Home
News

வோடபோன் ரெட் பிளான் : அன்லிமிடெட் வாய்ஸ், 3ஜிபி தரவு, என்ன விலை.?

வோடபோன் நிறுவனம் அதன் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கான புதிய திட்டமான ரெட் பிளானை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் நன்மைகள் மற்றும் விலை பற்றிய விவரமான தொகுப்பே இது.

By Muthuraj

'பழைய வில்லன்' ஏர்டெல் மற்றும் 'புதிய வில்லன்' ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுடனும் மல்லுக்கட்டி கொண்டிருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றுதான் - வோடாபோன். இப்போது அந்நிறுவனம் அதன் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கான புதிய திட்டமான ரெட் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வோடாபோன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் கூடுதலான தரவு ஆகியவைகள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையால் ஈர்க்கப்படும் வாடிக்கையாளர்களை சற்று தடுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். சரி இந்த புதிய ரெட் திட்டத்தின் விலை என்ன இதன் கீழ் வாடிக்கையாளர்கள் பெறும் நன்மைகள் என்னென்ன.?

இரண்டு தொகுப்புகள்

இரண்டு தொகுப்புகள்

இந்த புதிய வோடபோன் போஸ்ட்பெயிட் ரெட் திட்டத்தின் கீழ் ரூ.499/- மற்றும் ரூ.699/- என்ற இரண்டு தொகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.499/- வோடபோன் ரெட் போஸ்ட்பெய்டு திட்டமானது 3ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு மற்றும் 100 இலவச உரை செய்திகளுடன் சேர்த்து எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற தேசிய மற்றும் உள்ளூர் அழைப்புகளை பயனர்களுக்கு வழங்குகிறது.

செல்லுபடி

செல்லுபடி

அதேபோல ரூ. 699/- வோடபோன் ரெட் போஸ்ட்பெய்டு திட்டமானது அதே போன்ற அழைப்புகள் மற்றும் உரை செய்தி நன்மைகளுடன் 5ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த இரண்டு தொகுப்புகளும் ஒரு மாத காலம் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் மொபைல் ரீசார்ஜ் கடைகளில்

உள்ளூர் மொபைல் ரீசார்ஜ் கடைகளில்

இந்த இரண்டு புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களும் 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் மொபைல் ரீசார்ஜ் கடைகளில் கிடைக்கிறது. முன்னதாக வெளியான இதே வகையிலான வோடபோன் ரெட் திட்டத்தின் ரூ.499/- பேக்கின் கீழ் 700 நிமிடங்களுக்கான இலவச குரல் (உள்ளூர் + எஸ்.டி.டி.) அழைப்புகள், 500 உரை செய்திகள் மற்றும் 1ஜிபி அளவிலான இலவச 3ஜி/4ஜி தரவு வழங்கப்பட்டது.

முன்பு

முன்பு

முதலில் வோடபோன் ரெட் திட்டம் ரூ.1999/- என்ற விலைக்கு 8ஜிபி (3ஜி அல்லது 4ஜி) தரவு, வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், வரம்பற்ற ரோமிங், மாதம் ஒன்றுக்கு 500 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்கியது. மற்றொரு திட்டமான ரூ.1699/- வோடபோன் ரெட் திட்டம் 6ஜிபி டேட்டா, இலவச உள்வரும் அழைப்புகள் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு ரூ.0.50/ நிமிடம், வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள், வரம்பற்ற ரோமிங் மாதம் ஒன்றுக்கு 500 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது

1ஜிபி டேட்டா செலவில் 10ஜிபி

1ஜிபி டேட்டா செலவில் 10ஜிபி

கடந்த செப்டம்பர் மாதத்தில் வோடஃபோன் இந்தியா ஒரு 4ஜி கைபேசி கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு வெறும் 1ஜிபி டேட்டா செலவில் 10ஜிபி அளவிலான தரவு நன்மை கிடைக்கும் ஒரு தரவு சலுகையை தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஏர்டெல் : ஒரு வருட இலவச 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?

Best Mobiles in India

English summary
Vodafone Red Postpaid Plan Now Offers Unlimited Calls, 3GB Data at Rs. 499. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X