Home
News

சைலன்ட்-ஆ அறிமுகமான புது Airtel திட்டம்.. ஒரே கல்லுல 2 மாங்காய் வேணும்னா இதுதான் பெஸ்ட் ரீசார்ஜ்!

ஒரே கல்லில் 2 மாங்காய் என்கிற கூற்றுக்கு ஏற்றாற் போல, இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் (Bharti Airtel), ஒரே ஒரு ரீசார்ஜ் வழியாக ஒரே குடும்பத்தில் உள்ள 2 பேருக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் புதிய ஃபேமிலி பிளானை (Family Plan) அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் ரூ.599 க்கு பிளாட்டினம் போஸ்ட்பெய்ட் (Postpaid Platinum) என்கிற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 2 கனெக்ஷனை வழங்கும் இந்த திட்டமானது மொத்தம் எத்தனை ஜிபி டேட்டாவை வழங்குகிறது? இதன் கீழ் கிடைக்கும் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

ரூ.599-க்கு புதிய Airtel ஃபேமிலி பிளான் அறிமுகம்!

ஏர்டெல் ரூ 599 போஸ்ட்பெய்டு பிளாட்டினம் திட்டத்தின் நன்மைகள்: ஏர்டெல் நிறுவனத்தின் இந்த புதிய போஸ்ட்பெய்டு திட்டமானது ரூ.599 என்கிற மாதாந்திர செலவின் கீழ் 2 கனெக்ஷனை (1 மெயின் கனெக்ஷன் மற்றும் 1 ஆட்-ஆன் கனெக்ஷன்) வழங்கும். அதாவது இந்த திட்டத்தை ஒரே குடும்பத்தில் உள்ள இருவர் பயன்படுத்தலாம்.

டேட்டா நன்மைகளை பொறுத்தவரை, இது 75 ஜிபி "வழக்கமான" டேட்டா மற்றும் ஆட்-ஆன் கனெக்ஷனிற்காக 30 ஜிபி "கூடுதல்" டேட்டா என மொத்தம் 105 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். அதாவது மொத்தமாக கிடைக்கும் 105ஜிபி டேட்டாவும் ஃபேமிலி பூலில் (Family Pool) இருக்கும் மற்றும் அதை 2 பயனர்களுமே பயன்படுத்தலாம்!

ஒருவேளை ரூ.599 பிளாட்டினம் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட மொத்த டேட்டாவையும் காலி செய்துவிட்டால், அதாவது 105ஜிபி டேட்டாவையம் நீங்கள் பயன்படுத்திவிட்டால், அதன் பின்னர் நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு எம்பி-க்கும் (1Mb) இரண்டு பைசா (2 Paisa) கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

கூடுதலாக, இந்த திட்டம் 200 ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவருடன் (Data rollover) உடன் வருகிறது. இதன் கீழ் நீங்கள் பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு நகர்த்தலாம். டேட்டா நன்மையை தவிர்த்து, இது லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மைகளையும் வழங்குகிறது.

எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.599 திட்டத்தின் கீழ் உள்ள 2 கனெக்ஷன்களுக்கும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் (லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங்) கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இது, மாதாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை விரும்பாத சிறிய குடும்பத்தின் டிஜிட்டல் மற்றும் மொபிலிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு நல்ல போஸ்ட்பெயிட் திட்டமாகும்.

ஏர்டெல் அதன் 5ஜி பிளஸ் சேவைகளை அனுபவிக்க அனைத்து ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் அழைப்பு விடுத்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் மற்றும் உங்கள் பகுதியில் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் அணுக கிடைத்தால் உங்களால் ஏர்டெல்-ன் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

நினைவூட்டும் வண்ணம் ஏர்டெல்-ன் 5ஜி பிளஸ் சேவைகளானது இந்தியாவில் உள்ள 260 க்கும் மேற்பட்ட நகரங்களில் அணுக கிடைக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து 5ஜி ஸ்மார்ட்போன்களுடனும் இணக்கமானதாக இருக்கும் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க்கின் வேகமானது தற்போதைய 4ஜி நெட்வொர்க் வழியாக கிடைக்கும் வேகத்தை விட 20 - 30 மடங்கு அதிகமாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Introduced New Postpaid Family Plan For Rs 599 Which Offers 2 Connections Check All Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X