Home
News

கேப் விடாம அடிக்கும் Airtel.. Jio-விற்கு எதிராக.. தொடர்ச்சியாக 3வது புதிய ரீசார்ஜ் அறிமுகம்!

"கேப் விடாம அடிக்குறதுன்னா இதுதானா?" என்று கூறுமளவிற்கு பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம், புயல் வேகத்தில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்த கையோடு, தற்போது மேலுமொரு புதிய ரீசார்ஜை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் எல்லாமே சமீபத்தில் அறிமுகமான ஜியோ பிளஸ் (Jio Plus) சேவைக்கு எதிரானது என்பதில் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஜியோ பிளஸின் கீழ் ரூ.299, ரூ.399, ரூ.599 மற்றும் ரூ.699 என மொத்தம் 4 போஸ்ட்பெயிட் திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

கேப் விடாம அடிக்கும் Airtel, தொடர்ச்சியாக 3வது புதிய ரீசார்ஜ் அறிமுகம்

ஜியோ பிளஸ் திட்டங்களுக்கு எதிரான முதல் நடவடிக்கையாக பார்தி ஏர்டெல் நிறுவனமானது ரூ.599 க்கு புதிய பிளாட்டினம் போஸ்ட்பெயிட் (Airtel Platinum Post-paid) திட்டத்தை அறிமுகம் செய்தது; அதனை தொடர்ந்து ரூ.799 க்கு புதிய ஏர்டெல் பிளாக் (Airtel Black) போஸ்ட்பெயிட் திட்டத்தையும் அறிமுகம் செய்தது.

தற்போது ரூ.998 க்கு மேலுமொரு புதிய ஏர்டெல் பிளாக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் எத்தனை போஸ்ட்பெய்ட் கனெக்ஷன்கள் கிடைக்கும்? ஒவ்வொரு கனெக்ஷனிற்கும் எவ்வளவு டேட்டா கிடைக்கும்? ஓடிடி உட்பட கூடுதலாக வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ஏர்டெல் பிளாக் ரூ.998 திட்டத்தின் போஸ்ட்பெய்ட் நன்மைகள்: இந்த திட்டம் 2 போஸ்ட்பெய்ட் (மற்றும் 1 எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் கனெக்ஷன்) உட்பட மொத்தம் 3 கனெக்ஷன்களுடன் வருகிறது. மற்ற ஏர்டெல் பிளாக் திட்டங்களை போலவே இந்த திட்டத்தின் நன்மைகளையும் நீங்கள் 'கஸ்டமைஸ்' செய்யலாம். ஆனால் ரூ.998-ன் அடிப்படை சலுகைகளானது போஸ்ட்பெய்ட் (மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்) நன்மைகளுடன் தான் வருகிறது.

ரூ.998-ன் கீழ் கிடைக்கும் 2 ஏர்டெல் போஸ்ட்பெய்டு கனெக்ஷன்களில் ஒன்று வழக்கமான கனெக்ஷனாகும் மற்றொன்று இலவச ஆட்-ஆன் கனெக்ஷனாகும். இந்த திட்டம் மொத்தம் 105ஜிபி டேட்டாவை வழங்கும். உடன் 200ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர் வசதியும் கிடைக்கும் (அதாவது பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு நகர்த்தும் வசதியும் கிடைக்கும்)

மற்ற போஸ்ட்பெய்ட் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.998-ன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited voice Calling) மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்றவைகள் கிடைக்கும். கடைசியாக வின்க ம்யூசிக் (Wynk Music), ஹலோ ட்யூன்ஸ் (Hello Tunes), எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் (Xstream Mobile Pack) போன்றவைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் பிளாக் ரூ.998 திட்டத்தின் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் நன்மைகள்: முன்னரே குறிப்பிட்டபடி, இது போஸ்ட்பெயிட் கனெக்ஷன் உடன் சேர்த்து ஃபைபர் மற்றும் லேண்ட்லைன் சேவைகளை உள்ளடக்கிய ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் கனெக்ஷனையும் வழங்கும். இதன் கீழ் கிடைக்குன் பிராட்பேண்ட் கனெக்ஷன் 40 எம்பிபிஎஸ் என்கிற ஸ்பீடில் அன்லிமிடெட் டேட்டாவையும், லேண்ட்லைனில் அன்லிமிடெட் கால்களையும் வழங்கும்.

ஏர்டெல் பிளாக் ரூ.998 திட்டத்தின் ஓடிடி நன்மைகள்: ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் (Airtel Xstream App) போன்றவைகளுக்கான இலவச அணுகல் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Back to Back New Postpaid Plans From Airtel New Rs 998 Black Plan Introduced Check Details Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X