Home
How to

ஜியோ சிம் வேலை சரியாக செய்யவில்லையா.? என்ன செய்யவேண்டும்.!?

ஜியோ 4ஜி சேவையை தொடர்ந்து அனுபவிப்பது நல்ல யோசனைதான். ஆனால் அதற்கு 4ஜி சிம் ஒத்துழைக்க வேண்டுமே.!

"கபாலி டா.." என்ற ஸ்டைலில் "4ஜி டா" என்று வெளியே சொல்லிக்கொண்டு திரிந்தாலும் உள்ளுக்குள் நமக்கு மட்டும் தான் தெரியும் இந்த ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் செய்யும் 'மக்கர்' வேலைகள், என்ன என்னவென்று.!

இருப்பினும் வெறும் 150 எம்பியை வைத்துக்கொண்டு மாதம் முழுக்க இண்டர்நெட் பயன்படுத்திய நம்மில் பெரும்பாலோனோர்கள் இப்போது 4ஜி வேகத்தை அனுபவிக்க முக்கியமான காரணமாக ரிலையன்ஸ் ஜியோ மீதுள்ள நன்றி காரணமாகவும் அல்லது வேறு நிறுவனத்தின் 4ஜி சிம் வாங்கி பணத்தை வீணடிக்க விரும்பாலும் - என்ற நிலைபாட்டிற்குள் இருக்கும் நாம், ஜியோ 4ஜி சேவையை தொடர்ந்து அனுபவிப்பது நல்ல யோசனைதான். ஆனால் அதற்கு 4ஜி சிம் ஒத்துழைக்க வேண்டுமே.!

ஒருவேளை உங்களின் 4ஜி போனில் ஜியோ சிம் வேலை செய்யவில்லையா.? கவலை வேண்டாம் ஜியோ சிம் வேலை செய்ய வைக்க சில எளிமையான வழிமுறைகள் இருக்கின்றது. அதை உங்களிடம் பகிர்கிறோம்.!

சிம் கார்டு

சிம் கார்டு

முதலில் உங்களது ஜியோ சிம் கார்டு 4ஜி சப்போர்ட் செய்யும் ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளதா என்தை சரி செய்யுங்கள். சில கருவிகளில் ஒரு ஸ்லாட் மட்டுமே 4ஜி சப்போர்ட் செய்யும். 4ஜி சப்போர்ட் செய்யாத ஸ்லாட்டில் சிம் இருந்தால் அது வேலை செய்யாது

ரீஸ்டார்ட்

ரீஸ்டார்ட்

4ஜி சப்போர்ட் கொண்ட ஸ்லாட்டில் ஜியோ சிம் பொருத்தியதும் கருவியினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை சிம் கார்டினை கழற்றி மீண்டும் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்ததும் ஜியோ சிம் வேலை செய்யும். இப்பவும் வேலை செய்யாவிட்டால் உங்களது கருவியில் ஜியோ வேலை செய்யாது.

சிக்னல்

சிக்னல்

டூயல் சிம் கொண்ட கருவியில் பிரைமரி ஸ்லாட்டில் ஜியோ சிம் கார்டினை பொருத்துங்கள். பின் குறிப்பிட்ட சிம் கார்டின் டேட்டா ஆன் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரி பாருங்கள். இதற்கு நோட்டிபிகேஷன் பேனலில் மொபைல் டேட்டா சென்று ஆன் செய்ய வேண்டும்.

நெட்வொர்க்

நெட்வொர்க்

இனி மொபைல் போனின் நெட்வொர்க் செட்டிங்ஸ் சென்று பிரைமரி சிம் கார்டின் அனைத்து செட்டிங்ஸ்களும் சரியாக இருக்கின்றதா எனச் சரி பாருங்கள். மேலும் மொபைல் டேட்டா பயன்படுத்த பிரைமரி சிம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

எல்டிஇ நெட்வொர்க்

எல்டிஇ நெட்வொர்க்

பின் மொபைல் போனில் எல்டிஇ நெட்வொர்க் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வொர்க்ஸ் -- பிரெஃபர்டு நெட்வர்க் டைப் ஆப்ஷன் தேர்வு செய்ய வேண்டும்.

ஏபிஎன்

ஏபிஎன்

தேவையென்றால் ஏபிஎன் மூலம் இண்டர்நெட் செட்டப் செய்ய வேண்டும். இதற்கு உங்களது கருவியில் ஜியோ சிம் சிக்னல் இருக்க வேண்டும். இதைச் செயல்படுத்த செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வர்க்ஸ் -- அக்செஸ் பாயின்ட் நேம்ஸ் செல்ல வேண்டும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

இனி நெட்வொர்க் ஆப்பரேட்டர் ஆப்ஷன்களை மேனுவலாக தேர்வு செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் -- மொபைல் நெட்வொர்க்ஸ் -- நெட்வொர்க் ஆப்பரேட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

வன்பொருள்

வன்பொருள்

இனியும் ஜியோ சிம் வேலை செய்யவில்லை எனில் உங்களது மொபைல் போனின் மென்பொருள் அல்லது வன்பொருள் கோளாறு ஏற்பட்டிருக்கலாம். ஒரு வேலை சிம் கார்டு வேலை செய்து அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்றால் இதனை முயற்சிக்கலாம்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

கூகுள் பிளே ஸ்டோர் சென்று ஜியோ ஜாயின் ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பெரும்பாலும் ஜியோ சிம் வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்ட கருவிகளில் ஜியோ வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாற்று

மாற்று

ஒரு வேலை இவை எதுவும் வேலை செய்யவில்லை எனில் ஒன்று புதிய மொபைல் போன் அல்லது ஜியோஃபை கருவியை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. மேலும் புதிய கருவியை வாங்குவதை விட ஜியோஃபை கருவியின் விலை குறைவு ஆகும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உங்கள் 4ஜி டவுண்லோட் வேகத்தை அதிகரிக்க ஒரு சூப்பர் ஐடியா.!

Best Mobiles in India

English summary
How to fix jio sim issues on your 4G phone. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X