ஜியோ அதிரடி: வெறும் ரூ.251/-க்கு 102ஜிபி டேட்டா; பெறுவது எப்படி.?
கிரிக்கெட் சீசன் பேக் என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன.? செல்லுபடி காலம் என்ன.? என்பதை விரிவாக காண்ணோம்.
ஒட்டுமொத்த இந்திய தேசமும் மிகப்பிரபலமான ஐபில் கிரிக்கெட் போட்டிகளுக்காக தயாராகி வரும் நிலைப்பாட்டில், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ, கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஒரு சூப்பர் பட்ஜெட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது.
கிரிக்கெட் சீசன் பேக் என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகியுள்ள இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன.? செல்லுபடி காலம் என்ன.? என்பதை விரிவாக காண்ணோம்.

விலை.?
இந்த திட்டத்தின் வழியாக கிட்டத்தட்ட எல்லா ஐபில் போட்டிகளையும் உங்களால் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும் என்று கூறினால் நம்புவீர்களா.? நம்பித்தான் ஆகவேண்டும். கூறப்படும் ஜியோ கிரிக்கெட் சீசன் பேக் ஆனது ரூ.251/- என்கிற மதிப்பை கொண்டுள்ளது.

டேட்டா.?
இது செல்லுபடியாகும் காலத்திற்குள் மொத்தம் 102 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் எப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது பற்றிய விவரங்களை ஜியோ இன்னும் அறிவிக்கவில்லை.

தினசரி வரம்பு.?
இருப்பினும் இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 51 நாட்கள் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்று யூகிக்க முடிகிறது. எனினும் இந்த திட்டத்தின் தினசரி வரம்பு பற்றிய விவரங்கள் வெளிப்படுத்தவில்லை.

பரிசுகளை வழங்கும் ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங்.!
இந்த கிரிக்கெட் சீசன் பேக் உடன், மேலும் இரண்டு புதிய முயற்சிகளை ஜியோ அறிவித்துள்ளது. ஒன்று பங்கேற்பாளர்களுக்கு பரிசுகளை வழங்கும் 'ஜியோ கிரிக்கெட் ப்ளே அலாங்' என்கிற மொபைல் கேம், மற்றொன்று 'ஜியோ தன் தாணா தன் லைவ்' என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி.

இருவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.!
கூறப்படும் 'ஜியோ தன் தாணா தன் லைவ்' என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியானது மைஜியோ பயன்பாட்டின் வழியாக மட்டுமே பார்க்க முடியும் என்பதும், இந்த நிகழ்ச்சியானது ஜியோ பயனர்கள் மற்றும் ஜியோவை பயன்படுத்தாத நபர்கள் என இருவருக்கும் திறந்து விடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications