ஜியோ ரவுட்டர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகை : ஜியோ அதிரடி.!

|

ஜியோஃபை (JioFi) என்றழைக்கப்படும் ஜியோ நிறுவனத்தின் போர்ட்டபிள் பிராட்பேண்ட் சாதனத்தை கொள்முதல் செய்வதற்கு ரிலையன்ஸ் ஜியோ 100 சதவிகிதம் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது.

ஜியோ ரவுட்டர்களுக்கு 100% கேஷ்பேக் சலுகை : ஜியோ அதிரடி.!

ரூ.1,999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட ஜியோ நிறுவனத்தின் ஜியோஃபை ஆனது ஜியோ 4ஜி இணைய சேவையுடன் இணைக்கப்பட்ட மற்றும் தனிப்பட்ட வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்கி ஒரே நேரத்தில் பல பயனர்கள் மற்றும் மொபைல் சாதனங்களில் (2ஜி / 3ஜி ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் டேப்லட்கள் உட்பட) இணைய அணுகலை அனுமதிக்கிறது.

இந்த சலுகையை பெறுவது எப்படி.?

இந்த சலுகையை பெறுவது எப்படி.?

ஜியோ நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தின்படி "ஜியோஃபை உடன் 100% கேஷ்பேக் சலுகை" என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சலுகையை பெறுவது எப்படி.? பயனர்களுக்கு இது லாபகரமானதா.?? இதன் நன்மைகள் என்னென்ன.? இதன் இணைப்புகள் பற்றிய கருத்து என்ன.?

கேஷ்பேக்

கேஷ்பேக்

ரூ.1,999/- என்ற மதிப்பை கொண்டுள்ள ஜியோஃபை சாதனத்தின் மீது இரு திட்டங்களின் கீழ் நீங்கள் இந்த சாதனத்தின் மேல் ரூ.2,010/- வரை கேஷ்பேக் சலுகையை பெறலாம்.

ஐந்து டாப் அப் வவுச்சர்கள்

ஐந்து டாப் அப் வவுச்சர்கள்

கேஷ்பேக் சலுகையின் கீழ், ஜியோ.காம் வலைத்தளத்தின் மூலம் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1,005/- மதிப்புள்ள ஐந்து டாப் அப் வவுச்சர்கள் (ஒவ்வொன்றும் ரூ.201/- மதிப்புடையது) கிடைக்கும். இதன் மூலம் கிட்டத்தட்ட 50% கேஷ்பேக்கை நீங்கள் பெறலாம்.

எக்ஸ்சேன்ஜ் செய்வதின் மூலம்

எக்ஸ்சேன்ஜ் செய்வதின் மூலம்

மறுகையில் ஜியோஃபை வாங்குவதற்கு தற்போதுள்ள ஜியோ-அல்லாத சாதனங்களை எக்ஸ்சேன்ஜ் செய்வதின் மூலம் வாடிக்கையாளர்கள் 10 டாப்-அப் வவுச்சர்களை பெறுவர் என்று ஜியோ அறிவித்துள்ளது.

இணைப்பு

இணைப்பு

ஒரே நேரத்தில் ஜியோஃபை திசைவியுடன் 10 சாதனங்கள் மற்றும் 1 யூஎஸ்பி இணைப்பு வரை இணைக்க முடியும் என்று ஜியோ நிறுவனம் பரிந்துரைக்கிறது.

கிடைக்கும்தன்மை

கிடைக்கும்தன்மை

ஜியோஃபை சாதனமானது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்ஸ், டிஎக்ஸ் மினி ஸ்டோர்ஸ் மற்றும் ஜியோ வலைத்தளம் (ஜியோ.காம்)ஆகியவற்றில் கிடைக்கிறது.

இஎம்ஐ விவரங்கள்

இஎம்ஐ விவரங்கள்

ரூ.95.03/- என்ற புள்ளியில் இருந்து ஜியோஃபை சாதனத்தை (எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்டிஎப்சி வங்கி உட்பட) இஎம்ஐ மூலம் வாங்கலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Get 100% Cashback On JioFi Router In Jio's Latest Offer. Details Here. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X