நோக்கியா 9 : சான்றிதழ் தளத்தில் என்னென்ன அம்சங்களை கடந்துள்ளது என்று தெரியுமா.?

நோக்கியா 9 ஆனது மாதிரி எண் டிஎ-1004 என்ற பெயரின்கீழ் ப்ளூடூத் சான்றிதழை கடந்துள்ளது. இதே மாதிரியானது முன்னர் ஈ.ஏ. யூனியன் சான்றிதழை கடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

|

ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் விலை அடைப்புக்குறிக்குள் நிர்ணயம் பெறும் என்றும் நம்பப்படுகிறது.

அவ்வாறாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாம் இருக்கும் நிலையில், நோக்கியா 9 சாதகமானது வெளியாகும் நாளை நாம் நெருங்கி கொண்டே வருகிறோம். அதனை நமக்கு அனுதினமும் நினைவூட்டும் வகையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நோக்கியா 9 சார்ந்த லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

நோக்கியா 9 : சான்றிதழ் தளத்தில் என்னென்ன அம்சங்களை கடந்துள்ளது.?

அப்படியாக எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி மற்றும் 4ஜிபி ரேம் கொண்டு வெளியாகும் என்று தகவல் பென்ஞ்தளத்தில் தளம் வழியாக கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி இப்பொழுது நோக்கியா 9 மாறுபாடு ப்ளூடூத் சான்றிதழையும் பெற்றுள்ளது என்பதையும் இந்த லீக்ஸ் தகவலில் இருந்து அறிய முடிகிறது.

நோக்கியா 9 ஆனது மாதிரி எண் டிஎ-1004 என்ற பெயரின்கீழ் ப்ளூடூத் சான்றிதழை கடந்துள்ளது. இதே மாதிரியானது முன்னர் ஈ.ஏ. யூனியன் சான்றிதழை கடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்பொருள் அம்சங்கள் சார்ந்து வெளியான தகவலின் கீழ் இக்கருவி சக்திவாய்ந்த க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் கொண்டு வெளியாகுமென்று பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், ப்ளூடூத் 4.2 தரநிலையை ஆதரிப்பதாக வெளியான அறிக்கை பட்டியலிடுகிறது.

நோக்கியா 9 : சான்றிதழ் தளத்தில் என்னென்ன அம்சங்களை கடந்துள்ளது.?

முன்னர் வெளியான நோக்கியா 9 தகவலில் இதே போன்ற அம்சங்களை காண முடிந்தது. ஒரு சில நாட்களுக்கு முன், நோக்கியா 9 ஆனது டி-1052 என்ற மாதிரி எண்ணின் கீழ் 4ஜி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி உடன் தரநிலை தரவுத்தளத்தில் காணப்பட்டது.

ஒற்றை சிம் மற்றும் இரட்டை சிம் வகைகளில் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 9 வகைகளும் - டிஏ-1004 மற்றும் டிஏ-1012 ஈ.ஏ. யூனியன் சான்றிதழ் தளத்தில் காணப்பட்டன. வரவிருக்கும் இந்த இரண்டு மாதிரிகளில் ஒன்று முதன்மை ஸ்மார்ட்போன் என்றும் அது ஒற்றை சிம் மாறுபாடு என்றும் மற்றொன்று ஒரு இரட்டை சிம் முறையில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Nokia 9 clears Bluetooth certification with 4GB RAM and Snapdragon 835 SoC. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X