இடியை இறக்கிய Airtel.. அமலுக்கு வந்த விலை உயர்வு.. ரூ.189 நீக்கம்.. இனி இதுதான் பேஸிக் ரீசார்ஜ்!
சில தினங்களுக்கு முன்னர், தனியார் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் விலை உயர்வு குறித்து வெளியான அறிக்கைகள் உண்மையாகி விட்டது. டெலிகாம் டால்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி, ஏர்டெல் (Airtel) நிறுவனமானது, அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான ட்ரூலி அன்லிமிடெட் பிளான் ஆன ரூ.189-ஐ நீக்கிவிட்டது.
இதன் மூலம் இப்போது பார்தி ஏர்டெல் சேவையி கீழ், பேஸிக் ட்ரூலி அன்லிமிடெட் திட்டம் (Airtel Basic Truly Unlimited plan) ஆனது ரூ.199 முதல் தொடங்குகிறது. அதாவது ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தின் விலையை ரூ.10 அதிகரித்து உள்ளது என்றும் கூறலாம்.

ஏர்டெல் ரூ.199 ட்ரூலி அன்லிமிடெட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள்: ஏர்டெல் ரூ.199 திட்டம் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மொத்தமாக 2 ஜிபி டேட்டா ஆகிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீட்டை (2ஜிபி) முடித்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா என்கிற விகிதத்தில் டேட்டா கட்டணம் வசூலிக்கப்படும். ரூ.199 திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ரூ.199-ன் கீழ் ஏர்டெல் ரிவர்ட்ஸ்0ன் கீழ் ஏர்டெல் ஹலோட்யூன்ஸ் (ஒவ்வொரு 30 நாட்களுக்கும் இலவசமாக ஏதேனும் ஒரு ட்யூனை செட் செய்யலாம்) மற்றும் 12 மாதங்களுக்கு ரூ.17,000 மதிப்புள்ள பெர்ப்ளக்ஸிட்டி ப்ரோ ஏஐ சந்தா ஆகியவைகள் கிடைக்கும். ரூ.199 க்கு பிறகு ஏர்டெல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அடுத்ததாக கிடைக்கக்கூடிய திட்டம் ரூ.219 திட்டமாகும்.
ரூ.189 திட்டம் நிறுத்தப்பட்டதன் மூலம், ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் சேவையானது ரூ.199 முதல் தொடங்கும்படி நெறிப்படுத்தியுள்ளது. திருத்தப்பட்ட (விலை உயர்த்தப்பட்ட) ஏர்டெல்லின் ட்ரூலி அன்லிமிடெட் திட்டம் ஆனது அதை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு சிறந்த மதிப்பு மற்றும் கூடுதல் டிஜிட்டல் நன்மைகளை உறுதி செய்வதால், இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய சிக்கலாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ திட்டங்கள் விலையும் உயர்த்தப்படுமா? இப்போதைக்கு ஜியோ நிறுவனத்தின் எந்த திட்டங்களின் விலையும் அதிகரிக்கப்படவில்லை . ஆனால் டெலிகாம் துறையில் விலை உயர்வு என்பது எப்போதுமே ஒரோவொரு நிறுவனத்துடன் நிற்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நல்ல விஷயம் என்னவென்றால் 10 - 15% வரை விலை உயர்வு வருமென்று கூறப்பட்டது.
அதாவது (எடுத்துக்காட்டிற்கு) ரூ.299 ஆனது ரூ.329 வரை விலை உயர்த்தப்படலாம் என்கிற கணிப்புகள் இருந்தன. ஆனால் இப்போதைக்கு ரூ.10 மட்டுமே, அதுவும் ஒரேவொரு திட்டத்தின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏஆர்பியு (ARPU) என்கிற ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (Average Revenue Per User) அதிகரிப்பதற்கான ஏர்டெல் நிறுவனத்தின் நடவடிக்கையாக இருக்கலாம்.
இனிமேல் இதுதான் பேஸிக் ரீசார்ஜ் என்கிற கட்டாயமான சூழ்நிலைக்கு வாடிக்கையாளர்களை தள்ளினால், அவர்களுக்கு 2 வழிகள் தான் இருக்கும். ஒன்று - தங்களுடைய ஏர்டெல் சிம் கார்ட்டை பயன்படுத்தாமல் விடுவது; இரண்டு - விலை உயர்த்தப்பட்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்வது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஏர்டெல் கஸ்டமர்கள் உள்ளனர்.
பிஎஸ்என்எல் விலை உயர்வு: சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது அதன் 8 திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை குறைத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் எஸ்டிவி டேட்டா நன்மை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இது 10ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும்.
இதேபோல பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர் இப்போது 300 நிமிட வாய்ஸ் கால்கள், வரம்பற்ற டேட்டா (4ஜிபி க்கு பிறகு 40 கேபிபிஎஸ்) மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 48 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்குகிறது. நினைவூட்டும் வண்ணம் முன்னதாக இந்த திட்டம் 54 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்தது.


Click it and Unblock the Notifications








