அட்டபாவிங்களா எங்கிருந்து டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..?
தொழில்நுட்ப துறை மக்களை வியப்பில் ஆழ்த்தும் ஏதேனும் கருவிகளை அடிக்கடி அறிமுகம் செய்து கொண்டு தான் இருக்கின்றது. பல கருவிகள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதே நேரத்தில் சில கருவிகள் இப்படியும் இருக்க தான் செய்கின்றது.
வாய்ஸ் கொடுத்தாலே இயங்கும் தொழில்நுட்ப கருவிகள்
இந்த கருவிகளும் மக்களுக்கு பயன் தரும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இவை எந்தளவு பயனளிக்கின்றது என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
இதுல தேடினால் கிடைக்காத விஷயமே இல்லங்க..!

ஸ்பான்ஜ்
அதிக எடை கொண்ட இந்த ஸ்பான்ஜ் பாட்டில்களை நன்கு சுத்தம் செய்யும்.

ட்ராஷ் கேன்
உலகின் முதல் ஸ்மார்ட் கேன் என்ற பெருமையை கொண்டிருக்கும் இந்த கருவியினை நீங்கள் தொட வேண்டிய அவசியமே இல்லை.

நான்-டச் டிஸ்பென்ஸர்
இந்த தானியங்கி டிஸ்பென்ஸர் கை படாமல் பயன்படுத்த வழி வகுக்கும் சென்சார் கொண்டிருக்கின்றது.

பல் துலக்கி
ப்ரஷ் மற்றும் பேஸ்ட் கொண்டிருக்கும் ஒரே கருவி தான் இந்த டூத்பேஸ்ட் ட்யூப்.

சோப் டிஸ்பென்சர்
சோப் மற்றும் ஸ்பான்ஜ் கொண்டிருக்கும் இந்த சோப் டிஸ்பென்சரை கொண்டு நாயை குளிப்பாட்ட முடியும்.

மாப்
இந்த செருப்பை நீங்கள் மாப்பாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆர்சி மாப்
ரிமோட் கண்ட்ரோல் மூலம் வீடிடை சுத்தம் செய்ய இந்த மாப் தான் சிறந்தது.

ஏர் ப்லோஸ்
இந்த கருவி சுமார் 200 மைல் வேகத்தில் காற்றை பீய்த்தடிக்கும் திறன் கொண்டது.

பேபி மாப்
குழந்தையை விளையாட விட்டும் வீட்டை சுத்தம் செய்யலாம்.

ஹோப்பிங் பால்
பார்க்க பந்து போன்று காட்சியளித்தாலும் இது வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளவும் செய்யும்.


Click it and Unblock the Notifications