Home
Mobile

புதிய ரிலையன்ஸ் Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா?

By Siva

இந்திய தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி என்றால் அது மிகையில்லை.

புதிய ரிலையன்ஸ் Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா?

இண்டர்நெட் டேட்டா விலையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அவருடைய ரிலையன்ஸ் ஜியோ திட்டம். கடந்த சில நாட்களாக இந்தியாவின் எந்த பகுதியிலும் ஜியோ, ஜியோ என்ற மாய மந்திரம்தான் ஒலித்தது.

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா திட்டங்கள் : முழுத் தகவல்கள்!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் உள்பட பல முன்னணி நிறுவனங்களின் பங்குகள் உள்பட தொழிலை ஒரே ஒரு அறிவிப்பு சாய்த்தது என்றால் அது ஜியோதான். ரிலையன்ஸ் ஷோரூம்களில் ஜியோ சிம்கள் வாங்க ஆயிரக்கணக்கில் வரிசையில் நின்ற வாடிக்கையாளர்களே இதை உறுதிப்படுத்தினர்.

புதிய ரிலையன்ஸ் Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா?

இதேபோல் ரிலையன்ஸ் ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் வகையில் இந்நிறுவனம் Lyf F சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ரூ.2,999 முதல் அறிமுகம் செய்துள்ளது. சலுகை விலையில் வழங்கப்படும் இந்த Lyf F சீரியல் ஸ்மார்ட்போன்கள் சீன மற்றும் இந்திய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கு ஈடாக இருக்குமா? என்பதை தற்போது பார்ப்போம். இந்த Lyf F போன்கள் ஜியோ சிம்முக்கு மட்டும் பயன்படுமா? அல்லது அனைத்து சிம்களுக்கும் பொருந்துமா? என்பதையும் பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய ரிலையன்ஸ் Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா?

முதலில் Lyf F போன்களில் விலையை பார்ப்போமா?

முதலில் இந்த பட்டியலில் நாம் Lyf Earth 2 மொபைல் போனை தவிர மற்றவற்றை பார்ப்போம். ஏனெனில் இந்த மாடலின் விலை ரூ.19,999 என்ற காஸ்ட்லியான விலை என்பதால்தான்.

புதிய ரிலையன்ஸ் Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா?

Lyf F1 ஸ்மார்ட்போன்களின் ஹார்டுவேர் மற்றும் சில அம்சங்களை பார்ப்போம்

நானோ மற்றும் மைக்ரோ என டூயல் சிம்களை கொண்ட இந்த Lyf F1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0.1 வெர்ஷனில் அமைந்துள்ளது. மேலும் 5.5 இன்ச் டிஸ்ப்ளேவில் வீடியோ, கேம்ஸ் மற்றும் டெக்ஸ் ஆகியவை செளகரியமாக பயன்படுத்தும் வகையில் உள்ளது.

ரூ.5/-ல் ரூ.50/-க்கான ஐடியா டாக்டைம் பெறுவது எப்படி..?

மேலும் Lyf F1 ஸ்மார்ட்போன் 64 பிட் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 SoC பிராஸசருடன் 3ஜிபி ரேம் கொண்டது ஆகும்

புதிய ரிலையன்ஸ் Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா?

மேலும் இந்த மாடலில் 16 எம்பி பின்கேமிரா மற்றும் 8 எம்பி செல்வி கேமிராவும் உள்ளது. செல்பி கேமிராவில் ஆட்டோபோகஸ் உள்ளது இதன் சிறப்பு ஆகும்.

புதிய ரிலையன்ஸ் Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா?

32 ஜிபி இன்னர் ஸ்டோரேஜ் உடன் 128 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு வரை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் 3200mAH பேட்டரி இதில் உள்ளதால் சார்ஜ் குறித்து கவலைப்பட வேண்டாம். 4ஜி, புளூடூத், வைபை, ஜிபிஎஸ், 3.5mm ஆடியோ ஜேக் ஆகியவை இதில் உள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

புதிய ரிலையன்ஸ் Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்கிவிட்டீர்களா?

மேலும் ரூ.3000 மதிப்புள்ள புளூடூத் ஸ்பீக்கரை இலவசமான இந்த போனுடன் கொடுப்பதோடு சிட்டி வங்கியின் கார்டு உள்ளவர்களுக்கு 10% மணிபேக் சலுகையும் உள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.15000 கிப்ட் வவுச்சரும் கிடைக்கும்

மொத்தத்தில் இந்த விலையில் மிக வசதியான, 4ஜி சப்போர்ட் செய்யும், ஜியோ சிம் போடும் வகையில் அமைந்துள்ள இந்த போன் பயனாளிகளுக்கு கண்டிப்பாக பலன் தரக்கூடியதே. Lyf F1 ஸ்மார்ட்போன் வாங்குவது நாம் கொடுக்கும் பணத்திற்கு கண்டிப்பாக மதிப்பு உடையதே என்பதுதான் நமது முடிவு

Best Mobiles in India

English summary
Reliance Lyf F1 features a 5.5-inch 1080p display, has 3GB of RAM and has a 16MP rear camera.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X