ஆன்டிராய்டு லாலிபாப் ஓஎஸ் அப்டேட் செய்ய போறீங்களா, அப்ப இதை படிங்க முதல்ல...

By Meganathan
|

இந்தாண்டு ஆரம்பத்தில் அறிவித்த ஆன்டிராய்டு லாலிபாப் ஓஎஸ் கடந்த மாதம் கூகுள் நிறுவனம் வெளியிட்டது. மெதுவாக அதன் அப்டேட் நடைபெற்று வரும் நிலையில் தற்சமயம் சில கருவிகள் மட்டுமே இந்த அபடேட் பெற்றுள்ளன. நெக்சஸ் மற்றும் மோட்டோரோலா நிறுவனஹ்கள் ஆன்டிராய்டு லாலிபாப் பெற்ற முதல் நிறுவனங்கள் என்ற பெருமையை பெற்றுள்ளன. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

லாலிபாப் ஓஎஸ் அப்டேட் செய்ய போறீங்களா, இதை படிங்க பாஸ்...!

மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சாம்சங், எல்ஜி, சோனி, எஹ்டிசி ஆகியவை புதிய அப்டேட்டை சோதனை செய்து வரும் நிலையில் விரைவில் அதன் அடுத்த மாடல் போன்களில் ஆன்டிராய்டு லாலிபாப் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

எனினும் ஒருவர் புதிய ஓஎஸ் அப்டேட் செய்யும் போது சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. முக்கியமாக மொபைல் பயன்படுத்தும் போது புதிதாக சில சிக்கல்கள் நிச்சயம் ஏற்படும். இதற்கான முக்கிய காரணங்கள் புதிய ஓஎஸ் அப்டேட் ஆன பிறகும் பழைய ஓஎஸ் மொபைலில் இருக்கும், அவை புதிய ஓஎஸ் உடன் ஒத்துழைக்காதது தான்.

இந்த பிரச்சனை வராமல் இருக்க எளிமையாக உங்க ஸ்மார்ட்போனை பார்மேட் செய்யலாம். ஷாக் ஆகாதீங்க பாஸ் ஸ்மார்ட்போனை பார்மேட் செய்யும் முன் அதில் இருக்கும் முக்கியமான தகவல்களை பேக்கப் செய்து கொள்ளுங்கள். முக்கிய தகவல் என்ற பட்சத்தில் அட்ரெஸ் புக், படங்கள், பாடல்கள், வீடியோக்கள், குருந்தகவல்களை தனியாக கணினியில் எடுத்து வைத்து கொண்டு உங்க போனை அப்டேட் செய்யுங்கள். ஐபோன், ஐபேட், விண்டோஸ் போன் மற்றும் ப்ளாக்பெரி போன்களை பயன்படுத்துபவர்களுக்கும் இவை பொருந்தும்.

Best Mobiles in India

English summary
Updating to Lollipop check these recommendations from experts. Check out what experts say when you update your OS platform on your smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X