வாய்ஸ் கொடுத்தாலே இயங்கும் தொழில்நுட்ப கருவிகள்

Posted By:

நவீன தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், பல நிறுவனங்களை சேர்ந்த தயாரிப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் தொடு திரை, உடல் அசைவு மற்றும் குரல் மூலம் இயங்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.

பேஸ்புக் எனும் வலைதளம் - நீங்கள் அறிந்திராத வியப்பூட்டும் தகவல்கள்

அந்த வரிசையில் மனிதர்களின் குரல் மூலம் இயங்கும் சில தொழில்நுட்ப கேஜெட்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் இருக்கும் கருவிகளை நீங்கள் உங்களது குரல் மூலமாகவே இயக்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்கல்லி ஸ்மார்ட் ஹெல்மெட்

ஸ்கல்லி ஸ்மார்ட் ஹெல்மெட்

ஸ்மார்ட்போன்களில் துவங்கி, ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ஸ்மார்ட் டிவிகளை தொடர்ந்து ஸ்கல்லி ஸ்மார்ட் ஹெல்மெட் இந்த பட்டியலில் இணைந்திருக்கின்றது.

இந்த ஹெல்மெட்டில் ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே, ஜிபிஎஸ் நேவிகேஷன், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 180 டிகிரி கோணங்களில் இயங்கும் ரியர் கேமரா போன்ற அம்சங்கள் இருப்பதோடு இவை அனைத்தையும் நீங்கள் குரல் மூலம் இயக்க முடியும்.

ஹோமி

ஹோமி

ஹோமியுடன் பல கருவிகளை இணைத்து அவை அனைத்தையும் உங்களது குரல் மூலமாகவே இயக்க முடியும்.

ஐவீ

ஐவீ

இது ஒரு ஸ்மார்ட் கடிகாரம் ஆகும், இதில் அலாரம் அடிக்கும் போது உங்களது குரல் மூலமாகவே இதை ஆஃப் செய்ய முடியும்.

சோனி ஸ்மார்ட்வாட்ச் 3

சோனி ஸ்மார்ட்வாட்ச் 3

சோனியின் இந்த ஸ்மார்ட்வாட்ச் கருவியை நீங்கள் குரல் மூலமாகவே இயக்க முடியும்.

சாம்சங் ஸ்மார்ட் டிவி

சாம்சங் ஸ்மார்ட் டிவி

சாம்சங் நிறுவனத்தின் இந்த டிவியை ஆன் செய்த பின் சேனல் மாற்றுவது, வால்யூம் போன்று அனைத்து அம்சங்களையும் இயக்க உங்களது குரலை பயன்படுத்தலாம்.

லிஸ்ட்னர்

லிஸ்ட்னர்

இந்த கருவி கைத்தட்டல், இசை, மற்றும் குரல்களை கேட்கும். இந்த கருவி இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமேசான் எக்கோ

அமேசான் எக்கோ

இந்த கருவி வீட்டில் பயன்படுத்தப்படும் சிரி போன்றதாகும். இதை குறியீடுகளை கொண்டு பாதுகாக்க முடியும்.

வோக்கா லைட்

வோக்கா லைட்

வோக்கா என்ற லைட் ஸ்விட்ச் எவ்வித விளக்குகளையும் குரல் மூலம் இயக்க முடியும்.

ஹனிவெல் வை-பை

ஹனிவெல் வை-பை

உங்கள் வீட்டில் இருக்கும் வெப்ப நிலையை ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

மோட்டோ ஹின்ட்

மோட்டோ ஹின்ட்

மோட்டோரோலாவின் இந்த இயர்பட் மூலம் உங்களது போனினை இயக்க முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Here you will find the list of Voice controlled gadgets. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot