சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு அதிரடி விலைக்குறைப்பு.!
தற்போது அதிரடியாக ரூ.5,000/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் இப்போது ரூ.31,900/-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.36,900/- என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதிரடியாக ரூ.5,000/- விலைக்குறைப்பு நிகழ்த்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் இப்போது ரூ.31,900/-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற பல்வேறு ஈ-காமர்ஸ் போர்ட்டல்களிலும் மற்றும் சில்லறை சேனல்களிலும் இக்கருவி வாங்குவதற்கு கிடைக்கும். தங்கம் மற்றும் கருப்பு நிற மாறுபாடுகளில் இந்த வருகிறது.
கோட்நேம் எம்டிஇ2 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த பணியில் சியோமி.!

இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில் இரட்டை சிம் (நானோ + நானோ) 4ஜி ஆதரவு கொண்டுள்ள கேலக்ஸி சி9 ப்ரோ கருவியானது பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது மற்றும் ஒரு 6 அங்குல முழு எச்டி (1080x1920) அமோஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 1.95 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஒரு ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 653 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
நோக்கியா 9 : சான்றிதழ் தளத்தில் என்னென்ன அம்சங்களை கடந்துள்ளது என்று தெரியுமா.?
கேமிரா துறையை பொறுத்தமட்டில் கேலக்ஸி சி9 ப்ரோ முன்பக்கம் மற்றும் பின்பக்கம் இரண்டிலும் ஒரு 16 மெகாபிக்சல் கேமிரா கொண்டுள்ளது. பின்புற 16-மெகாபிக்சல் கேமரா எப்/1.9 அப்பெர்ஷர் மற்றும் ஒரு இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்டு வருகிறது. செல்பீ கேமிரா அதே அப்பெர்ஷர் மற்றும் ப்ளாஷ் தொகுதி கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு வசதி (256ஜிபி வரை) கொண்ட 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு கொண்டுள்ளது. உடன் கேலக்ஸி சி9 ப்ரோ அதன் ஹாம் பட்டனில் ஏற்றப்பட்ட ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் ஆதரவு கொண்ட ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி உள்ளடக்கியுள்ளது.
ஒன்ப்ளஸ் 5 உள்ளே, சாம்சங் எஸ்8 மற்றும் ஐபோன் 7 வெளியே.!
கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் 4ஜி, எல்டிஇ,ப்ளூடூத் வி4.2, வைஃபை, ஜிபிஎஸ், க்ளோனாஸ், பெய்டோ, என்எப்சி, யுஎஸ்பி டைப் சி, ஆகியவைகளை கொண்டுள்ளது மற்றும் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் அளவீடுகளில் 162.9x80.7x6.9எம்எம், 189 கிராம் எடையுடையது.


Click it and Unblock the Notifications