Home
News

கூல்பேட் நிறுவனத்தின் 'கூல் 1 டூயல்' மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம்

கூல்பேட் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் 3GB ரேம், 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் அறிமுகமாகி உள்ளது.

By Siva

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி இடத்தில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான கூல்பேட் நிறுவனம் தற்போது தனது புதிய தயாரிப்பான கூல்1 டூயல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன் 3GB ரேம், 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உடன் தற்போது அனைத்து கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்காக கிடைக்கின்றது.

கூல்பேட் நிறுவனத்தின் 'கூல் 1 டூயல்' மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம்

இந்த புதிய மாடல் குறித்து கூல்பேட் இந்தியா சி.இ.ஓ சையது தாஜூதீன் கூறியபோது, 'இந்த புதிய மாடல் கூல் 1 டூயல் ஸ்மார்ட்போன் டூயல் கேமிரா வசதியுடன் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக விலையுயர்ந்த மொபைல் போன்களில் காணப்படும் மோனோகுரோம் மற்றும் கூல் டூயல் கேமிரா இந்த மாடலில் இருப்பதுதான் இதன் சிறப்பு' என்று கூறியுள்ளார்.

அதிநவீன போன்களுக்கு சவால்விடும் வகையில் வெளிவந்துள்ள இந்த போனின் விலை அமேசான் மூலம் வாங்கினால் ரூ.10,999 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதளத்தில் ஏப்ரல் 11 முதல் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்

2017-ஆம் ஆண்டில் இதுவரை வெளியான 8 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.!

கூல்1 டூயல் ஸ்மார்ட்போன் 5.5 ன்ச் ஐபிஎஸ் LCD டிஸ்ப்ளேவை கொண்டது. இதன் ரெசலூசன் 1080x1920 பிக்சல்ஸ் ஆகும். மேலும் இந்த போன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 652 ஆக்டோகோர் பிராஸசரை கொண்டது. மேலும் இந்த மாடல் அட்ரேனோ 510 கிராபிக்கை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கூல்1 டூயல் ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் கூடுதல் ஸ்டோரேஜ் தேவை என்றால் மைக்ரோ எஸ்டி கார்ட் போடும் வசதியும் இதில் உண்டு. இந்த மாடல் டூயல் அதாவது 13+13 MP பிரைமரி கேமிராவை பின்பக்கத்தில் கொண்டுள்ளது. இந்த கேமிராக்களில் ஆட்டோபோகஸ் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸில் எளிமையாக நான்கு வழிமுறையில் ஸ்கீரீன்ஷாட் எடுப்பது எப்படி?

அதுமட்டுமின்றி கலர் பேலன்ஸ், டூயல் LED பிஷாஷ ஆகியவையும் உண்டு. மேலும் 8GB அளவில் செல்பி கேமிராவும் இந்த மாடலில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செல்பி கேமிராவில் 80டிகிரி வைட் ஆங்கில் லென்ஸ் உள்ளது கூடுதல் சிறப்பாகும்

இந்த போனின் கனெக்டிவிட்டி பகுதியை பார்க்கும்போது இதில் 4G வசதி, VoLTE சப்போர்ட், வைபை, புளூடூத், ஜிபிஎஸ், எப்.எம் ரேடியோ, 3.3 mm

ஆடியோ ஜாக், மற்றும் யூஎஸ்பி டைப் போர்ட் ஆகியவை உண்டு. பேட்டரியை பொருத்தவரையில் இந்த மாடலில் 400mAh திறன் இருப்பதால் வேகமாக சார்ஜ் ஆகி நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும்

இந்த மாடலின் சென்சார் பகுதியை பார்த்தால், ஆக்சிலிரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், ஜிராஸ்கோப், மேக்னோமீட்டர், ஆகியவை உண்டு. மேலும் இந்த போன் 152x74.8x8.2 மிமீ அளவிலும் 173 கிராம் எடையும் கொனட்து.

மேலும் இதே 3GB கூல்பேட் கூல் 1 டூயல் கிடைக்கும் அதே நேரத்தில் 4GB மாடலும் ரூ.12,999 விலையில் அமேசான் நிறுவனத்தில் கிடைக்கின்றது. ஷோரூம்களில் இதன் விலை ரூ.13999 என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Coolpad Cool 1 Dual now comes with 3GB RAM and 32GB of inbuilt memory. The new variant of the device is cheaper than the original one and is priced at Rs 10,999. This variant is the most affordable Dual Camera phone in the market.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X