் மற்றவை என்பதில் இந்த URL-ஐ பேஸ்ட் செய்தால் போதும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஈவண்ட் இன்விடேஷனையும் பயன்படுத்தலாம்

ஈவண்ட் இன்விடேஷனையும் பயன்படுத்தலாம்

முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் தேதிகளை உங்களால் ஞாபகப்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். இதுபோன்ற நேரங்களில் ஃபேஸ்புக்கில் வலதுபுறம் உள்ள ஈவண்ட்ஸ் என்ற ஆப்சனை க்ளிக் செய்து அதில் உங்களது முக்கிய நிகழ்ச்சிகளின் தேதிகளை பதிவு செய்துவிட்டால் ஃபேஸ்புக் உங்களுக்கு மிகச்சரியாக ஞாபகப்படுத்தும்

காண்டாக்ட்களை இம்போர்ட் செய்யலாம்

காண்டாக்ட்களை இம்போர்ட் செய்யலாம்

ஃபேஸ்புக்கில் உள்ள காண்டாக்ட்களை இம்போர் செய்வதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து settings- accounts - add an account- Facebook credentials-‘Sync' ஆப்சன் சென்றால் போதும்

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபேஸ்புக் தகவல்களை பேக்கப் செய்யலாமா?

ஃபேஸ்புக் தகவல்களை பேக்கப் செய்யலாமா?

ஃபேஸ்புக்கில் உள்ள முக்கியமானவற்றை நீங்கள் பேக்கப் செய்ய வேண்டும் என்றால் பயர்பாக்ஸில் ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்து ஆர்ச்சிவ் ஃபேஸ்புக்கை அணுகினால் போதும்

ஃபேஸ்புக் சேட் காண்டாக்ட்களை எப்படி பெறுவது?

ஃபேஸ்புக் சேட் காண்டாக்ட்களை எப்படி பெறுவது?

ஃபேஸ்புக்கில் உள்ள சேட் காண்டாக்ட்களை பெறுவதற்காகவே ஏகப்பட்ட ஆப்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் Adium, Trillan மற்றும் பல ஆப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் சேட் காண்டாக்ட்களை பெற்று கொள்ளலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஹிஸ்ட்ரியை சேமிக்க வேண்டுமா?

ஹிஸ்ட்ரியை சேமிக்க வேண்டுமா?

நீங்கள் சேட் செய்தவற்றை அல்லது போட்ட ஸ்டேட்டஸ்களின் ஹிஸ்ட்ரி உங்களுக்கு தேவையென்றால் இதற்கென தற்போது உள்ள அனைத்து பிரெளசர்களிலும் எக்ஸ்டென்ஷன் ஆப்சன்கள் உள்ளன. அல்லது ஃபயர்பாக்ஸ்-இல் உள்ள ஆட்ஸ் ஆன் பகுதிக்கு சென்று ஹிஸ்ட்ரியை சேவ் செய்து கொள்ளலாம்

இமெயில் மூலம் நோட்டிபிகேசன் வேண்டுமா?

இமெயில் மூலம் நோட்டிபிகேசன் வேண்டுமா?

உங்களுக்கு வரும் ஒவ்வொரு ஃபேஸ்புக் நோட்டிபிகேசனையும் நீங்கள் இமெயில் மூலம் பெற நினைத்தால் ஃபேஸ்புக்கின் ஹோம் பக்கத்திற்கு சென்று இடதுபுறம் உள்ள நோட்டிபிகேசனை க்ளிக் செய்து அதில் இமெயில்ஐ க்ளிக் செய்து எடிட் செய்யவும்

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டிபிகேசன் வேண்டுமா?

எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டிபிகேசன் வேண்டுமா?

இமெயில் மட்டுமின்றி எஸ்.எம்.எஸ் மூலம் நோட்டிபிகேசனை பெற நினைத்தால் அதற்கு மேலே கூறியபடியே சென்று இமெயில் என்ற ஆப்சனுக்கு பதில் எஸ்.எம்.எஸ். ஆப்சனை தேர்வு செய்தால் போதும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Admit or not, scrolling down the Facebook news feed is the first thing in the morning most of us do. While Facebook can be useful in many ways, for example, it serves as a major source for latest news and information, people tend to spend too much time using it.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X