Home
News

டேய்.. என்கிட்டயே வா.. ChatGPT-க்கு செக் வைத்த சுந்தர் பிச்சை.. Gmail முதல் Docs வரை பல AI அம்சங்கள் சேர்ப்பு!

கூகுள் (Google) நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை (Sundar Pichai) காட்டுத்தீ போல "வளரும்" சாட்ஜிபிடி-யின் வளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவர ஒரு சில தரமான வேலைகளை செய்துள்ளார். சாட்ஜிபிடி 4 (ChatGPT 4) அறிமுகமாகி இருக்கும் சூழ்நிலையில் கூகுள் சேவைகளில் நிறுவனத்தின் ஏஐ அம்சங்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார்!

க்ரியேட், கனெக்ட் மற்றும் கோலாப்ரேட் (Create, Connect, and Collaborate) அதாவது உருவாக்குதல், இணைத்தல் மற்றும் ஒத்துழைத்தல் என்கிற கொள்கையின் கீழ், கூகுள் நிறுவனம் அதன் கூகுள் வொர்க்ஸ்பேஸிற்கான (Google Workspace) ஏஐ-வார்டு டூல்களின் (AI-Powered Tools) ஒருங்கிணைப்பை அறிவித்துள்ளது.

டேய்.. என்கிட்டயே வா.. ChatGPT-க்கு செக் வைத்த சுந்தர் பிச்சை!

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், கூகுள் தனது ஏஐ சூப்பர்பவர்களை (AI Superpowers) கூகுள் டாக்ஸ் (Google Docs), ஜிமெயில் (Gmail), கூகுள் ஷீட்ஸ் (Sheets), கூகுள் மீட் (Meet), ஸ்லைட்ஸ் (Slides), சாட் (Chat) போன்ற பல்வேறு கூகுள் சேவைகளில் (Google Services) சேர்த்துள்ளது.

கூகுள் வொர்க்ஸ்பேஸில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ஏஐ-பவர்டு டூல்களின் வழியாக ஜிமெயில், கூகுள் டாக்ஸ், கூகுள் ஷீட்ஸ், ஸ்லைட்ஸ், கூகுள் மீட் மற்றும் கூகுள் சாட் போன்ற சேவைகளை பயன்படுத்துபவர்களால் பல்வேறு வகையான வேலைகளை - ஏஐ உதவியுடன் - மிகவும் எளிமையாக செய்ய முடியும்.

புதிய ஏஐ-வார்டு டூல்களால் என்னென்ன செய்ய முடியும்? ஜிமெயிலில் டிராஃப்ட் (Draft), ரிப்ளை (Reply), சம்மரைஸ் (Summarize) மற்றும் ப்ரையாராடைஸ் (Prioritize) செய்ய முடியும். கூகுள் ஸ்லைட்ஸில் ஆட்டோ ஜெனரேடட் இமேஜ்ஸ், ஆடியோ மற்றும் வீடியோவை (Create auto-generated images, Audio and Video) உருவாக்க முடியும்.

கூகுள் ஷீட்ஸில் ரா டேட்டாவில் இருந்து இன்சைட்ஸ்க்கு செல்வது (Raw data to insights), ஆட்டோ -கம்ப்ளீஷன் வழியிலான அனாலிசிஸ் (Analysis via auto-completion) பார்மூலா ஜெனரேஷன் (Formula generation) மற்றும் கான்டெக்ஷூவல் கேட்டகரைசேஷன் (Contextual categorization) போன்றவைகளை செய்ய முடியும்.

கூகுள் மீட்டில் புதிய பேக்கிரவுண்டை உருவாக்க முடியும் மற்றும் குறிப்பெடுக்க முடியும். கூகுள் சாட்டில் குறிப்பிட்ட காரியங்களை செய்வதற்கான வொர்க்ஃப்ளோஸை (Workflows) எனேபிள் செய்ய முடியும். கடைசியாக கூகுள் டாக்ஸில் ப்ரெயின்ஸ்டார்ம் (Brainstorm), ப்ரூஃப் ரீட் (Proofread), ரைட் (Write) மற்றும் ரீரைட் (Rewrite) செய்ய முடியும்.

மேற்கண்ட அனைத்து புதிய ஏஐ டூல்களுமே மிகவும் கவர்ச்சிகரமானதாக தோன்றனாலும் கூகுள் டாக்ஸ் மற்றும் ஜிமெயிலில் அணுக கிடைக்கும் ஏஐ திறன்களே மிகவும் பயனுள்ள அம்சங்களாக தெரிகின்றன. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் கட்டுரை ஒன்றை எழுத வேண்டுமா? உங்களுக்காக கூகுள் டாக்ஸ் அதை செய்யும்!

அதே போல ஒரு புதிய வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? அல்லது பிடிக்காத வேலையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டுமா? அல்லது விடுமுறை கேட்டு இமெயில் அனுப்ப வேண்டுமா? உங்களுக்காக அந்த வேலையை ஜிமெயிலே பார்த்து கொள்ளும். ஒரு நல்ல இமெயிலை எழுதுவது மட்டுமின்றி, அதை உங்களுக்காக அனுப்பியும் வைக்கும்.

மேற்கண்ட புதிய ஏஐ-பவர்டு அம்சங்களானது "ஒரே இரவில்" சாட்ஜிபிடி 4-ஐ காலி செய்து விடாது என்றாலும் கூட, எதுவுமே செய்யாமல் இருப்பதை விடவும், அவரச அவசரமாக ஏதாவது ஒன்றை செய்து சிக்கலில் மாட்டிக்கொள்வதை விடவும்.. ஒரு நல்ல நடவடிக்கை தான் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Introduced New AI Powered Tools In Gmail Docs Slides Sheets Meet and Chat To Rival ChatGPT 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X