2016-ல் வெளியான 5 சிறந்த பெஸல் லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள்.!

Written By:

2016ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் உலகம் பல புதிய டெக்னாலஜியை சந்தித்தது. இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்களின் பொற்காலம் என்றே கூறலாம். இவ்வாறான புதிய டெக்னாலஜியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டெக்னாலஜி என்றால் அது பெஸல் லெஸ் டிஸ்ப்ளே என்றேஎ கூறலாம்.

ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் மானிட்டர் ஆகியவற்றில் அவுட்சைட் பிரேம் என்று அழைக்கப்படும் பெஸல் என்பது கண்டிப்பாக இருக்கும். இதன்மூலம் தான் டிசைனர்கள் பல சாப்ட்வேர்களை ஸ்மார்ட்போனுக்கு கொண்டு செல்வர். இந்த பெஸல் பார்ப்பதற்கு சிலசமயம் உறுத்துவதை போல இருக்கும். எனவேதான் தற்போது நவீன ரக ஸ்மார்ட்போன்களில் பெஸல் லெஸ் டிஸ்ப்ளேவுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது

2016ஆம் ஆண்டில் வெளிவந்த மோசமான டெக்னாலஜி அறிமுகங்கள்

சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள்தான் இந்த பெஸல் லெஸ் டிஸ்ப்ளே போன்களை உலகிற்கு அறிமுகம் செய்தது. உதாரணமாக சியாமி மி மிக்ஸ் ஒரு நல்ல பெஸ்ல் லெஸ் ஸ்மார்ட்போனுக்கு உதாரணம் ஆகும்.

2017-ல் வெளியாகப்போகும் லெனோவா ஸூக் எட்ஜ் கருவியின் லீக்ஸ்.!

இதனை பின்பற்றி ஹானர் மேஜிக், லெனோவா ஜூக் எட்ஜ் ஆகியவை பெஸ்ல் லெஸ் போன்களாக வெளிவந்தன. மேலும் பல பெஸ்ல் லெஸ் மாடல் போன்கள் உருவாகி வரும் நிலையில் தற்போது இதில் ஐந்து சிறந்த மாடல்களை பார்ப்போம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சியாமி மி மிக்ஸ்:

சியாமி மி மிக்ஸ்:

சீனாவின் ஆப்பிள் நிறுவனம் என்று அழைக்கக்கூடிய சியாமி நிறுவனம் எதிர்கால சந்ததியினர்களின் போன்களை உருவாக்குவதில் வல்லமை பெற்றது. எதிர்கால இளளஞர்கள் எந்த மாடலை விரும்புவார்கள் என்பதை ஊகித்து அதற்கேற்றவாறு போன்களை வடிவமைத்து வரும் சியாமி, உருவாக்கிய பெஸ்ல் லெஸ் ஸ்மார்ட்போன் தான் சியாமி மி மிக்ஸ்.

குவாட்கோ ஸ்நாப்டிராகன் 821 பிராஸசர், 6 GB ரேம் ஆகியவற்றை உடைய இந்த போன் மிகச்சிறந்த போன்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த மாடலின் செல்பி கேமிராவில் ஒருசில குறைகள் இருந்தாலும் அதற்கு பதில் மற்ற மாடல்களில் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளதால் அந்த குறையை ஈடுகட்டி விடுகிறது.

நூபியா Z11

நூபியா Z11

சியாமி மி மிக்ஸ் போனுக்கு முன்பே இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும், மக்களிடையே உடனே இந்த போன் போய் சேரவில்லை. 83% பெஸல் லெஸ் மாடலை கொண்ட இந்த போனில் ஸ்னாப்டிராகன் 821 சிப் உள்ளது ஒரு பெரிய ப்ளஸ். மேலும் இந்த மாடலில் 6 GB ரேம் உள்ளது.

எலிபோன் S3:

எலிபோன் S3:

பெஸ்ல் லெஸ் டிஸ்ப்ளே தன்மை கொண்ட இன்னொரு மாடலான எலிபோன் S3 மாடல் இன்னும் இந்தியாவில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் பெஸ்ல் லெஸ் மாடலில் சிறந்தவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 83% பெஸல் லெஸ் தன்மை கொண்ட இந்த போனின் ஹார்டுவேர் அம்சங்கள் பெரிய அளவில் இருந்தாலும் இது கவனிக்கப்படாத போன் ஆக உள்ளது.

யூலிபோன் பியூட்சர்:

யூலிபோன் பியூட்சர்:

ஆப்பிள் ஐபோன் போலவே அதே அம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட யூலிபோன் பியூட்சர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் ஆப்பிளில் இல்லாத பெஸல் லெஸ் டிஸ்ப்ளே இதில் இருந்ததால் கூடுதலாக வாடிக்கையாளர்களால் கவனிக்கப்பட்டது. ஹெலியோ P10 பிராஸசர் கொண்ட இந்த போனில் 4 GB ரே மற்றும் 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது

லெனோவா ஜூக் எட்ஜ்:

லெனோவா ஜூக் எட்ஜ்:

லெனோவா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்களில் ஒன்றுதான் ஜூக் எட்ஜ் மாடல். 86.4% பெஸல் லெஸ் டிஸ்ப்ளே அமைப்பு கொண்ட இந்த போன், சியாமி மி மிக்ஸ் போனுக்கு சரியான போட்டி தேர்வாக இருந்து வருகிறது. ஸ்னாப்டிராகன் 821 சிப்செட், 6 GB ரேம் மறும் 128 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் அமைப்பை கொண்டது இந்த போன் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
The year 2016 will be marked as the origin of bezel-less screen smartphones. Here are the phones that got launched in 2016 with an insane screen-to-body ratiio.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்