Home
News

தமிழ்நாடு ஸ்பெஷல்: பிஎஸ்என்எல் ரூ.118/-ல் அன்லிமிடெட் வாய்ஸ் + டேட்டா.!

இந்த புதிய பிஎஸ்என்எல் திட்டமானது ஏப்ரல் 1, 2018 முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

By Muthuraj

அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், தமிழ் நாடு மற்றும் சென்னை வட்டடங்களில் உள்ள அதன் வாடிக்கையாளர்களுக்காக ரூ.118/- என்கிற ஒரு புதிய காம்போ ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் டேட்டாவை வழங்குகிறது. இது இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியாகி டெலிகாம் சந்தையை கலக்கிய ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/-க்கு எதிரான ஒரு திட்டமாகும்.

இருப்பினும், இந்த புதிய திட்டமானது தற்போது வரை தமிழ்நாடு வட்டாரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதே திட்டம், இதர வட்டாரத்தில் எப்போது வெளியாகும் என்பது சார்ந்த தகவல் இல்லை. மற்றும் இந்த புதிய பிஎஸ்என்எல் திட்டமானது ஏப்ரல் 1, 2018 முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் வாய்ஸ் நன்மை.!

அன்லிமிடெட் வாய்ஸ் நன்மை.!

நன்மைகளை பொறுத்தவரை, (மும்பை மற்றும் தில்லி வட்டங்களை தவிர்த்து) ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் நன்மைகளை வழங்கும். இந்த திட்டத்தின் தினசரி வரம்பு பற்றிய விவரங்கள் இல்லை. எனவே மற்ற பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்களில் இருக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் நன்மை இருக்கும் என்று கருதுவது பாதுகாப்பானது.

இலவச ரிங்டோன்.!

இலவச ரிங்டோன்.!

டேட்டா நன்மையை பொறுத்தவரை, செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் இலவச ரிங்டோன் (Personalised Ring Back Tone) சேவையையும் பயனர்கள் பெறுவார்கள். இந்த சேவையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு பாடலை மாற்றியமைக்கலாம் என்பதும், ஆனால் அவ்வாறு செய்வதற்கு கூடுதல் கட்டணங்கள் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2ஜிபி அளவிலான டேட்டா.!

2ஜிபி அளவிலான டேட்டா.!

பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து அறிமுகமாகி உள்ள இந்த புதிய திட்டமானது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.98/-க்கு எதிரான ஒரு திட்டமாகும். ஜியோவின் ரூ.98/- ஆனது மொத்தம் 2ஜிபி அளவிலான டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 300 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
ஐடியா செல்லுலார், பார்தி ஏர்டெல், டாடா டோகோமோ.!

ஐடியா செல்லுலார், பார்தி ஏர்டெல், டாடா டோகோமோ.!

இதே போல், ஐடியா செல்லுலார், அதன் பயனர்களுக்கு ரூ.109/- திட்டத்தை வழங்குகிறது. மற்ற வட்டாரங்களில் 14 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டம் இமாச்சலப் பிரதேச வட்டத்தில் மட்டும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டமானது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மொத்தம் 1ஜிபி டேட்டா மற்றும்ஜ ரோமிங் உட்பட வரம்பற்ற வாய்ஸ் நன்மைகள் ஆகியவைகளை வழங்குகிறது. இறுதியாக, பார்தி ஏர்டெல் ரூ.93/-ன் கீழும், டாடா டோகோமோ ரூ.82/-ன் கீழும் இதேபோன்ற நன்மைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL Unveils Prepaid Combo STV 118 Offering 1GB Data and Unlimited Voice for 28 Days. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X