Subscribe to Gizbot

எல்லாம் போச்சு : இதுதான் 82% ஜியோ பயனர்களின் மனநிலையாம், நீங்கள் எப்படி.?

Written By:

ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகம் மற்றும் ஆதிக்கமானது மற்ற டெலிகாம் துறைகளுக்கான புதிய வரையறைகளை, சிறந்த சலுகைகளை குறைந்த தீரவேண்டுமென்ற கட்டாயத்தை ஏற்படுத்தியது. 4ஜி தரவு, குரல் அழைப்புகள், ரோமிங் மற்றும் பிற சேவைகள் உட்பட ஜியோ அதன் சேவைகளை, போட்டி விலையை விட மிக மலிவான விலையில் வழங்கி இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை நிறுவிக்கொண்டது.

ஜியோ ரவுட்டர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகை : ஜியோ அதிரடி.!

நிறுத்துங்கள் - ஜியோ அதன் ராஜாங்கத்தை நிறுவிக் கொண்டதா.?? இல்லை தற்காலிகமாக இடம்பிடித்துக் கொண்டதா.?? இப்படி பல கேள்விகள், பல ஆய்வுகள், ஜியோ 4ஜி சேவை பற்றியும் ஜியோ 4ஜி சேம்கார்ட் பற்றியும் மக்களின் மனநிலைகள் என்ன.? - இது சார்ந்த முடிவுகள் மற்றும் இதற்கான பதில்கள் என்ன தெரியுமா.?

பிஎஸ்என்எல் அதிரடி : நாள் ஒன்றிருக்கு 4ஜிபி டேட்டா, ஜியோவிற்கு டாட்டா.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பலமாக அடிவாங்கியுள்ளது

பலமாக அடிவாங்கியுள்ளது

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான வேலாசிட்டி நடத்திய ஒரு புதிய ஆய்வு இந்தியாவில் உள்ள மொபைல் பயனர்களின் சில சுவாரஸ்யமான பழக்கங்களை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த ஆய்வில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பலமாக அடிவாங்கியுள்ளது.

பெரும்பாலான இந்தியர்களுக்கு

பெரும்பாலான இந்தியர்களுக்கு

ரிலையன்ஸ் ஜியோ, உலகில் எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனத்தைவிட மிக வேகமான 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை சேர்த்து வரலாற்று பதிவு செய்திருக்கிறது. இருப்பினும் அதெல்லாம் ஒரு வ விடயமே இல்லையாம். ஜியோ தொலைத் தொடர்பு சேவையானது பெரும்பாலான இந்தியர்களுக்கு பிரதான தேர்வு இல்லையாம்.

பயனர்களின் மனநிலைப்படி

பயனர்களின் மனநிலைப்படி

அதாவது "ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டப்போது அதை தேர்ந்தெடுத்த மற்றும் அதன் சந்தா சலுகை முடிவடைந்த பின்னும் ரிலையன்ஸ் ஜியோ சேவையை தொடரும் பயனர்களின் மனநிலைப்படி ஜியோ ஒரு இரண்டாம் நிலை (செக்கண்டரி) சிம் தானாம்.

2,000-க்கும் அதிகமானோர்

2,000-க்கும் அதிகமானோர்

டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், புனே, அஹமதாபாத் மற்றும் கொச்சி போன்ற பெரிய நகரங்களில் 2,000-க்கும் அதிகமானோர் இந்த ஆய்வின் பங்களிப்பாளர்கள் ஆவார்கள். ரிலையன்ஸ் ஜியோ சேவையை பயன்படுத்தும் 82 சதவீதத்தினர் இதை ஒரு இரண்டாம் சிம் கார்டுகளாகத்தான் பயன்படுத்தப்படுகின்றனராம்.

இலவச சேவை

இலவச சேவை

ஜியோ இந்தியாவில் தனது சேவைகளை அறிமுகப்படுத்தியபோது, பயனர்களுக்கு வரம்பற்ற 4ஜி தரவு மற்றும் குரல் அழைப்புகள் இலவசமாக வழங்கியது. மார்ச் மாதத்தில், நிறுவனம் தனது முதல் சந்தா அடிப்படையிலான சேவையை ஆறு மாதங்களுக்கு இலவச சலுகைகளை வழங்கியது. பின்னர் ஒரு மாத கட்டணத்தின் விலையில் மூன்று மாத கால இலவச சேவையை வழங்கியது.

முயற்சிகளிலேயே வெற்றி

முயற்சிகளிலேயே வெற்றி

இப்படியாக இலவசங்களை தொடர்வதில் மூலம் ஜியோ தனது சேவையை முழுவதுமாக நம்புவதற்கும், பயனர்களின் நம்பகத்தன்மையை பெற்றுக்கொள்வதற்கும் முயற்சி செய்வதற்கு மாறாக மக்கள் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளிலேயே வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்கிறது இந்த சமீபத்திய ஆய்வு.

வோடபோன்

வோடபோன்

வேலாசிட்டி ஆய்வின்படி, ஜியோ இயற்கையாகவே அழைப்பு விகிதங்கள் மற்றும் தரவு பேக் ரீசார்ஜ்கள் அடிப்படையில் அதன் சக போட்டியாளர்களை விடஉயர்ந்தது . ஆனால் கால் ட்ராப்ஸ் இன்றும் ஒரு முக்கிய கவலையாகவே ஜியோவை தொடர்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோ சேவையுடன் ஒப்பிடும்போது வோடபோன் சேவையானது சிறந்த நெட்வொர்க் நிலைத்தன்மையும், ஒலி தரமும் கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளேயே

மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளேயே

ஏழு மாத காலப்பகுதியில், ஜியோ ஏற்கனவே நாட்டில் நான்காவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக உருவாகிவிட்டது என்பதும் மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளேயே 9.29 சதவீத சந்தை பங்கு ஆட்கொண்டது என்பதும், இருப்பினும் ஏர்டெல் இன்னும்முன்னணி வகிக்கிறது, அத்துடன் நேரத்தில் வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் முன்னணி வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Majority of users still use Reliance Jio as secondary SIM despite best rates and offers. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot