சியாமி நிறுவனத்தின் இரண்டு வகையான புதிய ஹெட்போன்கள்.!

சியாமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள சியாமி மி பிஸ்டன் ஃபிரஷ் மற்றும் மி ஹெட்போன்ஸ் வகைகள்

By Siva
|

சீன நிறுவனமான சியாமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் உள்பட ஒவ்வொரு தயாரிப்புகளும் வாடிக்கையாளர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்நிறுவனம் தயாரிப்பில் வெளிவரும் ஆடியோ தயாரிப்புகளுக்கு உள்ள மதிப்பே தனிதான்.

சியாமி நிறுவனத்தின் இரண்டு வகையான புதிய ஹெட்போன்கள்.!

நிஜமான இசையை கேட்பது போன்ற உணர்வை தரும் இந்நிறுவனத்தின் ஆடியோ தயாரிப்புகளில் முக்கியமானது சமீபத்தில் வெளியிட்டுள்ள காதில் அணியும் ஹெக்ட்போன் மற்றும் புளூடூத் ஹெட்செட்

பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)

கடந்த மாதம் வெளியான பிஸ்டன் 3 புரோ ஹெட்போன்கள் மற்றும் மி ஸ்போர்ட்ஸ் புளூடூத் ஹெட்செட் ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது சியாமி மி பிஸ்டன் ஃபிரஷ் மற்றும் மி ஹெட்போன்ஸ் வகைகளும் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியாமி நிறுவனத்தின் இரண்டு வகையான புதிய ஹெட்போன்கள்.!

பிஸ்டன் 3 புரோ ஹெட்போன்கள் போலவே சியாமி மி பிஸ்டன் ஃபிரஷ் ஹெட்போன்களும் ஐந்து வகையான வண்ணங்களில் கிடைக்கின்றது. கருப்பு, சில்வர், புளூ, பர்ப்பிள் மற்றும் பிங்க் நிறங்களில் கிடைக்கும் இந்த ஹெட்போன்களின் விலை சுமார் ரூ.280. இந்த ஹெட்போன்கள் ஸ்காராட்ச் ஆகாமல் இருக்கும் வகையில் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதால் நீண்ட உழைப்புக்கு கியாரண்டி

வோடபோன் ரெட் பிளான் : அன்லிமிடெட் வாய்ஸ், 3ஜிபி தரவு, என்ன விலை.?

சியாமி மி பிஸ்டன் பிரஷ் மாடல் ஹெட்போனில் காற்று உள்ளே புகுந்து வெளியே வரும் அம்சங்கள் இருப்பதால் ஆடியோவின் தரம் அதிகமாக உள்ளது. ஒடுக்கமான அமைப்பில் அமைந்துள்ள இந்த ஹெட்போன்களில் உள்ள பட்டன் மூலம் இசையை தொடர்ந்து கேட்கவோ அல்லது நிறுத்தவோ முடியும். மேலும் நமக்கு வரும் அழைப்பையும் இதன்மூலம் நான் கேட்கலாம்.

அதேபோல் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மி ஹெட்போன்கள் அடக்கமான சிறந்த டிசைன்களில் அமைந்துள்ளதோடு ஜப்பான் தொழில்நுட்பமான ஹை-ரெசிஸ் ஆடியோ தரத்தின் சான்றிதழ் உள்ளது. சியாமி மி பிஸ்டன் பிரஷ் மாடல் ஹெட்போனை போலவே இதிலும் ஒரு மைக்ரோபோன் உள்ளது.

இதன் மூலம் இசையை கண்ட்ரோல் செய்யலாம். வெள்ளை, ஆரஞ்சு மற்றும் மிண்ட் ஆகிய நிறங்களில் கிடைக்கும் இந்த ஹெட்போன்கள் ரூ.1950க்கு கிடைக்கின்றது. எந்தவித பிரச்சனையும் தராத வகையில் லெதரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போன் மூலம் புதிய ஆடியோ அனுபவத்தை பெறலாம்

மேற்கண்ட இரண்டு வகையான ஆடியோ உபகரணங்கள் இசையை துல்லியமாக ரசிக்க உதவுவதோடு, வெளியே கேட்கும் அனாவசியமான சத்தங்களை உள்ளடக்காமல் இருக்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Piston Fresh and Mi Headphones launched at an affordable price tag and various color variants.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X