'பிட்டு' படங்களுக்கு தடா...சுப்ரீம் கோர்ட் அதிரடி...

By Jeevan
|
'பிட்டு' படங்களுக்கு தடா...சுப்ரீம் கோர்ட் அதிரடி...

கடந்த திங்களன்றுதான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது நமது சுப்ரீம் கோர்ட். அதாவது ஆபாசப்படங்கள் கொண்ட இணையதளங்களை முடக்குவது தொடர்பாக தகவல்தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இன்டர்நெட் வழங்கும் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆபாச படங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட தலைமை நீதிபதி அல்டாம்ஸ் கபீர் தலைமையிலான அமர்வு விசாரித்து பின்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தூர் வழக்கறிஞர் கமலேஷ் வஸ்வானி என்பர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

இது குறித்து கமலேஷ் கூறுகையில், "இம்மாதிரியான ஆபாச இணையதளங்களே பாலியல் குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. 20 கோடிக்கும் மேலான ஆபாசப் படங்கள் இணையதளங்களில் இலவசமாகவே பார்க்க முடிவதால் குற்றங்களும் அதிகரிக்கிறது. இவற்றால் தான் இளைய தலைமுறையும் சீரழிகிறது. இந்தியாவில் இம்மாதிரி தளங்களை உடனடியாக முடக்கவேண்டும்." என்றார்.

செல்போன்களுக்கான காமசூத்ரா ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்...இப்பொழுது 3டியில்...

உச்ச நீதின்றமும் மத்திய அரசை ஆபாச படங்கள் வெளியிடும் தளங்களை முடக்கவேண்டியதற்கான நடவைக்கையை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

விரைவில் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தெரிந்தாலும், இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் தெரியவில்லை. பிராக்ஸி தளங்கள் வழியாக பயன்படுத்துவார்களே!

இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X