Home
Mobile

OnePlus, Samsung, Xiaomi வரிசையில் Oppo.. 2 புதிய 5G போன்களின் அறிமுகம் உறுதி.. என்னென்ன மாடல்கள்?

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு நெருங்கினாலும் நெருங்கியது.. "அடேய் இவ்ளோ நாள் அமைதியா இருந்தது இதுக்கு தானா!" என்பது போல.. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மொபைல் போன் நிறுவனமும் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய அறிமுகத்தை அதிகாரபூர்வமாக அறிவித்த வண்ணம் உள்ளன.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்வை ஜனவரி 7 ஆம் தேதியன்று நடத்தவுள்ளது. சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்25 சீரிஸை ஜனவரி இறுதிக்குள் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது; சுவாரசியமாக இம்முறை எஸ்25 சீரிஸில் 'ஸ்லிம்' என்கிற 4வது மாடல் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2 புதிய OPPO 5G போன்களின் அறிமுகம் உறுதி.. என்னென்ன மாடல்கள்?

சீன நிறுவனமான ஷாவ்மீ, அதன் 15 அல்ட்ரா உட்பட பல புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் மற்றொரு சீன நிறுவனமான ஒப்போவும் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யபோவதை உறுதிப்படுத்தியுள்ளது.
அது கடந்த நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ ரெனோ 13 5ஜி சீரிஸ் (Oppo Reno 13 5G Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும்

இந்த சீரிஸில் ரெனோ 13 மற்றும் ரெனோ 13 ப்ரோ என மொத்தம் 2 மாடல்கள் உள்ளன. தற்போது இவ்விரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவிற்கு வருவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்த டீசரில் ஒப்போ ரெனோ 13 சீரீஸின் வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்கள் வெளிப்படுத்தபட்டுள்ளது. மேலும் அறிமுகத்திற்கு பிறகு, இந்த ஸ்மார்ட்போன்கள் ஒப்போ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும் என்கிற தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு ஸ்மார்ட்போனும், ஒவ்வொன்றும் இரண்டு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகும். பேஸிக் வேரியண்ட் ஆனது ஐவரி ஒயிட் கலரில் மற்றும் இந்தியாவிற்கான பிரத்யேக லுமினஸ் ப்ளூ கலரில் அறிமுகமாகும். மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது கிராஃபைட் கிரே மற்றும் மிஸ்ட் லாவெண்டர் கலர்களில் அறிமுகமாகும்.

வடிவமைப்பை பொறுத்தவரை, ஒப்போ ரெனோ 13 ஸ்மார்ட்போனின் ஐவரி ஒயிட் எடிஷன 7.24 மிமீ அளவிலான ஸ்லிம் பாடியை கொண்டிருக்கும், அதே நேரத்தில் லுமினஸ் ப்ளூ எடிஷன் ஆனது 7.29 மிமீ என்கிற அளவை கொண்டிருக்கும். ஆனால் இரண்டு வகைகளுமே 181 கிராம் எடையுள்ளதாக இருக்கும். மறுகையில் உள்ள ஒப்போ ரெனோ 13 ப்ரோவின் அனைத்து கலர் ஆப்ஷன்களுமே 7.55 மிமீ தடிமன் மற்றும் 195 கிராம் எடையை கொண்டிருக்கும்.

ரெனோ 13 சீரீஸின் 2 மாடல்களுமே "விண்வெளி தர அலுமினிய ஃப்ரேம்-ஐ" கொண்டிருக்கும். மேலும் இரண்டுமே ஒன்-பீஸ் ஸ்கல்ப்டு கிளாஸ் பேக் பேனல்கள், OLED டிஸ்பிளேக்கள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷனை கொண்டிருக்கும். பேஸிக் வேரியண்டில் 1.81 மிமீ மெல்லிய பெசல்கள் இருக்கும் மற்றும் இது 93.4 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோவை கொண்டிருக்கும். ப்ரோ வேரியண்டில் 1.62மிமீ பெசல்கள் இருக்கும் மற்றும் இது 93.8 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவை கொண்டிருக்கும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 13 சீரீஸின் 2 மாடல்களுமே மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட்களால் இயக்கப்படுகின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 15 (ColourOS 15) உடன் அனுப்பப்படுகின்றன. மேலும் 2 மாடல்களுமே தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி69 மதிப்பீட்டை பெற்றுள்ளன

ஒப்போ ரெனோ 13 மற்றும் ஒப்போ ரெனோ 13 ப்ரோஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன? இரண்டுமே 50 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்களைகொண்டிருந்தாலும் கூட, பேஸிக் ஒப்போ ரெனோ 13 மாடலில் 50 மெகாபிக்சல் டூயல் ரியாத் கேமரா யூனிட் உள்ளது. அதே நேரத்தில் ஒப்போ ரெனோ 13 ப்ரோ மாடலில் மூன்றாவதாக 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் உள்ளது.

மேலும் பேஸிக் வேரியண்ட் ஆனது 6.59-இன்ச் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5600mAh பேட்டரியை கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ப்ரோ வேரியண்ட் ஆனது சற்றே பெரிய 6.83-இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது மற்றும் கொஞ்சம் பெரிய 5,800எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 13 5G Series India Launch Soon Design Colours Revealed Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X