அறிமுகம் : ஐடியாவின் ரூ.396/- திட்டம், என்னென்ன நன்மைகள்.?
வாடிக்கையாளர்கள் 70 நாட்கள் செல்லுபடியாகும் 70ஜிபி அளவிலான 3ஜி தரவை ரூ.396/-க்கு பெற முடியும்.
இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலார் நிறுவனம் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன் கீழ் வாடிக்கையாளர்கள் 70 நாட்கள் செல்லுபடியாகும் 70ஜிபி அளவிலான 3ஜி தரவை ரூ.396/-க்கு பெற முடியும்.
தரமாக ரெடியாகும் மோட்டோ இசெட்2 - நீங்க ரெடியா.?
இந்த புதிய பேக் ஆனது மற்ற பிணையத்தில் உள்ள எண்களுக்கு 3,000 நிமிடங்கள் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை உள்ளடக்கியுள்ளது. தினமும் 300 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1,200 நிமிடங்கள் என்று பிரித்து வழங்கப்படும்.

சமீபத்தில், வோடபோன் ஆனது ரமலான் பண்டிகை விழா காலத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்தது.
இருப்பினும் இந்த சலுகை உ.பி. மேற்கு மற்றும் உத்தரகண்ட் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஜியோ சிம் வேலை சரியாக செய்யவில்லையா.? என்ன செய்யவேண்டும்.!?
இதன் கீழ் *444*5# டயல் செய்வதின் மூலம் 2ஜி வாடிக்கையாளர்கள் ரூ.5/-க்கான வரம்பற்ற தரவை பெற முடியும், மறுபக்கம் *444 *19# என்று டயல் செய்வதின் மூலம் 3ஜி வாடிக்கையாளர்கள் ரூ.19/-க்கு வரம்பற்ற தரவு வாய்ப்பை அனுபவிக்க முடியும்.
மேலும் வரம்பற்ற தரவுக உட்பட வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் பெற 2ஜி வடிக்கையாளர்கள் ரூ.253/- திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1ஜிபி தரவும் வரம்பற்ற உள்ளூர் & எஸ்டிடி அழைப்புகள் பெற ரூ.345/- திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
ஹை-எண்ட் யுத்தம் : சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் vs மற்றபோன்கள்.!
மேலும் 90 நாட்களுக்கு உள்ளூர் / எல்.டி.டி அழைப்புகளையும் (30 நிமிடத்திற்குள்) வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். இதற்கிடையில், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உடன்படிக்கை செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைந்த இந்த நிறுவனம் ஆனது 400 மில்லியன் வாடிக்கையாளர்கள், 35 சதவிகித வாடிக்கையாளர் சந்தை பங்கு மற்றும் 41 சதவிகித வருவாய் சந்தை பங்கு ஆகியவற்றுடன் இந்தியாவில் முன்னணி தகவல் தொடர்பு வழங்குனராக மாறும்.


Click it and Unblock the Notifications