2016ஆம் ஆண்டில் வெளிவந்த மோசமான டெக்னாலஜி அறிமுகங்கள்

By Siva
|

2016ஆம் ஆண்டு என்பது ஸ்மார்ட்போன்கள் உள்பட டெக்னாலஜி துறைக்கு நல்ல ஆண்டு என்றே சொல்ல வேண்டும். இந்த ஆண்டில் வெளிவந்த பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெக்னாலஜி சம்பந்தப்பட்ட புதுவரவுகள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வெற்றி பெற்றன.

2016ஆம் ஆண்டில் வெளிவந்த மோசமான டெக்னாலஜி அறிமுகங்கள்

இந்நிலையில் ஒருசில புதுவரவுகள் மக்களை சென்று சேராமலும், தரம் திருப்திகரமாக இல்லாத காரணத்தாலும் படுதோல்வியை சந்தித்தது.

2017-ல் வெளியாகப்போகும் லெனோவா ஸூக் எட்ஜ் கருவியின் லீக்ஸ்.!

ஒரு நிறுவனம் வெளியிடும் அனைத்து பொருட்களுமே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. நான்கு மாடல்கள் வெற்றி பெற்றால் ஒரு மாடல் தோல்வி அடைவது என்பது இந்த துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சகஜம்தான்.

6 மாத காலம் ரூ.144/- திட்டம், 40,000 ஹாஸ்பாட்ஸ், அசத்தும் பிஎஸ்என்எல்.!

இந்நிலையில் நம்மை விட்டு பிரிந்து சென்ற 2016ஆம் ஆண்டில் பொதுமக்களின் நன்மதிப்பை பெறாத டெக்னாலஜி அறிமுகங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஆப்பிள் ஏர்பாட்ஸ்:

ஆப்பிள் ஏர்பாட்ஸ்:

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம், தரத்திலும் உழைப்பிலும் கியாரண்டி இருக்கும் என்று எடுத்த வந்த பெயரை இழக்க காரணமாக அமைந்த பொருளதான் ஆப்பிள் ஏர்பாட்ஸ். ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் இரண்டு மாடல்களிலும் திருப்திகரமான ஹெட்போன் ஜாக் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் தான் ஆப்பிள் நிறுவனம் இந்த வயர்லெஸ் ஆப்பிள் ஏர்பாட்ஸ் ஹெட்போனை அறிமுகம் செய்தது. ஆனால் மற்ற வயர்லெஸ் மாடல் ஹெட்போனை விட இந்த ஹெட்போன் சிறந்ததாக இருந்தது என்று கூறப்பட்டாலும் எளிதில் வாடிக்கையாளர்கள் தொலைத்து விடும் வகையில் அமைந்ததால் இந்த ஹெட்போன் போதிய வரவேற்பை பெறவில்லை

கூகுள் டே டிரீம்

கூகுள் டே டிரீம்

மொபைல் போனில் ஆப்ஸ்கள் மூலம் நாம் பார்க்கும் சில காட்சிகளை மிகவும் வித்தியாசமாக பார்க்க உதவும் பொருள்தான் கூகுள் டே ட்ரீம். குறிப்பாக கூகுள் மேப், கூகுள் ஸ்டீர்ட் வியூ ஆகியவற்றை டே ட்ரீம் மூலம் பார்த்தால் நேரில் பார்ப்பது போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த VR சோனியா ப்ளே ஸ்டேஷன் VR அளவுக்கு இல்லை என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. மேலும் இது கூகுள் கார்டுபோர்டு மாதிரியே இருந்ததாகவும், ஒருசில மாடல் ஆண்டிராய்ட் போன்களில் இது சப்போர்ட் செய்ய வில்லை என்பதும் ஒரு குறையாக இருந்தது

ஆப்பிள் வாட்ச் 2:

ஆப்பிள் வாட்ச் 2:

ஆப்பிள் வாட்ச் 1-இல் இல்லாத இரண்டு அம்சங்கள் ஆப்பிள் வாட்ச் 2-வில் இருந்தது. 2016ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் வாட்ச் 2-வில் வாட்டர் புரூப் மற்றும் ஜிபிஎஸ் இருந்தது. எனவே இந்த வாட்ச் முந்தைய மாடலைவிட சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக இதைவிட பெட்டராக ஃபிட்பிட் என்ற வாட்ச் அறிமுகம் ஆனதால் இதற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை

ஓகுலஸ் ரிஃப்ட்: (Oculus Rift)

ஓகுலஸ் ரிஃப்ட்: (Oculus Rift)

ஓகுலஸ் ரிஃப்ட் VR டெக்னாலஜி சந்தையில் சுத்தமாக எடுபடவில்லை. பெரும்பாலான

ஓகுலஸ் ரிஃப்ட் வாடிக்கையாளர்களின் கையில் வந்து சேருவதற்கு முன்பே உடைந்து இருந்ததாக புகார்கள் எழுந்தது. அந்த அளவுக்கு தரம் குறைந்ததாகவும், அதே நேரத்தில் சோனி பிளே ஸ்டேஷன் VRஐ ஒப்பிடும்போது ரொம்ப வித்தியாசம் இருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் உணர்ந்ததால் வந்த வேகத்தில் தனது மதிப்பை இழந்துவிட்டது.

கூகுள் குரோம்கேஸ்ட் 4K (Google Chromecast 4K)

கூகுள் குரோம்கேஸ்ட் 4K (Google Chromecast 4K)

கூகுள் குரோம்கேஸ்ட் 4K தரம் நன்றாக இருந்தாலும் இதன் விலையால் தோல்வி அடைந்தது. ரூ.,5000 என்று இதன் விலையை கேட்டதும் ஆசையாய் பார்த்த வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் உடனே இதை தவிர்க்க ஆரம்பித்தனர். இதில் சுமார் 125 திரைப்படங்கள் வரை இருந்தாலும் பெரும்பாலும் பழைய படங்களாக இருந்தது.

மேலும் இதை ஆண்ட்ராய்டு போனில் பொருத்தி பார்க்க வேண்டும் என்றால் அதற்கென தனியாக ஒரு கேபிள் வாங்க வேண்டும். அதன் மதிப்பு சுமார் ரூ.1700 என்பதால் பொதுமக்கள் இதை முற்றிலும் தவிர்த்துவிட்டனர் எனலாம்

கூகுள் ஹோம்:

கூகுள் ஹோம்:

நீங்கள் வாய்சில் ஒரு கட்டளையை இட்டால் அதை உடனே கூகுளில் தேடி தரும் ஒரு வாய்ஸ் ஸ்பீக்கராக கூகுள் ஹோம் செயல்பட்டது. ஆனால் இதற்கு முன்னால் அமேசான் எக்கோ என்ற பொருள் வந்து வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுவிட்டதால் அதை பார்த்து காப்பி அடித்தது போன்ற தோற்றம் கொண்ட கூகுள் ஹோமை மக்கள் தவிர்த்துவிட்டனர்.

சாம்சங் கியர் ஐகான்X

சாம்சங் கியர் ஐகான்X

ஆப்பிள் எயர்பாட்ஸ் போலவே இதுவும் ஒரு வயர்லெஸ் ஹெட்போன் தான். இந்த இயர்பாடின் விலை சற்று அதிகமாக இருந்தது. சந்தையில் இதைவிட நல்ல தரத்தில் குறைவான விலையில் கிடைப்பதால் இதன் மீது வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
We have listed the worst tech accessories those were launched in 2016. Take a look!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X