இனிமேல் அவ்ளோ ஈஸியாக ஒரு WhatsApp க்ரூப்பில் சேர முடியாது; பீதியை கிளப்பும் புது Update!

|

தற்போது வரையிலாக, உங்களுக்கு ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டால், அதாவது ஓரு 'இன்வைட் லிங்க்' கிடைத்தால் போதும், குறிப்பிட்ட வாட்ஸ்அப் க்ரூப்பில் சேர்ந்து விடலாம். அப்படித்தானே?

ஆனால் இந்த எளிமையான செயல்முறை விரைவில் சற்றே "கடினமானதாக" மாறவுள்ளது போல் தெரிகிறது. அதென்ன மாற்றம்? இதனால் ஏற்படும் நன்மைகள் தான் என்ன? இந்த அம்சம் எப்போது அறிமுகமாகும்? போன்ற கேள்விகளுக்கான விடைகள் இதோ:

அட்மின்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வரும் வாட்ஸ்அப் க்ரூப்புகள்!

அட்மின்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வரும் வாட்ஸ்அப் க்ரூப்புகள்!

ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் சேர குறிப்பிட்ட இன்வைட் லிங்க் இருந்தால் போதும் என்கிற நிலைப்பாடு வரும் நாட்களில் மாறிவிடும் என்பது போல் தெரிகிறது. ஏனெனில் ஒரு இன்வைட் லிங்க் வழியாக ஒரு க்ரூப் சாட்டில் யாரெல்லாம் சேரலாம் என்பதை அந்தந்த க்ரூப் அட்மின்கள் கட்டுப்படுத்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

எனவே இதுநாள் வரையிலாக மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த செயல்முறை சற்றே கடினமானதாக மாறவுள்ளது. வாட்ஸ்அப்பில் நிகழவுள்ள இந்த மாற்றம் குறித்து - வழக்கம் போல - வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ (WABetaInfo) வழியாகவே நமக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஏன் இந்த திடீர் மாற்றம்?

ஏன் இந்த திடீர் மாற்றம்?

இந்த மாற்றத்தின் கீழ், வாட்ஸ்அப் அட்மின்களுக்கு வாட்ஸ்அப் க்ரூப்களின் மீதான உயர்-மட்ட கட்டுப்பாடுகள் கிடைக்கும் என்பதால் தான், இது அறிமுகம் செய்யப்படுகிறது என்பது வெளிப்படை!

மேலும் குறிப்பிட்ட அம்சத்தை, வாட்ஸ்அப் க்ரூப் அட்மின்கள் கைமுறையாகவே இயக்க வேண்டும், மேலும் ஒரு க்ரூப் இன்வைட் லிங்க்-இல் இருந்து குறிப்பிட்ட க்ரூப் சாட்டில் யார் யாரெல்லாம் நுழையலாம், யாரெல்லாம் நுழைய கூடாது என்பதை தேர்வுசெய்யும் திறனை மற்ற எல்லா அட்மின்களுக்கும் வழங்கவும் வேண்டும்.

இதனால் என்ன பயன்?

இதனால் என்ன பயன்?

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை உள்ளடக்கிய சிறிய வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் பெரிய மற்றும் மிகவும் விரிவான வாட்ஸ்அப் க்ரூப்களில் இந்த அம்சத்தை எவ்வளவு திறமையாக பயன்படுத்த முடியும் என்பதை, இந்த அம்சம் அறிமுகமான பின்னரே தெரிந்து கொள்ள முடியும்.

இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் "க்ரூப் மெம்பர்ஷிப் அப்ரூவல்" (Group membership approval) என்று குறிப்பிடப்படுகிறது, மேலும் இது க்ரூப் செட்டிங்ஸ் வழியாக அணுக கிடைக்கும் என்பது போல் தெரிகிறது.

அதாவது நீங்கள் ஒரு அட்மின் என்றால், இந்த க்ரூப் மெம்பர்ஷிப் அப்ரூவல் அம்சத்தை கைமுறையாக இயக்கலாம் மற்றும் முடக்கலாம். இப்படியாக நீங்கள் இதில் செய்யும் மாற்றமானது, ஒரு நோட்டிபிகேஷன் வடிவத்தில் க்ரூப்பில் உள்ள மற்ற மெம்பர்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?

இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்?

நீங்கள் ஒரு அட்மின் ஆக இருந்து, குறிப்பிட்ட அம்சத்தை இயக்கியிருந்தால், யாராவது உங்கள் க்ரூப் சாட்டில் சேர விரும்பினால், அதுகுறித்த நோட்டிபிகேஷனை நீங்கள் பெறுவீர்கள்.

அதை நீங்கள் அனுமதிக்கவோ அல்லது தடுக்கவோ வேண்டும். இப்படியாக உங்களுக்கு வந்த நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க, க்ரூப் இன்ஃபோவில் ஒரு புதிய செக்ஷனும் சேர்க்கப்படும்.

இந்த அப்டேட் எப்போது வரும்?

இந்த அப்டேட் எப்போது வரும்?

க்ரூப் மெம்பர்ஷிப் அப்ரூவல் என்று அழைக்கப்படும் இந்த அம்சம், எப்போது வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் என்கிற கேள்விக்கு துல்லியமான பதில் எதுவும் இல்லை. ஆனால் இந்த அம்சம் அதிகாரப்பூர்வமாக வெளிவர இன்னும் சில காலம் எடுத்துக்கொள்ளலாம் என்பது போல் தெரிகிறது.

இந்த அப்டேட்டின் ஒரு பகுதியாக, வாட்ஸ்அப் நிறுவனம் தன் பிளாட்ஃபார்மில் ஆறு புதிய ஜெண்டர்-நியூட்ரல் ஈமோஜிக்களையும் (gender-neutral emojis) அறிமுகப்படுத்தும், அவைகள் பல்வேறு ஸ்கின் டோன்ஸ் மற்றும் ஹேர் கலரை வெளிப்படுத்தும். மேலும் ஒவ்வொரு ஈமோஜியும் முடியின் நிறத்திற்கு ஏற்ற தாடியையும் கொண்டிருக்கும்.

இதுதவிர்த்து வாட்ஸ்அப்பில், ஒரு க்ரூப்பில் 512 மெம்பர்களை சேர்க்கலாம், வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு 'ரியாக்ட்' செய்யலாம் உட்பட பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் ஏற்கனவே அணுக கிடைக்கும் ஆட்டோமேட்டிக் ஆல்பம்ஸ் என்கிற அம்சம் விண்டோஸ் பீட்டா வெர்ஷனுக்கு வந்துள்ளதும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து ஐபோனுக்கு டேட்டாக்களை டிரான்ஸ்பர் செய்யும் ஆதரவும் கிடைத்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
WhatsApp working on a new feature called Group membership approval to give more power to Group Admins. Under this update you you need to get approval to join in a WhatsApp Group chats. Check Full Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X