யாரெல்லாம் பிஎஸ்என்எல் சேவையை கேலி செஞ்சீங்க.? இதோ ரூ.39 மற்றும் 4ஜி மாஸ்டர் பிளான்.!

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் ரூ.39/- என்கிற புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

|

இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் ரூ.39/- என்கிற புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் ஏற்பட்ட கட்டண யுத்தத்தில் ஓரளவு தாக்குப்பிடித்த நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல், தொடர்ச்சியான முறையில் போட்டித்தன்மை மிக்க ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்வதோடு சேர்த்து, அதன் 4ஜி சேவையை தொடங்கும் முனைப்பிலும் கடுமையாக பணியாற்றி வருகிறது.

ரூ.39/-ன் செல்லுபடி காலம் என்ன.?

ரூ.39/-ன் செல்லுபடி காலம் என்ன.?

இந்நிலைப்பாட்டில் பிஎஸ்என்எல் அதன் அன்லிமிடெட் திட்டமான ரூ.39/-ஐ இன்று அறிவித்துள்ளது. நன்மைகளை பொறுத்தவரை, வரம்பற்ற குரல் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் (Personalised Ring Back Tone) ஆகிய நன்மைகளை மொத்தம் 10 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

தேசிய ரோமிங் உட்பட.!

தேசிய ரோமிங் உட்பட.!

வரம்பற்ற அழைப்பு நன்மைகளை பொறுத்தவரை, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் வலை அமைப்பில் உள்ள தேசிய ரோமிங் உட்பட அனைத்து அழைப்புகளை நிகழ்த்தலாம். துரதிருஷ்டவசமாக, இந்த குறிப்பிட்ட திட்டத்தின் வாய்ஸ் நன்மைகளானது, தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களில் அணுக கிடைக்காது.

பிஎஸ்என்எல் ரூ.39/-ன் நன்மைகள்.!

பிஎஸ்என்எல் ரூ.39/-ன் நன்மைகள்.!

குரல் அழைப்பு நன்மைகளை தவிர்த்து, செல்லுபடியாகும் பத்து நாட்களுக்கும் எந்த நெட்வொர்க் உடனாகவும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. உடன் மேற்குறிப்பிட்டுள்ளபடி, இலவச பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் வசதியும் கிடைக்கும். பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த புதிய திட்டமானது, பான்-இந்தியா அடிப்படையிலான ஒரு திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.99/-ன் நன்மைகள்.!

பிஎஸ்என்எல் ரூ.99/-ன் நன்மைகள்.!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்டிவி 39 திட்டத்தை போன்றே பிஎஸ்என்எல்-ன் ரூ.99/- மற்றும் ரூ.319/- ஆகிய திட்டங்களும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. இந்த இரண்டு திட்டங்களும், ரூ.39/-ஐ போன்றே, ஒரு பிரத்யேக வாய்ஸ் திட்டங்கள் ஆகும். நன்மைகளை பொறுத்தவரை, ரூ.99/- ஆனது, நாடு முழுவதும் (மும்பை மற்றும் டெல்லி தவிர) 26 நாட்களுக்கு எந்தவொரு நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் இலவச பெர்சனலைஸ்டு ரிங் பேக் டோன் நன்மையை வழங்குகிறது

ஜியோ ரூ.49/-ன் நன்மைகள்.!

ஜியோ ரூ.49/-ன் நன்மைகள்.!

மறுகையில் உள்ள எஸ்டிவி 319 ஆனது, எந்தவிதமான இதர நன்மைகளும் இல்லாத (இலவச எஸ்எம்எஸ் உட்பட) வரம்புக்குட்பட்ட குரல் அழைப்பு நன்மையை மட்டுமே வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும். நிறுவனத்தின் பிரதான போட்டியாளரான ஜியோ, ரூ.49/-க்கு 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் போன்ற நன்மைகளை, ஒரு மாத காலம் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்-ன் மாஸ்டர் பிளான்.!

பிஎஸ்என்எல்-ன் மாஸ்டர் பிளான்.!

