பிஎஸ்என்எல்-ன் 'டேட்டா சுனாமி' பேக் அறிமுகம்; ஷாக்கில் ஜியோ மற்றும் ஏர்டெல்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் வருகையின் போது கிளம்பி அடங்கிய கட்டண யுத்தமானது தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது.

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் வருகையின் போது கிளம்பி அடங்கிய கட்டண யுத்தமானது தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளது. அதை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது யார் என்று கூறினால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகாதான் இருக்கும். அது வேறு யாருமில்லை - அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தான்.!

பிஎஸ்என்எல்-ன் 'டேட்டா சுனாமி' பேக் அறிமுகம்; ஷாக்கில் ஜியோ & ஏர்டெல்!

<strong>ஜியோ டிடிஎச் சேவை பற்றி முக்கிய அறிவிப்பு; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!</strong>ஜியோ டிடிஎச் சேவை பற்றி முக்கிய அறிவிப்பு; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!

ஆம். பிஎஸ்என்எல் எனும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக, குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிராக அதன் ரூ.98/- என்ற சமீபத்திய ப்ரீபெய்ட் கட்டணத் திட்டத்தை அறிவித்துள்ளது.

செல்லுபடி காலம்.?

செல்லுபடி காலம்.?

ரூ.100/-க்கும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த பிஎஸ்என்எல் திட்டமானது, மொத்தம் 39 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடி காலம் 26 நாட்கள் ஆகும். பிஎஸ்என்எல்-ன் இந்த புதிய எஸ்டிவி 98 ஆனது "டேட்டா சுனாமி' பேக் என அழைக்கப்படுகிறது என்பதும், இது உலக தொலைத்தொடர்பு தினம் அன்று அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரீசார்ஜ் செய்வது எப்படி.?

ரீசார்ஜ் செய்வது எப்படி.?

இந்த புதிய கட்டணத் திட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருந்தால், மலிவான விலையில் அதிக டேட்டா நன்மையை தேடுகிறீர்கள் என்றால், ரூ. 98 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய, நிறுவனத்தின் ரீசார்ஜ் போர்டலை அல்லது இதர மூன்றாம் தரப்பு ரீசார்ஜ் போர்ட்டல்களை அணுகலாம்.

இதர நன்மைகள்.?

இதர நன்மைகள்.?

பிஎஸ்என்எல்-ன் இந்த டேட்டா சுனாமி பேக் ஆனது ஒரு டேட்டா-ஒன்லி பேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இது எந்தவிதமான குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் சலுகைகளையும் வழங்காது என்று அர்த்தம். இந்த இடத்தில் தான் பிஎஸ்என்எல் போட்டியை கிளப்பியுள்ளது. அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.99 போன்ற திட்டங்களுடன் கடுமையாக போட்டியிடுகிறது.

இந்தியாவிலேயே பிஎஸ்என்எல் மட்டும் தான்.?!

இந்தியாவிலேயே பிஎஸ்என்எல் மட்டும் தான்.?!

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ், பிஎஸ்என்எல் 26 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குவதால், இது டெலிகாம் துறைக்குள் புதிய பாணி ஒன்றை தூண்டியுள்ளது. ஆக மொத்தம், தற்போது வரையிலாக இந்தியாவிலேயே, நாள் ஒன்றிற்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை மிகவும் மலிவான விலைக்கு கொடுப்பது பிஎஸ்என்எல் தான்.

போட்டியாளர்களின் திட்டங்கள்.?

போட்டியாளர்களின் திட்டங்கள்.?

ரிலையன்ஸ் ஜியோவின் 1.5ஜிபி அளவிலான டேட்டா வழங்கும் திட்டம் ரூ.149 /- ஆகும். ஆனால் இதன் செல்லுபடி காலம் 28 நாட்கள் ஆகும். உடன் இந்த ஜியோ 149-ன் கீழ் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிஎஸ்என்எல், அதன் ரூ.248/-ஐ அறிமுகம் செய்ததும், அது நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 51 நாட்களுக்கு வழங்குகிறது என்பதும், சமீபத்தில் அதன் ரூ.188-ஐ அறிமுகம் செய்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

?rel=0&wmode=transparent" frameborder="0">

Samsung Galaxy J4 Plus

Samsung Galaxy J4 Plus First Impressions

Best Mobiles in India

English summary
BSNL Heats Up Data Tariff War by Introducing 39GB Data Pack at Rs 98. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X