Home
News

ஒரே ரீசார்ஜில் முப்பெரும் நன்மைகள்.. போதும் போதும்னு டேட்டா, ஓடிடி, டிடிஎச்-ஐ வழங்கும் புதிய Airtel திட்டம்!

ஒரே ஒரு ரீசார்ஜ்ஜின் கீழ் டேட்டா, டிடிஎச் மற்றும் ஓடிடி போன்ற 3 முக்கிய நன்மைகளை வழங்கும் புதிய ஏர்டெல் ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன ரீசார்ஜ்? அதன் விலை நிர்ணயம் என்ன? டேட்டா, டிடிஎச், ஓடிடி-ஐ தவிர்த்து இது வேறு என்னென்ன நன்மைகளை வழங்கும்? இதோ விவரங்கள்:

பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.799 க்கு ஒரு புதிய ஏர்டெல் பிளாக் போஸ்ட்பெய்ட் திட்டத்தை (Airtel Black Post-paid Plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 2 போஸ்ட்பெய்ட் கனெக்ஷன்ஸ் (Post-paid Connection) மற்றும் 1 டிடிஎச் கனெக்ஷன் (DTH Connection) உட்பட மொத்தம் 3 கனெக்ஷன்களை வழங்குகிறது.

ஒரே ரீசார்ஜில் முப்பெரும் நன்மைகள்; Airtel-ன் புதிய ரீசார்ஜ் அறிமுகம்!

சுவாரசியமான விடயம் என்னவென்றால், ஏர்டெல் பிளாக்கின் கீழ் உங்களுக்கு விருப்பமான சேவைகளை சேர்க்கலாம்; ஆனால் பேஸிக் ரீசார்ஜ்ஜின் விலை ரூ.799 ஆகும். இது மற்ற சேவைகளுடன் தொகுக்கப்பட்டாலும் கூட ஏர்டெல்லின் வழக்கமான போஸ்ட்பெய்ட் நன்மைகளையே வழங்கும்.

அதாவது ரூ.799 வழியாக 105 ஜிபி அளவிலான மொத்த டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டா ரோல்-ஓவர் போன்ற நன்மைகள் கிடைக்கும். கூடுதலாக, ஏர்டெல் பிளாக் ரூ.799 வழியாக ரூ.260 மதிப்புள்ள டிவி சேனல்களை உள்ளடக்கிய டிடிஎச் நன்மையையும் கிடைக்கும்.

ஓடிடி (OTT) நன்மைகளை பொறுத்தவரை, ஏர்டெல் பிளாக் ரூ.799 திட்டத்தின் கீழ் அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பிற்கான (Airtel Xstream App) இலவச அணுகல் கிடைக்கும்.

மேலும் இந்த திட்டத்தின் வாடிக்கையாளர்களுக்கு ஒன் பில் மற்றும் ஒன் கால் சென்டர் (One Bill and One Call Center), பிரத்யேக ரிலேஷன்ஷிப் டீம், சிக்கல்களின் போது முன்னுரிமை, 60 வினாடிகளில் கால் பிக்-அப், இலவச சர்வீஸ் விசிட்ஸ் (Free Service Visits), பை நௌவ் அன்ட் பே லேட்டர் (Buy Now and Pay later) போன்ற வசதிகளும் கிடைக்கும்.

நினைவூட்டும் வண்ணம், ஏர்டெல் சமீபத்தில் தான் ரூ.599 பிளாட்டினம் போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 2 போஸ்ட்பெய்டு கனெக்ஷன்களுடன் வருகிறது. ஒருவேளை நீங்கள் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் சேர்த்து ஒரு டிடிஎச் கனெக்ஷனையும் தேடுகிறீர்கள் என்றால் ஏர்டெல் ரூ.799 பிளாக் உங்களுக்கான திட்டமாகும்.

ரூ.599 பிளாட்டினம் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது மொத்தம் 105 ஜிபி டேட்டா, அது தீர்ந்ததும் 1 எம்பி-க்கு 2 பைசா என்கிற கட்டணம், 200 ஜிபி வரையிலான டேட்டா ரோல்ஓவர், லோக்கல், எஸ்டிடி மற்றும் நேஷனல் ரோமிங் உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்றவைகளை வழங்கும்.

ஏர்டெல்லின் இந்த 2 இரண்டு புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களுமே சமீபத்தில் அறிமுகமான ஜியோ பிளஸ் (Jio Plus) ஃபேமிலி திட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பதில் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஜியோ பிளஸின் கீழ் ரூ.299, ரூ.399, ரூ.599 மற்றும் ரூ.699 என மொத்தம் 4 திட்டங்கள் அறிமுகமாகி உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
ஒரே ஒரு ரீசார்ஜ்ஜின் கீழ்.. டேட்டா, டிடிஎச் மற்றும் ஓடிடி போன்ற 3 முக்கிய நன்மைகளை வழங்கும் புதிய ஏர்டெல் ரீசார்ஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன ரீசார்ஜ்? அதன் விலை நிர்ணயம் என்ன? டேட்டா, டிடிஎச், ஓடிடி தவிர்த்து இது வேறு என்னென்ன நன்மைகளை வழங்கும்? இதோ விவரங்கள்: | New Airtel Black Rs 799 Postpaid Plan Launched With Mobile Data DTH TV Channels and OTT Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X