6 மாத காலம் ரூ.144/- திட்டம், 40,000 ஹாஸ்பாட்ஸ், அசத்தும் பிஎஸ்என்எல்.!

Written By:

கடந்த சனிக்கிழமை அன்று அரசு நடத்தும்தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் புதிய திருத்தப்பட்ட பேக் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீ பெயிட் மற்றும் போஸ்ட் பெயிட் ஆகிய அதன் இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாத காலம் வாடிக்கையாளர்களுக்கு எந்த நெட்வொர்க் உடனாகவும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுடன் சேர்த்து 300எம்பி தரவும் வழங்கும் இந்த திட்டத்தை 6 மாத காலம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிஎஸ்என்எல் தலைவர், நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
விலை

விலை

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் இந்த புதிய திட்டத்தின் விலை ரூ.144/- என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு அறிமுகமான ரூ.99 மற்றும் ரூ.339/- பேக் தொகுப்புகளுக்கு பின்னர் ப்ரீபெயிட் மற்றும் போஸ்ட் பெயிட் ஆகிய இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் வரம்பற்ற அழைப்பு பேக் இதுவாகும்.

4,400 வைஃபை ஹாட்ஸ்பாட்

4,400 வைஃபை ஹாட்ஸ்பாட்

புதிய பேக் அறிமுகம் தவிர்த்து இந்த தொலைத் தொடர்பு சேவை வழங்குநர் நாடு முழுவதும் 4,400 வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவுதல் உட்பட பல முயற்சிகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

விரிவுபடுத்த வேண்டும்

விரிவுபடுத்த வேண்டும்

"நாங்கள் 4,400 வைஃபை ஹாட்ஸ்பாட்களை நாடு முழுவதும் தொடுத்திருக்கிறோம். எங்களின் திட்டம் உடனடியாக இந்த வைஃபை ஹாட்ஸ்பாட் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஆகும். அடுத்த ஒரு வருடத்தில், நாங்கள் நாடு முழுவதும் சுமார் 40,000 வைஃபை ஹாட்ஸ்பாட்களை நிறுவிடுவோம்" என்றும் பிஎஸ்என்எல் தலைவர், நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கிளாசிக் எல்டிஇ (லாங் டெர்ம் எவலூசன்) ஸ்பெக்ட்ரம்

கிளாசிக் எல்டிஇ (லாங் டெர்ம் எவலூசன்) ஸ்பெக்ட்ரம்

இவைகளை தவிர, நிறுவனம் கிராமப்புறங்களில் சேவையை தொடங்கும் இந்திய அரசின் 2500 மெகாஹெர்ட்ஸ் தனை பெற்றுள்ளது. உடன் பிஎஸ்என்எல் அதன் கிளாசிக் எல்டிஇ (லாங் டெர்ம் எவலூசன்) ஸ்பெக்ட்ரம்தனை படிப்படியாக இணைத்துக்கொள்ளும் என்றும் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

2016-ஆம் ஆண்டில் ரூ.10,000/-க்குள் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
BSNL Unveils Unlimited Voice Calling, Bundled Data Plans. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot