Home
News

பிஎஸ்என்எல் அதிரடி: 51 நாட்களுக்கு 153ஜிபி டேட்டா; முடிஞ்சா காலி பண்ணிக்கோ.!

இந்த பிஎஸ்என்எல் ரூ.248/- ஆனது நாடெங்கிலும் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கும் கிடைக்கும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் ஐபில் கிரிக்கெட் சீசன் திட்டங்களை தொடர்ந்து, அரசுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் அதன் ஐபில் கிரிக்கெட் திட்டமான ரூ.248/-ஐ அறிமுகம் செய்துள்ளது.

மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் இந்த திட்டத்தின் செல்லுபடி காலமும் 51 நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- திட்டத்தை அணுகும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள் உள்ளன.

1. மொத்தம் 153 ஜிபி டேட்டா

1. மொத்தம் 153 ஜிபி டேட்டா

ஐபிஎல் 2018 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காண உதவும் பிஎஸ்என்எல் ரூ.258/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும். அதாவது செல்லுபடியாகும் மொத்த காலத்திற்குள் 153 ஜிபி டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம்.

2. கடைசி 11 நாட்களுக்கு முன்பு வரை கிடைக்கும்.!

2. கடைசி 11 நாட்களுக்கு முன்பு வரை கிடைக்கும்.!

பிஎஸ்என்எல்-ன் இந்த சிறப்பு சலுகையானது, ஏப்ரல் 30, 2018 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதாவது ஐபில் சீசனின் கடைசி 11 நாட்களுக்கு முன்பு வரை கிடைக்கும்.

3. எந்தவிதமான அழைப்பு நன்மைகளும் கிடைக்காது.!

3. எந்தவிதமான அழைப்பு நன்மைகளும் கிடைக்காது.!

பிஎஸ்என்எல்-ன் ரூ.258/- ஆனது ஒரு குறிப்பிட்ட கால அளவிலான சலுகையாகும். இது ஐபிஎல் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும் ஒரு பிரத்யேக திட்டம் என்று, பிஎஸ்என்எல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம் இந்த ரூ.258/- வழியாக எந்தவிதமான அழைப்பு நன்மைகளும் கிடைக்காது.

4. திறந்தவெளி சந்தை திட்டமாகும்.!

4. திறந்தவெளி சந்தை திட்டமாகும்.!

இந்த பிஎஸ்என்எல் ரூ.248/- ஆனது நாடெங்கிலும் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கும் கிடைக்கும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல்

இதேபோன்றதொரு ஐபில் லைவ் ஸ்ட்ரீமிங் சலுகையை, ரூ.251/-க்கு ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல், அதன் டிவி ஆப் வழியாக அனைத்து ஐபில் 2018 போட்டிகளையும் இலவச லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL's New Offer: Five Benefits Of Rs. 248 Prepaid Recharge Plan. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X