Home
News

பிஎஸ்என்எல் அதிரடி : நாள் ஒன்றிருக்கு 4ஜிபி டேட்டா, ஜியோவிற்கு டாட்டா.!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூபாய்.444க்கு ரீசார்ஜ் செய்தால் 4ஜிபி டேட்டா கிடைக்கும் என தெரிவித்துள்ளது.!

By Prakash

தற்போது பிஎஸ்என்எல் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த ஆபர் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளது, மேலும் இதன் இன்டர்நெட் சேவை குறிப்பிட்ட வேகம் மட்டுமே பெறமுடிகிறது. இந்த புதிய திட்டத்தின் கீழ் பல்வேறு நன்மைகள் உள்ளது.

எல்லாம் போச்சு : இதுதான் 82% ஜியோ பயனர்களின் மனநிலையாம், நீங்கள் எப்படி.?

பிஎஸ்என்எல் : நாள் ஒன்றிருக்கு 4ஜிபி டேட்டா, ஜியோவிற்கு டாட்டா.!

முன்னதாக பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.339க்கு அறிவித்த திட்டத்தையும் 2ஜிபியில் இருந்து 3ஜிபியாக மாற்றி அறிவித்துள்ளது. இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் இலவசம் ஆகும். அனைத்து பிளான்களிலும் வழங்கப்பட்டுள்ள தினசரி டேட்டா சலுகைகளை கிடைக்கும் வரை 3ஜி வேகத்தில் இருக்கும். அதன் பிறகு 80 கேபிபிஎஸ் வேகத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்ததிட்டத்ததை முற்றிலும் மாற்றி அமைத்து புதிய திட்டத்ததைக் கொண்டுவந்துள்ளது. 4ஜி வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டம் எனக் கூறப்படுகிறது.

எந்தவொரு ஆப் உதவியுமின்றி மொபைலில் உள்ள புகைப்படங்களை மறைப்பது எப்படி?

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ரூபாய்.444க்கு ரீசார்ஜ் செய்தால் 4ஜிபி டேட்டா கிடைக்கும். மொத்தமாக 360ஜிபி இதனுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரீசார்ஜ் திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவு இன்டர்நெட் வேகம் கிடைக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆர்.கே. மிட்டல்:

ஆர்.கே. மிட்டல்:

பிஎஸ்என்எல் நிறுவனம் பொருத்தவரை குறைந்த செலவில் அதிக சேவைகளை வழங்கிவருகிறது, வாடிக்கையாளர்களுக்கு தகுந்த சிறப்பு திட்டங்களை அறிவித்துவருகிறது என பிஎஸ்என்எல் வாரியத்தின் இயக்குனர் ஆர்.கே. மிட்டல் செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான தரவுத் திட்டங்கள் மூலம் பல வாடிக்கையாளர்களைப் பெற்றது, தற்போது ஜியோவில் ரூ.309க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டாவை பெறமுடியம், மற்றும் ரூ.509க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி 4ஜி டேட்டாவை பெறமுடியும். தற்போது பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த ரூபாய்.444 ரீசார்ஜ் ஆபர் மூலம் பல வாடிக்கையாளர்களைப் பெறமுடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ திட்டம்:

ஜியோ திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டதுஇ இது லீஃப்-பிராண்ட் ஸ்மார்ட்போன்களைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்கு 20% அதிகமான 4ஜி தரவை வழங்குகிறது, மேலும் இதைவிட மலிவான திட்டத்தை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

ஐடியா:

ஐடியா:

ஐடியா, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற போட்டியாளர்கள் பல்வேறு தரவுத் திட்ங்களை மாற்றி அமைத்துள்ளனர், ஐடியா நிறுவனம் அறிவித்துள்ள புதிய ஆபர் ரூ. 396 விலையில் 70 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கும் என தெரிவித்துள்ளது.அதன்பின் மற்ற நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL unveils new Chaukka-444 plan offers 4GB data per day : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X