Home
News

நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன்.. ZOHO Arattai ஆப்-க்கு புது சிக்கல்.. இம்முறை இந்திய அரசே வெடி வச்சிடுச்சு!

மேட் இன் இந்தியா ஆப் என்று கூறி, ஜோஹோ அரட்டை ஆப்பை (ZOHO Arattai App) ஓவர் நைட்டில் உலகளவில் டிரெண்ட் ஆக்கிய இந்திய அரசாங்கம் ஆனது மெசேஜிங் ஆப்களுக்கான புதிய விதிகளை அறிவித்து, அரட்டை ஆப்பை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மெசேஜிங் பிளாட்பார்ம்களுக்கும் புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.

அதாவது டாட் (DoT) எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ள புதிய சிம் பைண்டிங் விதிகள் ஆனது ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான அரட்டை ஆப்பை மட்டுமின்றி, மார்க் ஜூக்கர்பெர்க் தலைமையிலான "நம்பர் 1 இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்" ஆன வாட்ஸ்அப்பிற்கும் கூட சிக்கலை கொண்டு வந்துள்ளது.

நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன்.. ZOHO Arattai ஆப்-க்கு புது சிக்கல்

குறிப்பாக சரிவில் இருந்து மீள எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் (End to end Encryption) அம்சத்தை சேர்த்து கொண்டிருக்கும் ஜோஹோ அரட்டை ஆப்பிற்கு நிச்சயம் - அறிவிக்கப்பட்டுள்ள 2 புதிய விதிகள் மேலுமொரு தலைவலியாக இருக்கலாம். ஓன்று - சிம் கார்டு சரிபார்ப்பை (SIM card verification) அமல்படுத்த வேண்டும். இரண்டாவது - ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் இன்டர்நெட் அடிப்படையிலான செஷன்களில் இருந்து தானாகவே லாக்-அவுட் ஆக வேண்டும்.

அதாவது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram), அரட்டை (Arattai), சிக்னல் (Signal), ஸ்னாப்சாட் (Snapchat), ஷேர்சாட் (Sharechat) போன்ற ஆப்களுக்கு ரிஜிஸ்டர் செய்யும் போது பயன்படுத்திய பிஸிக்கல் சிம் கார்டு (Physical SIM Card) இல்லையென்றால், அவர்களுக்கு குறிப்பிட்ட சேவைகளை மெசேஜிங் அணுகுவதில் சிக்கல்கள் ஏற்படும்.

சிம் கார்டு சரிபார்ப்பு ஆனது 90 நாட்களுக்குள் - தங்கள் சேவைகளுக்கான ரிஜிஸ்ட்ரேஷனின் போது பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் குறிப்பிட்ட அக்கவுண்ட் தொடர்ந்து இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசாங்கத்தின் இந்த புதிய உத்தரவு - கடுமையான முறையில் சைபர் மோசடியை எதிர்த்து போராடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிலர் மொபைல் மற்றும் டேப்லெட்டுகள் அல்லது இரண்டு ஸ்மார்ட்போன்கள் போன்ற பல டிவைஸ்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இரண்டு டிவைஸ்களிலும் ஒரு அக்கவுண்ட்டை பயன்படுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சிம் கார்டு விதிகளால் நிச்சயம் இடையூறுகளை சந்திக்க நேரிடும்.

இதுவொருபக்கம் இருக்க திருடப்பட்ட மொபைல் போன்கள் மூலம் ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் முயற்சியில், இந்திய அரசாங்கம் அனைத்து ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும் புதிய உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது. இதன்கீழ் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து புதிய மொபைல் போன்களிலும் இந்திய அரசுக்கு சொந்தமான சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்கிற சைபர்-பாதுகாப்பு ஆப்பை கட்டாயமாக முன்கூட்டியே இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போன் தொடர்பான மோசடி மற்றும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் நோக்கில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஆப்பிள் போன்ற உலகளாவிய ஜாம்பவான்களுடன் மோதலை உருவாக்கும் அதே வேளையில், தனியுரிமமற்ற ஆப்களை முன்கூட்டியே நிறுவுவதை தடைசெய்யும் நிறுவன கொள்கைகளுடன் பாதுகாப்பான சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 28 அன்று இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் தனிப்பட்ட முறையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, சாம்சங், விவோ, ஒப்போ, சியோமி மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட முக்கிய உற்பத்தியாளர்களுக்கு,இதற்கு இணங்கவதற்காக 90 நாள் காலக்கெடுவும் கொடுக்கப்பட்டுள்ளது

முக்கியமான விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட ஆப்பை இன்ஸ்டால் செய்யப்பட்ட பின்னர், பயனர்களால் முடக்க முடியாத வகையில் அந்த ஆப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விநியோக சங்கிலியில் உள்ள டிவைஸ்களுக்கு, உற்பத்தியாளர்கள் சாஃப்ட்வேர் அப்டேட்கள் மூலம் குறிப்பிட்ட ஆப்பை கொண்டுவர வேண்டும் என்றும் உதவிர்ப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ரேஷன் கார்டு, சிபில் ஸ்கோர் என பல புதிய விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
ZOHO Arattai App Along With Other Apps Going to Affected By New SIM Card binding Rules From DoT
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X