Home
Mobile

அறிமுகம் : 6ஜிபி ரேம், டூயல் ரியர் கேம் உடன் அட்டகாசமான ஹானர் 9.!

இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு வண்ணங்களில் - ப்ளூ, ஆம்பர் கோல்ட், சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் - வருகிறது.

By Muthuraj

ஹூவாய் நிறுவனத்தின் உப-பிராண்ட் ஆன ஹானர் நிறுவனம் சீனாவில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 9 ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.21,780/- என்ற விலைக்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் நினைவக மாறுபாடு தோராயமாக ரூ.25,570/- என்ற விலைக்கும், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு மாறுபாடு சுமார் ரூ.28,419/- என்ற விலைக்கும் சந்தையை அடையலாம்.

அறிமுகம் : 6ஜிபி ரேம், டூயல் ரியர் கேம் உடன் அட்டகாசமான ஹானர் 9.!

ஜிங்டாங், லின்க்ஸ் மற்றும் வால் ஆகியவற்றிலிருந்து ஜூன் 16 அன்று விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் நான்கு வண்ணங்களில் - ப்ளூ, ஆம்பர் கோல்ட், சாம்பல் மற்றும் கருப்பு நிறங்களில் - வருகிறது.

ரேம்

ரேம்

ஹானர் 9 அம்சங்களை பொறுத்தமட்டில் 5.15 அங்குல முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) 2.5 டி வளைந்த கண்ணாடி டிஸ்பிளே கொண்டு வருகிறது. 2.4ஜிக ஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் செயலி மூலம் இயங்கும் இந்த தொலைபேசி மாலி ஜி71 எம்பி8 ஜிபியூ உடனான 4ஜிபி / 6ஜிபி ரேம் ஆதரவு கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

தவிர, 64ஜிபி / 128ஜிபி உள் சேமிப்பு ஆதரவும், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான இஎம்யூஐ 5. இயங்குதளத்தின் கீழ் இயங்குகிறது மற்றும் 3200எம்ஏஎச் பேட்டரித்திறனுடன் பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

ஹானர் 9 ஸ்மார்ட்போன் ஆனது இரட்டை பின்புற கேமரா கொண்டுள்ளது. அதாவது 20 மெகாபிக்சல் மற்றும் 12 மெகாபிக்சல் கொண்டுள்ளது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

இந்த கேமிராக்கள் ஆட்டோஃபோகஸ், ஜியோ-டேக்கிங், டச் போகஸ், பேஸ் டிடெக்ஷன், எச்டிஆர், பனோரமா மற்றும் ஒரு இரட்டை டோன் எல்ஈடி ப்ளாஷ் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் ரியர் கேமராவானது எப் / 2.2 துளை மற்றும் 4கே வீடியோ பதிவு ஆதரவும் கொண்டுள்ளது. முன்பக்கம் எப்/2.0 துளை கொண்ட ஒரு 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

கைரேகை ஸ்கேனருடன்

கைரேகை ஸ்கேனருடன்

இதர அனைத்து புதிய சாதனங்களைப் போலவே, ஹானர் 9 ஒரு கைரேகை ஸ்கேனருடன் வருகிறது, இது முகப்புப் பொத்தானுடன் பதிக்கப்பட்ட முன் பலகத்தில் உள்ளது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இக்கருவியின் இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் யூஎஸ்பி டைப்-சி போர்ட், அகச்சிவப்பு சென்சார், ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக், என்எஃப்சி, ஹைபிரிட் டூயல் சிம் ட்ரே, 4ஜி எல்டிஇ, வோல்ட், வைஃபை ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. மேலும் அளவீட்டில் 147.3 x 70.9 x 7.45 மிமீ மற்றும் 155 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Huawei Honor 9 with 6GB RAM, dual rear camera setup launched. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X