சமீபத்தில் பிஎஸ்என்எல், அதன் போட்டியாளர்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவங்களுடன் கடும் போட்டியை நிகழ்த்தும் முனைப்பின் கீழ் அதன் 4ஜி நடவடிக்கையை ஒன்றை எடுத்தது. இந்தியாவின் டெலிகாம் துறையில் என்ன ஆபர் அறிமுகமாக வேண்டும்.? அது என்ன விலையை கொண்டிருக்க வேண்டும்.? என்னென்ன நன்மைகளை வழங்க வேண்டும் என்பது நிர்ணயம் செய்யும் "சக்திகளான" ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களை எதிர்க்கும் அல்லது போட்டியிடும் நோக்கத்தின் கீழ், பிஎஸ்என்எல் அதன் நான்காவது தலைமுறை அல்லது 4ஜி சேவைகளுக்கான 2100 மெகாஹெர்ட்ஸ் பேன்டின் 5 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் ஸ்லாட்டை, மிக விரைவில் பெற உள்ளது.

பார்தி ஏர்டெல்-க்கு எதிராக செய்லபடும்.!

பார்தி ஏர்டெல்-க்கு எதிராக செய்லபடும்.!

பிஎஸ்என்எல்-ன் இந்த நகர்வானது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்-க்கு மட்டுமின்றிமட்டுமின்றி வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்களுக்கும் எதிராக செய்லபடும் என்பது வெளிப்படை. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுப் ஸ்ரீவஸ்தவா, "விரைவில், 2100 மெகா ஹெர்ட்ஸில் 5 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் ஆனது ராஜஸ்தானை தவிர்த்து,சேவைகளுக்கான உரிமம் பெற்றுள்ள மீதமுள்ள 21 வட்டங்களில் அணுக கிடைக்கும். 800 மெகா ஹெர்ட்ஸ் ரேடியோ அலைகளில் 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்." என்று கூறியுள்ளார்.

இனி அதை 4ஜி சேவைக்கு பயன்படுத்தும்.!

இனி அதை 4ஜி சேவைக்கு பயன்படுத்தும்.!

டெலிகாம் துறையில் மிக உயர்ந்த முடிவுகளை எடுக்கும், டெலிகாம் கமிஷன் ஆனது, பிஎஸ்என்எல் உடன் நடக்கும் அடுத்த சந்திப்பில், 4ஜி வளியலைகளை அனுமதிப்பதற்காக முன்மொழிவு கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2100 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரமின் கீழ், மூன்றாம் தலைமுறை (3ஜி) சேவையை வழங்கி வரும் பிஎஸ்என்எல், இனி அதை 4ஜி அடிப்படையிலான வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளுக்கு உகந்ததாக பயன்படுத்த விரும்புகிறது.

வெறும் ரூ.20/-க்கு 4ஜி சிம் கார்ட்.!

வெறும் ரூ.20/-க்கு 4ஜி சிம் கார்ட்.!

"2100 மெகாஹெர்ட்ஸ்-ன் கீழ் கூடுதலாக ஐந்து யூனிட்களில் 4ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகளை வழங்குவதன் மூலம், பயன்படுத்தப்படாத ஸ்பெக்ட்ரம் வழங்கல் மீதான பயன்பாடுகள் அதிகரிக்கும். இதனால் 2ஜி, 3ஜி மற்றம் 4 ஜி சேவைகளை ஒரே நேரத்தில் வழங்கலாம்" என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் மிகப் பெரிய நெட்வொர்க் தடத்தினை கொண்டுள்ள பிஎஸ்என்எல், வெறும் ரூ.20/-க்கு 4ஜி சிம் கார்டை அறிவித்துள்ளதும், அதன் வழியாக 110 மில்லியன் நுகர்வோர்களை 4ஜி சிம் அல்லது யுஐஎம்ஐ-க்கு (யுனிவர்சல் சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கு) அப்கிரேட் செய்ய திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

How to Find a domain easily for your business (TAMIL)
கர்நாடகாவின் ஷிவமோகா நகரில்.!

கர்நாடகாவின் ஷிவமோகா நகரில்.!

முன்னதாக கர்நாடகாவின் ஷிவமோகா நகரில், பிஎஸ்என்எல் அதன் முதல் 4ஜி மொபைல் டவர் ஆப்ரேட்டரை நிறுவது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் பல தொலைத்தொடர்பு துறை சார்ந்தஅப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்து இருக்கவும்.

Best Mobiles in India

English summary
BSNL Unveils Rs 39 Prepaid Voice Calling Plan for 10 Days. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X