தரமாக ரெடியாகும் மோட்டோ இசெட்2 - நீங்க ரெடியா.?

இண்டர்நெட்டில் உலாவும் லீக்ஸ் தகவல்களின்படி மற்றும் ஊகங்களின்படி எப்சிசி சான்றிதழின் கீழ் மாதிரியின் எண் எக்ஸ்டி1797 என்று சுமத்தப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.

|

இரண்டு வாரங்களுக்கு முன்பு லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான மோட்டோரோலா அதன் இடைப்பட்ட மோட்டோ இசெட்2 ப்ளே ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இப்போது, நிறுவனம் இந்த மாத இறுதியில் அதன் தலைமை ஸ்மார்ட்போனான மோட்டோ இசெட்2 சாதனத்தை உருட்ட தயாராக உள்ளது.

மோட்டோரோலாவின் பிரேசிலியப் பிரிவு ஜூன் 21 அன்று தயாரிப்பு வெளியீடுக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் நிறுவனம் சாதனம் பற்றி எந்த உத்தியோகபூர்வ கருத்துக்கழியும் பகிரவில்லை. ஆனால் நாம் கடந்த ஆண்டு வெளியீட்டு முறைப்படி சென்றால் 2016-ஆம் ஆண்டில், மோட்டோரோலா மூன்று சாதனங்களை - மோட்டோ இசெட், இசெட் ப்ளே மற்றும் இசெட் போர்ஸ் ஆகிய கருவிகளை வெவ்வேறு கால இடைவெளியில் வெளியிடப்பட்டன.

மூன்று வெவ்வேறு நிகழ்வு

மூன்று வெவ்வேறு நிகழ்வு

இந்த ஆண்டு, மோட்டோரோலா அதேபோன்ற வெளியீட்டைத்தான் நிகழ்த்தும் என்று தெரிகிறது. அது ஒவ்வொரு சாதனத்திற்கும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளை நடத்தும் மற்றும் வரும் மாதங்களில் தொடர்ச்சியாக அவற்றை வெளியிடும் என்று தெரிகிறது.

மாதிரி எண் எக்ஸ்டி1797

மாதிரி எண் எக்ஸ்டி1797

எவ்வாறாயினும், இண்டர்நெட்டில் உலாவும் லீக்ஸ் தகவல்களின்படி மற்றும் ஊகங்களின்படி எப்சிசி சான்றிதழின் கீழ் மாதிரியின் எண் எக்ஸ்டி1797 என்று சுமத்தப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல் வெளியாகியுள்ளது.

5.5 அங்குல டிஸ்பிளே

5.5 அங்குல டிஸ்பிளே

அந்த மர்மமான மோட்டோ ஸ்மார்ட்போனில் ஒரு 5.5 அங்குல டிஸ்பிளே இடம்பெறும் மற்றும் ஒரு ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி பயன்படுத்தப்பட வேண்டும் என்று காட்டுகிறது. மேலும், அக்கருவி ஒரு 3000எம்ஏஎச் பேட்டரியில் இருந்து சக்தி பெறும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

மோட்டோ இ4 பிளஸ்

மோட்டோ இ4 பிளஸ்

மறுபுறம் மோட்டோ இ4 பிளஸ் சார்ந்த தகவல்களும் எப்சிசி ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன வெளியான தகவல்களின் கீழ் ஜூன் மாதம் 21-ஆம் தேதி நாடாகும் நிகழ்வில் மோட்டோ இ4 பிளஸ் வெளியகவும் சாத்தியங்கள் உள்ளன. மோட்டோ இ4 பிளஸ் ஒரு 5000எம்ஏஎச் பேட்டரித்திறன் கொண்டு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ஜூலை வரை சந்தைக்கு வராது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

21-ஆம் தேதி பிரேசிலில்

21-ஆம் தேதி பிரேசிலில்

மேலும் மோட்டோரோலா சந்தையில் பல ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 21-ஆம் தேதி பிரேசிலில் நடக்கும் ஒரு நிகழ்விற்காக நிறுவனம் பத்திரிகைஅழைப்புகளை அனுப்பியுள்ளது. எனினும், இப்போது வரை நிறுவனம் அறிமுகப்படுத்தப்போவது எந்த ஸ்மார்ட்போன் என்று தெரியவில்லை.

மோட்டோ எக்ஸ்4

மோட்டோ எக்ஸ்4

ஆனால், அக்கருவி மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனை பொறுத்தம்மட்டில் அக்கருவி இந்தியாவில் இந்த மாதத்திற்கு பின்னர் வெளியிடப்படலாம். மோட்டோ எக்ஸ் 4, ஜூன் 30 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஒரு புதிய ட்விட்டர் தகவல் கசிவு தெரிவிக்கிறது.

5.5 அங்குல டிஸ்பிளே

5.5 அங்குல டிஸ்பிளே

இந்த அம்சங்கள் சுவாரஸ்யமானதாக இருந்தாலும், மோட்டோ எக்ஸ் 4 ஒரு கண்ணாடி மற்றும் மெட்டல் சேசிஸ் மற்றும் மேலே 3டி கண்ணாடிடன் 5.5 அங்குல டிஸ்பிளேவும் கொண்டிருப்பதாக முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மோட்டோ எக்ஸ் 4 ஸ்மார்ட்போனின் வன்பொருளை பொறுத்தவரையில், ஸ்னாப டிராகன் 660 எஸ்ஓசி உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டோரோலா எக்ஸ் 4 ஆனது க்வால்காம் பாஸ்ட் சார்ஜ் 3.0 மற்றும் யூஎஸ்பி டைப்-சி ஆதரவுடன் 3800எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Moto Z2 might be announced on June 21. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X