Home
News

BSNL வேலையை காட்டிடுச்சு.. 8 திட்டங்களின் வேலிடிட்டி, நன்மை குறைப்பு.. ரூ.200, ரூ.300 ரீசார்ஜை கூட விடல!

தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தும் போது, அமைதியாக இருந்து, லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்த பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது ஒருவழியாக "மறைமுகமான" விலை உயர்வை செய்துள்ளது. அதாவது நேரடியாக ஒரு திட்டத்தின் விலையை அதிகரிக்காமல், அந்த திட்டத்தின் வேலிடிட்டியை குறைத்து மறைமுகமான விலை உயர்வை செய்துள்ளது

இப்படியாக 1 திட்டம் அல்ல மொத்தம் 8 பிஎஸ்என்எல் திட்டங்களின் வேலிடிட்டி குறைக்கப்பட்டு உள்ளது. அவைகளில் ரூ.200 க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்றும் ரூ.300 பட்ஜெட்டில் கிடைக்கும் திட்டங்களும் அடக்கம். என்னென்ன திட்டங்களின் வேலிடிட்டி எவ்வளவு குறைக்கப்பட்டு உள்ளது? இதோ விவரங்கள்:

BSNL வேலையை காட்டிடுச்சு.. 8 திட்டங்களின் வேலிடிட்டி, நன்மை குறைப்பு!

1. பிஎஸ்என்எல் ரூ.1499 திட்ட வவுச்சர்: பிஎஸ்என்எல் இன் திருத்தப்பட்ட ரூ.1499 திட்ட வவுச்சர் இப்போது வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இப்போது இது 32ஜிபி டேட்டாவை வழங்குகிறது. முன்னர் 24ஜிபி டேட்டாவை வழங்கியது. இதன் வேலிடிட்டி 336 நாட்களில் இருந்து 300 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டம் எக்ஸ்ட்ரா டேட்டாவை பெறும் மறுகையில் 36 நாட்கள் குறைவான வேலிடிட்டிடியை வழங்குகிறது.

2. பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: திருத்தப்பட்ட ரூ.997 வவுச்சர் இப்போது 160 நாட்கள் என்கிற வேலிடிட்டிக்கு பதிலாக 150 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்கும். நன்மைகளை பொறுத்தவரை, அன்லிமிடெட் வாய்ஸ் (உள்ளூர்/எஸ்டிடி/ரோமிங், மும்பை மற்றும் டெல்லி உட்பட), டெய்லி 2ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

3. பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டம்: திருத்தப்பட்ட ரூ.897 வவுச்சர் இப்போது 180 நாட்கள் என்கிற வேலிடிட்டிக்கு பதிலாக 165 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். அதாவது 15 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் டேட்டா நன்மையானது 90ஜிபி இல் இருந்து 66ஜிபி ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

4. பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ்: பிஎஸ்என்எல்-ன் இந்த வொர்க் ப்ரம் ஹோம் (WFH) ரூ.599 எச்டிவி திட்டத்தின் வேலிடிட்டி ஆனது 84 நாட்களில் இருந்து 70 நாட்களாக குறைக்கபட்டுள்ளது. நன்மைகளை பொறுத்தவரை ஹோம் மற்றும் நேஷனல் ரோமிங்கில் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், டெய்லி 3ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

5. பிஎஸ்என்எல் ரூ.439 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.439 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இது 90 நாட்களுக்கு பதிலாக 80 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். இதுவொரு வாய்ஸ் ஃபோகஸ்டு பிளான் ஆகும். அதாவது டேட்டா நன்மையை வழங்காது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்களை மட்டுமே வழங்கும்.

6. பிஎஸ்என்எல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.319 திட்டத்தின் கீழ் ஹோம் எல்எஸ்ஏ-வில் உள்ள எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (உள்ளூர்/எஸ்டிடி), நேஷனல் ரோமிங் (மும்பை மற்றும் டெல்லியில் எம்என்டிஎல் நெட்வொர்க் உட்பட), 300 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் டேட்டா (10ஜிபி க்கு பிறகு 40 கேபிபிஎஸ்) ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி 65 நாட்களில் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

7. பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் பிளான் வவுச்சர்: பிஎஸ்என்எல்-ன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் இப்போது 300 நிமிட வாய்ஸ் கால்கள், வரம்பற்ற டேட்டா (4ஜிபி க்கு பிறகு 40 கேபிபிஎஸ்) மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை 48 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்தின் கீழ் வழங்கும். முன்பு, இந்த திட்டம் 54 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வந்தது.

8. பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் எச்டிவி: ரூ.147 எச்டிவி ஆனது வேலிடிட்டி குறைப்பை பெறவில்லை; மாறாக இதன் டேட்டா நன்மை பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இப்போது இது 10ஜிபி டேட்டாவிற்கு பதிலாக 5ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும். கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (உள்ளூர்/எஸ்டிடி/ரோமிங்) ஆகிய நன்மைகளையும் வழங்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 25 நாட்கள் ஆகும்.

மேற்கண்ட திட்டங்களும், அதன்கீழ் கிடைக்கும் நண்மைகள் மற்றும் சலுகைகளும் நீங்கள் இருக்கும் வட்டத்தை பொறுத்து மாறுபடலாம். எனவே ரீசார்ஜ் செய்யும் முன் - பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் அல்லது அதிகாரப்பூர்வ பிஎஸ்என்எல் வலைத்தளத்தில், நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பும் திட்டத்தின் விவரஙகளை சரிபார்க்க தவறாதீர்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Reduced Validity and benefits of Many Prepaid Plans Including Rs 197 Rs 319 and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X