அறிமுகம் : ரூ.7,999/-க்கு ரிலையன்ஸ் லைஃப் வாட்டர் 7எஸ்.!

புதுவித டெக்னாலஜியில் ரூ.7,999க்கு ரிலையன்ஸ் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட்போன் LYF வாட்டர் 7S

By Siva
|

ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போன் Lyf F1 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதற்கு முதல் காரணமாக அதன் டிஜிட்டல் லுக் என்று கூறினால் அது மிகையாகாது. இந்நிலையில் இதே வேகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் இன்னொரு மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

அறிமுகம் : ரூ.7,999/-க்கு ரிலையன்ஸ் லைஃப் வாட்டர் 7எஸ்.!

முந்தைய மாடலை விட விலை குறைவாகவும், அதே நேரத்தில் புதுவித டெக்னாலஜியிலும் வெளிவரவுள்ள இந்த போனின் மாடல் LYF வாட்டர் 7S என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மாடல் LYF வாட்டர் 7S ஸ்மார்ட்போனின் விலை வெறும் ரூ.7,499 என்பது அனைவருக்கும் அதிசயிக்க வைக்கும் செய்தி ஆகும். கருப்பு, கோல்ட் மற்றும் வெள்ளை என முன்று நிற வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ புத்தாண்டு சலுகையும் போனசாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி நடந்தால் என்னென்ன லாபம்.?

LYF வாட்டர் 7S ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் HD டிஸ்ப்ளேவுடன்1.3 GHz ஆக்டோகோர் MT6753 பிராசசர் உள்ளது. மேலும் 3GB ரேம் மற்றும் கிராபிக்ஸ் பிராஸசரும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 6.0 அம்சத்துடன் 16 GB இண்டர்லன் ஸ்டோரேஜ் உள்ளது. அதுபோக 64 GB எஸ்டி கார்டு போடும் வசதியும் உள்ளது. மேலும் ஒரு ஆச்சரியத்தக்க அம்சமான பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

வோடபோன் ரெட் பிளான் : அன்லிமிடெட் வாய்ஸ், 3ஜிபி தரவு, என்ன விலை.?

அதுமட்டுமின்றி இந்த LYF வாட்டர் 7S ஸ்மார்ட்போனில் 2800mAh லித்தியம் பாலிமர் பேட்டரி உள்ளது. இதனால் இந்த போனில் தொடர்ந்து 6 மணி நேரம் பேசிக்கொண்டே இருக்கலாம். 4G வசதியுடன் உள்ள இந்த LYF வாட்டர் 7S ஸ்மார்ட்போனின் கேமிரா 13 MP என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பி கேமிரா 5MP ஆகும். கேமிராவில் தற்போதுள்ள அனைத்து டெக்னாலஜியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வாய்ஸ் கேப்ட்சர், HDR, ஸ்லோ மோஷன் வீடியோ, டைம் லேப்ஸ் வீடியோ, ஆகிய அம்சங்கள் இந்த போனின் கேமிராக்களில் உள்ளது.

மேலும் டூயல் சிம், வைபை, புளுடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவை இந்த LYF வாட்டர் 7S ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்புகள் ஆகும். இந்த போனின் எடை 141 கிராம் மட்டுமே

தற்போது அனைத்து ரிலையன்ஸ் ஷோரூம்களில் இந்த போன் கிடைப்பதாகவும், வாடிக்கையாளர் மிகுந்த ஆர்வத்துடன் இந்த LYF வாட்டர் 7S ஸ்மார்ட்போனை வாங்கி செல்வதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance's Lyf Water 7S to be launched at Rs. 7,499.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X