Home
How to

ஏர்டெல்-ன் இலவச ஐபில் லைவ் ஸ்ட்ரீமிங் சலுகை; பெறுவது எப்படி.? (வழிமுறைகள்)

இன்றுமுதல் தொடங்கி அடுத்த 51 நாட்களுக்கு நடக்கும் ஐபில் 2018 போட்டிகளை மனதிற்கொண்டு, ஏர்டெல் அறிவித்துள்ள இந்த இலவச சலுகையின் கீழ்..

By Muthuraj

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், அதன் வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாட்டான ஏர்டெல் டிவி ஆப் வழியிலான ஒரு அட்டகாசமான இலவச சலுகையை அறிவித்துள்ளது.

ஏர்டெல்-ன் இலவச ஐபில் லைவ் ஸ்ட்ரீமிங் சலுகை; பெறுவது எப்படி.?

இன்றுமுதல் தொடங்கி அடுத்த 51 நாட்களுக்கு நடக்கும் ஐபில் 2018 போட்டிகளை மனதிற்கொண்டு, ஏர்டெல் அறிவித்துள்ள இந்த இலவச சலுகையின் கீழ், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரும் அனைத்து ஐபில் 2018 போட்டிகளையும் இலவச லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

இதை பெறுவது எப்படி.?

இதை பெறுவது எப்படி.?

இலவச லைவ் ஸ்ட்ரீமிங் மட்டுமின்றி, ஹாட்ஸ்டார் ஆப் வழியாக விவோ ஐபில் 2018 ஹைலைட்ஸ்களையும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலவச சேவைகள் யாருக்கெல்லாம் கிகிடைக்கும்.? மற்றும் இதை பெறுவது எப்படி.?

வழிமுறைகள்.!

வழிமுறைகள்.!

மேற்குறிப்பிட்டபடி, இந்த இலவச வாய்ப்பானது அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். நிகழும் ஐபிஎல் போட்டிகளின் வரம்பற்ற இலவச ஸ்ட்ரீமிங்கை பெற, ஒருவர் வெறுமனே ஏர்டெல் டிவி பயன்பாட்டின் புதிய அப்டேடட் பதிப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும், அவ்வளவுதான்.!

ஒரு பிரத்யேக கிரிக்கெட் செக்ஷன்.!

ஒரு பிரத்யேக கிரிக்கெட் செக்ஷன்.!

அப்டேட் செய்த பின்னர், ஏர்டெல் டிவி ஆப்பில் உள்நுழைய ஒரு பிரத்யேக கிரிக்கெட் செக்ஷனை காண்பீர்கள், அதன் வழியாக மேலே குறிப்பிட்டில்ல இலவச சேவைகளை அணுகலாம். இந்த இலவச ஸ்ட்ரீமிங் சேவையை அனுபவிக்க, ஏர்டெல் டிவி பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பை நிறுவ வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஏர்டெல் நெட்வொர்க்கில் இல்லாத பயனர்கள்.?

ஏர்டெல் நெட்வொர்க்கில் இல்லாத பயனர்கள்.?

இந்த ஆப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரு தளங்களிலும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நெட்வொர்க்கில் இல்லாத பயனர்கள், ஒரு புதிய ஏர்டெல் 4ஜி சிம் கார்டை வாங்கி, ஸ்மார்ட்போனில் உள்ள 4ஜி சிம் ஸ்லாட்டில் சொருகி, ஏர்டெல் டிவி ஆப்பை நிறுவ வேண்டும். பின்னர் மேற்கூறப்பட்டுள்ள வழிமுறைகளின் கீழ் இலவச சலுகைகளை அனுபவிக்கலாம்.

ஜூன் 2018 வரை மட்டுமே கிடைக்கும்.!

ஜூன் 2018 வரை மட்டுமே கிடைக்கும்.!

ஏர்டெல் போஸ்ட்பெயிட் மற்றும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் டிவி ஆப் வழியாக கிடைக்கும் இந்த இலவச சேவையானது ஜூன் 2018 வரை மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், ஏர்டெல் டிவி பயன்பாட்டின் புதிய பதிப்பில், இலவச லைவ் ஸ்ட்ரீமிங் மட்டுமின்றி, பயனர்களுக்கு பரிசுகளை வழங்கும் கேம்ஸ் மற்றும் போட்டிகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
ஏர்டெல்-ன் ஐபில் 5ஜி சோதனை.!

ஏர்டெல்-ன் ஐபில் 5ஜி சோதனை.!

லைவ் ஸ்ட்ரீமிங் தவிர்த்து, இன்று முதல், அதாவது ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் தொடங்கும் ஐபில் கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் மைதானங்களில், ஏர்டெல் அதன் 5ஜி சோதனையை - மேசிவ் மிமோ ப்ரீ-5ஜி தொழில்நுட்ப சோதனை- நிகழ்த்தவுள்ளதும், இந்த 5ஜி டெஸ்ட் ஆனது டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, மொஹலலி, இந்தூர், ஜெய்ப்பூர், பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
IPL 2018: How to watch livestream for IPL cricket matches for free on Airtel. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X