பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)
உங்கள் ஆண்ட்ராய்டு கருவியின் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.
கடந்த தமிழ் கிஸ்பாட் டூடோரியல் தொகுப்பில் உங்கள் ஐஓஎஸ் கருவியின் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்வது எப்படி என்ற எளிய வழிமுறைகள் கொண்ட கட்டுரையை வழங்கியிருந்தோம். இப்பொது அதே டூடோரியலை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான வழிமுறைகளை கொண்டு வழங்குகிறோம்.

உங்களின் ஆண்ட்ராய்டு கருவியின் பேக்ரவுண்டில் யூட்யூப் ஆடியோ ஒலிக்க செய்ய கீழ்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.
1. உங்களின் கருவியில் பயர்பாக்ஸ் திறந்து யூட்யூப் வலைத்தளத்ததிற்குள் நுழையவும்.
2. பின்னணியில் நீங்கள் கேட்க விரும்பும் உங்களுக்கு விருப்பமான யூட்யூப் விடியோவை தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது வெறுமனே நீங்கள் ப்ளே அழுத்திவிட்டு ஆப்பை விட்டு வெளியேறுங்கள். யூட்யூப் ஆடியோ நிற்காது.
இதை நீங்கள் பெரும்பாலும் கவனித்திருக்க மாட்டீர்கள். ஐஓஎஸ்-ன் சபாரி/பயர்பாக்ஸ் ஆகியவைகளை விட ஆண்ட்ராய்டு பயர்பாக்ஸ் மிகவும் சிறந்ததாகும்.
பீம் ஆப்பை பயன்படுத்துவது எப்படி என்ற டூடோரியலை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications