Home
News

1 நாளைக்கு ரூ.100 அபராதம்.. CIBIL Score புதிய விதிகள்.. லோன் போட்டவங்க, கடன் வாங்க போறவங்க கவனம்!

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது - கடன் வாங்குபவர்களுக்கான நிதி பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக - சிபில் ஸ்கோர் (CIBIL Score) தொடர்பான சில புதிய விதிகள் மற்றும் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

ஆர்பிஐ அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதல்கள் ஆனது - வீட்டுக் கடன் (Home Loan), தனிநபர் கடன் (Personal Laon) அல்லது கார் கடன் (Car Loan) போன்ற இஎம்ஐ-க்கள் மற்றும் சிபில் ஸ்கோர் பற்றி கவலைப்படுபவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 நாளைக்கு ரூ.100 அபாரதம்.. CIBIL Score புதிய விதிகள்!

அறியாதோர்களுக்கு சிபில் ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் (Credit Score) ஆனது கடன் பெறுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் / விதிகள் / மாற்றங்கள் ஆனது சில தினங்களுக்கு முன்னரே அமலுக்கு வந்துவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

1. ஒரு மாதத்தில் 2 முறை அப்டேட்: முன்பு சிபில் ஸ்கோர் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அப்டேட் செய்யப்பட்டது. இருப்பினும், புதிய விதிகளின் கீழ், அனைத்து வங்கிகளும், கடன் வழங்கும் நிறுவனங்களும் வாடிக்கையாளர் தரவை மாதத்திற்கு இரண்டு முறை கடன் பணியகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அதாவது ஒவ்வொரு மாதத்தின் 15 ஆம் தேதி மற்றும் கடைசி நாளில் சமர்பிக்க வேண்டும். இதன் விளைவாக, நீங்கள் ஏதேனும் நிலுவையில் உள்ள நிலுவை தொகையை செலுத்தினால், அது உங்கள் மதிப்பெண்ணில் மிக வேகமாக பிரதிபலிக்கும், இது உங்கள் கடன் மதிப்பெண்ணை விரைவாக மேம்படுத்த உதவும்.

2. வெளிப்படைத்தன்மை மற்றும் நிராகரிப்புக்கான காரணம்: முன்னதாக, ஒரு கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், வங்கிகள் பெரும்பாலும் 'உள் கொள்கை'யை குறிப்பிட்டு பெரிய அளவிலான விளக்கங்களை தவிர்த்து வந்தன. இப்போது, ​​ஒரு வங்கி உங்கள் கடன் விண்ணப்பத்தை நிராகரித்தால், அவர்கள் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மற்றும் தெளிவான காரணத்தை வழங்குவது கட்டாயமாகும்.

3. எஸ்எம்எஸ் & இமெயில் அலெர்ட்கள்: இனி எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனமும் - உங்கள் கடன் அறிக்கையை சரிபார்க்கும் போதெல்லாம், உங்கள் பதிவுசெய்யப்பட்ட தொடர்பு விவரங்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் உடனடியாக ஒரு எச்சரிக்கையை பெறுவீர்கள். இது உங்களுக்குத் தெரியாமல் யாராவது உங்கள் சிபில் ஸ்கோர் அல்லது லோன் ஹிஸ்டரியை சரிபார்க்கிறார்களா என்பதை கண்டறிய உதவும், இதன் மூலம் சாத்தியமான மோசடிகள் தடுக்கப்படும்.

4. இலவச கடன் அறிக்கை மற்றும் உடனடி புகார் தீர்வு: ஒவ்வொரு வாடிக்கையாளரும் இப்போது தங்கள் முழு கடன் அறிக்கையை வருடத்திற்கு ஒரு முறை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பை பெறுவார்கள். மேலும் உங்கள் சிபில் அறிக்கையில் ஏதேனும் பிழை இருந்து நீங்கள் புகார் அளித்தால், அது 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். இந்தக் காலக்கெடுவிற்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் வாடிக்கையாளருக்கு ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும்.

இஎம்ஐ மற்றும் வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மை: ப்ளோட்டிங் விகிதங்களில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் ஒரு பெரிய கவலையாக உள்ளன. இதை நிவர்த்தி செய்யவும் ஆர்பிஐ கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்கீழ் நிலையான விகிதத்திற்கு மாறுவதற்கான விருப்பம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்பு, வட்டி விகிதங்கள் உயர்ந்தபோது, ​​வங்கிகள் தன்னிச்சையாக இஎம்ஐ அல்லது கடன் காலத்தை அதிகரிக்கும். ஆனால் ஆர்பிஐ-யின் புதிய விதிகளின் கீழ், வட்டி விகிதங்கள் மாறும்போது, ​​வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கடனை நிலையான விகிதத்திற்கு மாற்றுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும். மேலும் அதிகரிக்குமா அல்லது வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் கடன் காலம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்த முடிவை எடுக்கும் உரிமை இப்போது வாடிக்கையாளரிடமே உள்ளது. வங்கிகள் தாங்களாகவே எந்த முடிவையும் திணிக்க முடியாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules For CIBIL Score From RBI Monthly 2 Times Update SMS Alert Free Credit Report and more
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X