Home
News

2017-ல் வெளியாகப்போகும் லெனோவா ஸூக் எட்ஜ் கருவியின் லீக்ஸ்.!

இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் லெனோவா நிறுவனத்தின் ஸூக் எட்ஜ் கருவியின் லீக்ஸ் தகவல்கள் கூறும் அக்கருவியின் அம்சங்கள் என்னென்ன.?

By Muthuraj

நாம் கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி விட்டோம் என்பதை மறுக்க முடியாது. அதனாலேயே ஸ்மார்ட்போன் விடயத்தில் நாம் பயன்பாடுகளை பதிவிறக்க நிறைய நேரம் செலவிடுகிறோம் மற்றும் பேட்டரி ஆயுள், சேமிப்பு திறன், இயங்குதளம் என ஸ்மார்ட்போன் சார்ந்த பல தெளிவுகளை பெற்றுக்கொண்டே உள்ளோம்.

சிலர் அடிப்படை மற்றும் பிற மேம்பட்ட நோக்கங்களுக்காக தொலைபேசியுடன் நிறைய நேரம் செலவிட பலர் தொழில்நுட்பம் மற்றும் அம்சங்கள் சார்ந்த ஆர்வம் கொண்டவர்களாக உள்ளன. அப்படியானோர்களுக்கு 2016-ஆம் ஆண்டை விட 2017-ஆம் ஆண்டில் வெளியாகப்போகும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் நல்ல அம்சங்களை வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்கு ஓர் ஆதாரம் தான் இந்திய லெனோவா ஸூக் எட்ஜ் கருவி லீக்ஸ் தகவல்கள்.!

ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்

ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம்

வெளியான ஸூக் எட்ஜ் கருவியின் முக்கிய சிறப்பம்சமாக கூறப்படுவது அதன் 2.35 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 821 எஸ்ஓசி, தவிர அதன் கார்னிங் கொரில்லா கிளாஸ், 5.5 அங்குல முழு எச்டி டிடிடிஐ (TDDi) டிஸ்ப்ளே, 86.4 சதவீத ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் ஆகியவைகளும் அடங்கும்.

டச் பிங்கர் பிரிண்ட் சென்சார்

டச் பிங்கர் பிரிண்ட் சென்சார்

உடன் இக்கருவியை ஒரு யூஎஸ்பி டைப்-சி (வி3.1) போர்ட், 0.09 வினாடிகளில் அன்லாக் திறன் கொண்ட டச் பிங்கர் பிரிண்ட் சென்சார் தவிர உள்ளமைக்கப்பட்ட ஒரு இரத்த ஆக்சிஜன் இதய துடிப்பு சென்சார், ஒரு வாயு அல்டிமீட்டர், மற்றும் ஒரு புற ஊதா ஒளி உணரி ஆகிய சுவாரசியமான அம்சங்களையும் இக்கருவி கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

இந்த லெனோவோ ஸூக் எட்ஜ் கருவியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இசெட்யூஐ (ZUI) 2.5 மூலம் இயங்கும் ஒரு இரட்டை சிம் ஆதரவு அளிக்கும் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் லீக்ஸ் தகவல்கள் அறிவிக்கின்றன.

உயர் பிரகாச பிளாஷ்

உயர் பிரகாச பிளாஷ்

கேமிரா துறையை பொருத்தமட்டில் ஒரு 1.34 மைக்ரான் பிக்சல் சாம்சங் ஐசோசெல் (ISOCELL) சென்சார், எப்/2.2 அப்பெர்ஷர், பிடிஏஎப்+ சிஏஎப் ஹைபிரிட் ஆட்டோ ஃபோகஸ் மற்றும் ஒரு உயர் பிரகாச பிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் ஒரு 1.12 மைக்ரான் பிக்சல் சென்சார் மற்றும் எப்/2.2 அப்பெர்ஷர் கொண்ட 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறும் என்கிறது லீக்ஸ் தகவல்கள் உடன் ஸூக் எட்ஜ் கருவியின் உள்ளடங்கிய சேமிப்பு 64ஜிபி அல்லது 128ஜிபி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

3100எம்ஏஎச் பேட்டரி

3100எம்ஏஎச் பேட்டரி

இணைப்பு வசதிகள் : இந்திய எல்டிஇ பட்டைகள் ஆதரவு, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 4ஜி, எல்டிஇ ஆகியவைகள் அடங்கும் என்று கூறப்படுகிறது. மற்றும் இக்கருவி ஒரு 3100எம்ஏஎச் பேட்டரி கொண்டு வெளிவரும் என்றும் லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை

விலை

இந்த புதிய ஸூக் எட்ஜ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மாறுபாடு ரூ. 22,500/- என்றும், 6ஜிபி ரேம் மாறுபாடு ரூ.24,500/- என்றும் விலை நிர்ணயிக்கப்படலாம். பீங்கான் வெள்ளை மற்றும் டைட்டானியம் கிரிஸ்டல் கருப்பு வண்ண வகைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கப்பெற செய்யப்படும் என்றும் லீக்ஸ் தகவல்கள் அறிவிக்கின்றன.

மேலும் படிக்க

மேலும் படிக்க

2016-ல் முற்றிலுமாக வெற்றி பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Rumored Lenovo Smartphone to Launch in 2017. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X