Home
News

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி நடந்தால் என்னென்ன லாபம்.?

இந்த செய்தி ஆப்பிள் ரசிகர்களின் கைகளில் கரும்புகளை அள்ளி கொடுத்தது போல இருக்கும்.!

By Muthuraj

இந்த ஆண்டின் முற்பகுதியில் டிம் குக் இந்தியாவிற்கு வருகை தந்தபோது இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் பிற கேஜெட்டுகளின் உற்பத்தி நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற புரளிகள் கிளம்பின. அந்த புரளிகள் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது என்றாலும் கூட இப்போது அவைகள் மீண்டும் களமிறங்க தொடங்கியுள்ளது.

இப்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் பொருட்களை உற்பத்தி செய்ய தீவிரமாக பரிசீலிக்கும் திட்டங்களை கையாள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக பெங்களூருவில்.!

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் சொந்த கடைகள் அமைக்க பெரிய அளவிலான அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில், சாம்சங் மற்றும் பிற ஆப்பிள் போட்டியாளர்கள் ஏற்கனவே தங்களின் உற்பத்தி ஆலைகளை நாட்டில் அமைத்துள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் அதன் ஐபோன் கருவிகளுக்கான உற்பத்தியை ஆரம்பித்தால் என்னென்ன லாபம் மற்றும் என்னென்ன நடக்கும்.?

மலிவான ஒரு கருவியாகும்

மலிவான ஒரு கருவியாகும்

ஐபோன்களின் அளவுகடந்த விலைக்கு முக்கிய காரணமாக, அவைகள் அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு மற்றும் சீனாவில் தயாரிக்கப்படும் கருவிகளாக திகழ்வதால் தான், இறக்குமதி வரிகள் மற்றும் இதர வரிகள் என அதன் விலை அதிகபட்ச ஸ்மார்ட்போன் கருவியின் விலையாக உள்ளது. ஒருவேளை ஐபோன்கள் இந்தியா செய்யப்படுகின்றன என்றால், அதன் உலக சுற்றுப்பயணம் (வரிகள்) கழித்தல் போக ஐபோன்கள் இந்தியாவில் நல்லதொரு மலிவான விலை கருவியாக மாறும்.

கிடைக்கக்கூடியத்தன்மை

கிடைக்கக்கூடியத்தன்மை

ஐபோன்கள் ஒரு குறிப்பிட்ட விநியோகஸ்தர்கள் மூலம் எண்ணிக்கையிலான அலகுகள் மட்டுமே வாங்கப்பட்டு மற்றும் நாட்டில் விற்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆப்லைன் மற்றும் ஆன்லைன் விநியோகஸ்தர்கள் ஆகிய இரண்டுமே உண்டு என்றாலும் கூட சில நேரங்களில் ஐபோன்கள் கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக ஆன்லைன் விற்பனையாளர்கள் மூலம் சர்வீஸ் செய்யப்பட மாட்டாது என்ற நிலையில் மறுபக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் கிடையாது என்பதால் பழுது மற்றும் மாற்று அல்லது கூறுகள் கிடைக்காமல் போவது போன்ற பல சிக்கல்கள் ஆப்பிள் கருவிகளில் உள்ளன. ஒருவேளை இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டால் இந்த அணைத்து சிக்கல்களும் எளிமையாக தீரும்.

போட்டிபோட வேண்டாம்

போட்டிபோட வேண்டாம்

பொதுவாக, சந்தையில் அறிமுக தினத்தன்று ஆப்பிள் ஸ்டோர்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் நின்று கருவிகளை வாங்குவது வழக்கமான ஒரு விடயமாகும். ஆப்பிள் நிறுவனம் நாட்டில் அதன் உற்பத்தியை தொடங்குகிறது என்றால், அந்த நிறுவனம் தனது சொந்த கடைகள் இங்கு அமைக்க வேண்டும். அதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு விநியோகஸ்தரக மையங்கள் வெளியே வாடிக்கையாளர்கள் வரிசையில் நில்லாமல் நேரடியாக கடைகளில் இருந்து ஐபோன்களை வாங்கலாம்.

ஷிப்பிங் நேரம் கிடையாது

ஷிப்பிங் நேரம் கிடையாது

ஆப்பிள் ஒரு புதிய தயாரிப்பின் அறிவிப்பு வெளியிட்ட பின் நமது காத்திருப்பு தொடங்குகிறது. காத்திருப்பு என்றால் புதிய கருவி ஆப்பிள் ஸ்டோர்களை அடைய வேண்டும் பின்னர் மற்ற நாடுகளுக்கு ஷிப்பிங் செய்யப்பட வேண்டும் என்று அர்த்தம். ஆப்பிள் நிறுவனம் அதன் கருவிகள் சார்ந்த ஷிப்பிங் பணியை நிகழ்த்த உலக நாடுகளை மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளது அதில் இந்தியா மூன்றாவது மண்டலமாகும். இந்தியாவில் ஐபோன் விநியோக மற்றும் வெளியீட்டு காலவரிசையல் முன்னேற்றம் இருக்கிறது என்றாலும் கூட அது இன்னும் திருப்திகரமானதாக இல்லை. ஒருவேளை ஆப்பிள் இந்தியாவில் அதன் பொருட்களின் உற்பத்தியை தொடங்குகிறது என்றால், நாம் ஷிப்பிங் நடக்கும் காலம் வரை காத்திருக்க அவசியம் இருக்காது.

சர்வதேச சந்தை காலி

சர்வதேச சந்தை காலி

நாட்டில் பெரும்பாலானோர்கள் ஐபோன்களை இரண்டு காரணங்களுக்காக சர்வதேச சந்தைகளில் இருந்து வாங்குகின்றர். ஒன்று மலிவான விலை மற்றும் இரண்டாவது கருவிகள் விரைவில் ஷிப்பிங் செய்யப்படும் என்பதால் தான் வாங்கப்படும் அலகுகளுக்கு எந்த விதமான உத்தரவாதம் இல்லை என்றாலும் கூட மக்கள் சர்வதேச சந்தைகளில் இருந்து ஐபோன்களை வாங்க விரும்புகின்றனர். ஒருவேளை ஐபோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் சர்வதேச கொள்முதல் நிச்சயமாக கீழே இறங்கும், மக்கள் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற ஐபோன்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பர்.

ஆப்பிளுக்கு லாபம்

ஆப்பிளுக்கு லாபம்

இந்தியாவில் தயாரிப்பு மேற்கொள்ளவதின் மூலம் வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனமும் சிறந்த இலாபங்களை அனுபவிக்கும். அதாவது இறக்குமதி வரிகள் மற்றும் இதர வரிகள் நீக்கப்படும், ஆப்பிள் கப்பல் செலவுகளில் ஒரு கணிசமான அளவு சேமிக்க முடியும். விலை குறைக்கப்பட்டாலும் இந்தியாவில் கருவிகள் செய்யப்படுகின்றன என்பதால் ஐபோன்களின் வருவாயில் கணிசமான உயர்வு இருக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

கேலக்ஸி நோட் 7 வாங்க காசு இல்லையா.? பரவாயில்ல மச்சி.!!

More from GizBot

Best Mobiles in India

English summary
6 Things That will Happen if Apple Starts Manufacturing iPhones in India. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X